பாக்கியத்தம்மாவும், பேத்தி ரீமாவும் கோவிலில் ஸ்வாமி தரிசனம் முடிந்து வாசலில் வந்து உட்கார்ந்தார்கள்
.ரீமா கண்ணு நீ மேலே என்ன பண்ணப்போற்தா இருக்கே?
படிப்புதான் முடிச்சுட்டியே?
பாசத்துடன் பேத்தியைப்பார்த்து கேட்டாள் பாட்டிம்மா.
ஆமா பாட்டி எனக்கு ஜர்னலிஸ்டா ஆகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.
ஓ, அப்படியா உனக்கு எது விருப்பமோ அப்படியே செய். ஜர்னலிஸ்டுன்னா கண்ணையும் காதையும் நல்லா திறந்து வச்சுக்கணும் நாம பார்க்குற, கேட்குற விஷயங்களை நல்லா உள் வாங்கிகணும். எல்லாரும் ரசிக்கும் படியாக சுவாரசியமா எழுதத்தெரிஞ்சுக்கணும்மா.என்று பாட்டி அறிவுரை சொன்னாங்க.
ஆமா பாட்டிஅது எனக்கும் தெரியும் . நான் அதற்கு முயற்சி செய்யலாம்னு நினைக்கிறேன் என்றாள். ரீமா.
ஓ க்கே ஆல் த பெஸ்ட் என்று பாட்டி மனது நிறையா வாழ்த்தினாள். ரீமாவுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள் கேட்டு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
சரி பாட்டி முத்ல்ல உங்க கிட்டேந்தே விஷயங்கள் முதலில் தெரிந்து கொள்கிறேன்.சொல்லுங்க. நீங்க ஏன் கழுத்திலோ கையிலோ காதிலோ நகை ஏதுமே போட்டுக்கமாட்டீங்கறீங்க? நகை பிடிக்காதா உங்களுக்கு? என்றாள்.
எனக்கா நகை பிடிக்காது? ரொம்ப, ரொம்ப பிடிக்கும், உன் தாத்தாவும் என் ஆசையைப்புரிந்து கொண்டு ஆசை ஆசையா புதுசு புதுசா நகை கள் வாங்கித்தருவாங்க. கழுத்து நிறைய சங்கிலி, கை நிறைய வளையல்கள் விரல் களில் மோதிரங்கள் காதில் வைரக்கம்மல் என்று எல்லாம் போட்டுக்கொண்டிருந்தேன்மா. என்று பாட்டி சொல்லவும்,
அப்போ அதெல்லாம் இப்ப எங்க? என்ற பேத்தியிடம்
அது ஒரு பெரிய கதைமா என்றாள் பாட்டி.
ஓ ப்ளாஷ்பேக்கா. சொல்லு சொல்லு என்று ஆவலுடன் ரீமா கேட்கவும் பாட்டி பழைய நினைவுகளில் மூழ்கினாள்.
நீ பிறக்கும் முன்பு நடந்த நிகழ்ச்சிம்மா. உன் அம்மா பிரசவத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தா. உன் அப்பாவும் நானும் மட்டும்தானே வீட்டில். உன் அப்பா மத்திய அரசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். காலை 7.30-க்கு வீட்டைவிட்டு கிளம்பி போனா இரவு 7-மணிக்கு திரும்பி வருவான். அவனுக்கு காலை உணவு மதிய உணவு எல்லாம் ரெடி பண்ண நான் காலை 5 மணிக்கே எழுந்து டிபன் லஞ்ச் எல்லாம் செய்து கொடுப்பேன். தினசரியுமே காலேல 5.30-க்கு பால் பூத் போயி பால் வாங்கி வந்துடுவேன். உன் அப்பா கூட சொல்லுவான். நீ ஏம்மா பால் வாங்கப்போறே? நான் போயி வாங்கி வருவேனே என்று. அலுத்து சலித்து வரும் மகன் அடிச்சுப்போட்டாப்ல தூங்கும் போது எழுப்ப மன்சே வராது. அதுவும் இல்லாம எனக்கு நகை களுக்கு பிறகு மிகவும்பிடித்தவிஷயம் காப்பி.காலை ஃப்ரெஷ் பாலில் ஃப்ரெஷ் டிகாக்ஷன் கலந்து காப்பி குடிக்க ரொம்பவே பிடிக்கும். அதுவும் இல்லாம எனக்கு மார்னிங்க் வாக்கிங்க் போனது போலவும் இருக்குமில்லியா ? அதான் நானே போய் வந்துடுவேன். ரொம்ப தூரமெல்லாம் இல்லே. நடந்து போகும் தூரத்தில்தான் பூத் இருந்தது. முன்னேல்லாம் பால் பாட்டில்களில் வந்தது. பால் கார்ட், பாட்டில்கள் எடுத்துகொண்டு பூத் போயி வர அரைமணி நேரம் கூட ஆகாது.
நீ பிறந்த செய்தி வந்ததும் உன் அப்பா என்னிடம் அருமையா பேத்தி பொறந்திருக்கா. உன்கிட்டேந்து ஒரு பவுன் நகையைத்தா. குழந்தைக்கு இடுப்புக்கு அரஞாண், வளை, மோதிரம் பண்ணிண்டு குழந்தையை பாத்துட்டு வரலாம்னு சொன்னான். அப்பவும் கூட நான் என் நகையை கழட்டிக்
கொடுக்கலே. நீ குழந்தைக்கு புதுசாவே வாங்கிக்கோன்னு சொன்னேன்.
அப்படி ஒரு நாள் பால் வாங்கப்போகும் போது டயம் சரியா பாக்காம ரொம்ப சீக்கிரமே போயிட்டேன் போல இருக்கு. பௌர்ணமி நிலாவின் வெளிச்சம் ஊர் பூராவும் லைட்டு போட்டது போல இருந்தது.எப்பவுமே மெயின் ரோடு வழியா சுத்திகிட்டுதான் போவேன். அன்று என்னமோ தோணித்து, ஒரு முட்டுசந்து வழியா போயிட்டேன். கொஞ்ச தூரம்தான் போயிருப்பேன் பின்னாடிலேந்து யாரோ மண்டையில் ஏதோ கனமான பொருளால ஓங்கி அடிச்சது மட்டும்தான் நினைவில் இருக்கு. வேர எதுவுமே நினைவில் இல்லே.அப்படி அடிச்சவன் என் நகை ஒன்னு விடாம கழட்டிண்டு என்னையும் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் உருட்டி விட்டுட்டு போயிட்டான்.இது ஒன்னுமே எனக்குத்தெரியாம மயங்கிட்டேன்.
அச்சச்சோ, அப்புறம் என்னாச்சு பாட்டி, என்னமோ திரில்லிங்க் ஸ்டோரிகேக்குரா மாதிரி இருக்கு, சொல்லு, சொல்லு என்று பேத்தி அவசரப்படுத்தவும், இருடி சொல்லிகிட்டேதானே வரேன்.
(தொடரும்.)

| Tweet | |||||