ஒரு குடும்பததை சிறப்பாக வழி நடத்திச்செல்பவள் ஒரு பெண்தான்.
பிறந்தவீட்டில் பெற்றோருக்கு பெண்ணாக, புகுந்தவீட்டில் கணவனுக்கு
நல்ல மனைவியாக, பெரியவர்களை மதிக்கும் நற்பண்புகள் நிறைந்தவள்
பெண்.குடும்பததையும் நல்லவிதமாக கவனித்துக்கொண்டு, வெளிவேலை
களையும் கவனித்துக்கொண்டுபாலன்ஸ்டாக சமாளிக்கும் திறமை இயற்கை
யிலேயே ஒரு பெண்ணுக்கு அமைந்து விடுகிறது.இவ்வளவு திறமைகளை
தனக்குள்ளே வைத்திருக்கும் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வதில்
மட்டும் சிறிது கவனக்குறைவாக இருக்கிறார்கள்.காலை 5-மணிக்கு எழுந்து
காலை உணவு, மதிய உணவு, சிறியவர்களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணுவது
அலுவலகம் செல்பவர்களுக்கு காலை, மதிய உணவு வகைகள், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பார்த்துப்
பார்த்து அவசர அவசரமாக செய்துவிட்டு, அவசரமாக அலுவலகம் செல்வதி
லேயே கவனமாக இருப்பார்கள்.
அவர்களுக்கும் பசி இருக்கும் காலை அவசரத்தில் ஒரு வாய் அள்ளிப்போட்டுக்கொள்ளக்கூட நேரமில்லை என்று அவசரமாக அலுவலகம் கிளம்புவார்கள். அலுவலகத்திலும் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். என்ன அவசரமானாலும் காலை உணவைத்தவிர்க்கவே கூடாது.ரெண்டு ப்ரெட் ஸ்லைஸ்,இல்லேனா ரெண்டு இட்லி இதுபோல ஏதானும் சாப்பிட்டு கிளம்பினால் சோர்வு இல்லாமல் தெம்பாக இருக்கும்.
இவ்வளவு உழைப்புக்கு உடலளவிலும் மனதளவிலும் தெம்பாக இருந்தால் தானே முடியும். தங்களையும் கவனித்துக்கொள்ள சிறிது பழக்கப்படுத்திக்கொள்ள்வேண்டும்.சாப்பாட்டு விஷயத்தில் மட்டுமில்லாமல்
எல்லா விஷயங்களிலுமேதிட்டமிட்டுசெயல்படபழக்கப்படுத்திக்கொள்ளலாம்
எல்லாருக்குமே சொல்வது சுலபம்தான். அவரவர் நிலமையில் இருந்து பார்த்தாதானே தெரியும்னு சொல்வாங்க. கரெக்ட் தான்.
மறு நாளுக்கு தேவையான வற்றை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொண்டால் காலை நேர பர பரப்பிலிருந்து விடு படலாம்.அதாவது
காய் நறுக்கி வைப்பது, தேங்காய் துருவி ஃப்ரீசரில் வைப்பது, குழந்தைகளின் ட்ரெஸ்களை இரவே தயார் செய்து வைப்பது என்று சிறு, சிறு வேலைகளை இரவே செய்து வைத்துக்கொள்ளலாம்.அதுபோல தங்கள் உடல் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக்கொள்வது.மனதை எப்பவும் லேசாகவும் சந்தோஷ மாகவும் வைத்துக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளலாம். குளிர் காலங்களில் தோல் வறண்டு போகும். கொஞ்சமாக நல்லெண்ணையோ, தேங்காயெண்ணையோ ஒரு துளி தண்ணீர் சேர்த்து குழைத்து முகம் கழுத்துப்பகுதி கை கால் களில் தடவிக்கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும். வெயில் காலங்களில் பருத்தி உடையே சிறந்தது. லீவு நாட்களிலாவது அரை மணி நேரம் காலை நேர வாக்கிங்க் போய்வரலாம். ஆபீசிலும் உக்காந்த இடத்திலேயே வேலை செய்ய வேண்டி இருக்கும். கொஞ்சமாவது நடைப்பயிற்சி இருந்தால் நல்லது தானே? வீட்டிலும் வேலைகள் செய்யும் போது இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டே வேலைகள் செய்தால் சோர்வு தெரியாது.
நம்மை நாமதான் கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டில் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நாம நன்றாக இருக்க வேண்டும் இல்லியா? தனக்கு பிடித்தமான புத்தகங்கள் படிப்பது பிடித்த இசை கேட்பது என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். நம்ம கையில் தான் இருக்கிறது.எல்லாமே.சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் இல்லியா?

| Tweet | |||||