Friday, 4 January 2013

குழந்தை வளர்ப்பு.

பொதுவாக இன்று எல்லா வீடுகளிலுமே ஒன்று, அல்லது இரண்டு
குழந்தைகள் தான் இருக்கிறாங்க.பெற்றோர்களும் அந்தக்குழந்தை
களை வசதியாக சௌகரியமாக வளர்க்கவேண்டும் என்னும் அக்கரையில்
இருவருமே வேலைக்கு போயி சம்பாதிக்கிறார்கள்.இதில் தவறேதும் இல்லே.
விளையாடுவதற்கு அதிக விலையில் உள்ள பொம்மைகள், உடையிலும்
உசத்தி துணியில் எடுத்துக்கொடுக்கிறார்கள்.உசத்தி ஷூ, பெண்குழந்தை என்றால் தங்க வைர நகைகள் பூட்டி அழகு பார்க்க நினைக்கிறார்கள்.சில
வீடுகளில் குழந்தைகள் கேட்கும் முன்பே விளையாட்டுப்பொருட்களோ
வேறு எதுவுமோ வாங்கி குவிக்கிறார்கள்.3-வயதுக்குள்ளேயே ப்ளே ஸ்கூல்
 அதுவும் பிரபலமான ஸ்கூலில்தான் சேர்க்கணும் என்று நினைக்கிறார்கள்.
இதெல்லாமே  சரிதான்.பள்ளியில் சேர்க்கும் போதும் புகழ் பெற்ற பள்ளிகளில்
தான் சேர்க்க நினைக்கிறார்கள். ஃபீஸ் எவ்வளவு அதிகமானாலும் தயங்குவதே இல்லை.குழந்தைக்கு நல்ல படிப்பு கிடைக்கணும் என்று ஆசைப்
படுவதில் தவறேதும் இல்லை. நான் சொல்ல வருவது என்ன என்றால்

குழந்தைகளுக்கு வசதியையும் சௌகரியங்களையும் கொடுக்கணும் என்று
நினைக்கும் பெற்றோர் அந்தக்குழந்தை நல்ல பழக்கவழக்கங்களுடன் சிறந்த
குடிமகனாக வளறணும் என்றும் சிறிது முயற்சி செய்யணும்.3-வயதிலிருந்து
10- வயது வரை அந்தக்குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்போ பட்டுத்துணிகளின்,  அல்லது  தங்க நகைகளின் மதிப்பு பற்றியோ எந்த வித
அபிப்ராயமும் இருக்காது.விளையாட்டு பொம்மைகளும் கூட ஒருவாரம் விளையாடி மறு வாரம் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது பணம் விரயம் தானே?அப்போது பெற்றோர்தானே சிறிது கவனமாக இருந்து கொள்ளணும்?
குழந்தைப்பருவத்தில் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அம்மாவையே எதிர்
பார்ப்பாங்க . (நாமதான் குழந்தைகளை குழந்தைகளாகவே நடத்துவதில்லையே? ).சின்ன வயதில் புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்வதில் குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடையவர்களாகவே இருப்பார்கள். இதை பெற்றோர் நல்ல விதத்தில் பயன் படுத்திக்கோள்ளலாம்
எல்லா பள்ளிகளிலுமே சனி ஞாயிறு விடுமுறைதான். அந்த லீவு நாட்களில்
குழந்தைகளை சிறு, சிறு வேலைகளைச்செய்ய பயிற்றுவிக்கலாம்..

காலை எழும்போதே அவங்க, அவங்க படுக்கையை அவங்களே சுருட்டி வைக்க சொல்லலாம்.ப்ரெஷில் பேஸ்ட் எடுது தாங்களே பல் விளக்க சொல்லிக்கொடுக்கலாம்.மத்த நாட்களில் எல்லாவற்றுக்கும் அம்மா செய்வாங்கன்னு சும்மா இருக்கும் குழந்தைகள் தானே செய்து கொள்ளும்போது ஆர்வமுடன் செய்வார்கள்.தனியாக அவ்ர்களே அவர்கள்
உள்ளாடைகளை துவைத்து, குளித்து வரவும் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கலாம். முதலில் சிறிது முரண்டு பிடிப்பார்கள் தான். நாளாவட்டத்தில்
ஆர்வமுடன் தன் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் பழக்கம் கூடவே படிந்துவிடும்.சாப்பிட உக்காரும் போது அவங்க தட்டு, டம்ளரை அவங்களையே எடுத்து வச்சுக்கசொல்லி பழக்கலாம் சாப்பிட்டு முடிந்ததும் தட்டு டம்ளரை ஸிங்கில் கொண்டு போடச்சொல்லலாம்..கூடியமானவரை அவங்க வேலைகளை அவங்களே செய்து கொள்ளும்படி ஈசியா பழக்கிடலாம். இந்த வேலை ஆண்தான் செய்யனும், இந்த வேலை பெண்தான் செய்யணும் என்றெல்லாம்  பிரித்து பார்க்கவே வேண்டாம். எல்லா குழந்தைகளும் எல்லா வேலைகளும் தெரிந்து கொள்ள நாம் பழக்கலாம். இதுபோல இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதனால் சிறுவயதிலேயே பழக்கி விடுவதால் வளற், வளற எந்தவேலைக்கும்
யாரையும் எதிர் பார்க்காமல் அவர்களாகவே செய்து கொள்ளும் பழக்கம் தன்னால வந்துவிடும். இதனால் அந்தக்குழந்தைகளுக்கும் நல்லது, பெற்றோர்
களுக்கும் நல்லது.அதுபோல அதிக கட்டுப்பாடுகள் விதிக்காமல் கொஞ்சம் விட்டுபிடித்தும் அவர்கள் செயல்களை உற்சாகமும் ஊக்கமும் படுத்தலாம்.
பெரியவர்களைக்கண்டால் மறியாதையுடன் பழகசொல்லி சொல்லிக்கொடுக்கலாம்..எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலேன்னு பாட்டு கேட்டிருப்பீங்களே.பெற்றோர்களுக்கு பொறுமை மட்டும் இருந்தால் இதை கண்டிப்பாக சாதிக்கலாம். அவர்களின் வேலைப்பளுவில் எரிச்சலும் கோபமும் வரத்தான் செய்யும். குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறிது முயற்சி செய்துதான் ஆக்ணும் பொறுப்புள்ள பெற்றோர்.  சரி இறுதியக சின்ன ஜோக் ஒன்று சொல்லிவிட்டு
பதிவை  முடித்துக்கொள்கிறேன்.

ரெண்டு பசங்க 10- வயதிற்குள் இருக்கும். கம்ப்யூட்டர் முன்பு உக்காந்து கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தாங்க.ஒரு பையன் மற்றவனிடம் ஏய்
மௌஸுக்கும், ரேட்டுக்கும்(  RAT) என்னடா வித்தியாசம்னு கேக்குரான்.மற்றவனோ நீ என்னடா கிறுக்கனா? மௌஸ், ரேட் ரெண்டுக்குமே எலின்னுதானே அர்த்தம்
இதுல ஏதுடா வித்தியாசம்னு கேலியாக கேட்டான். இல்லடா ஒரு வித்தியாசம் இருக்கு. கொஞ்சம் யோசிச்சிப்பாருடான்னான்.அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சான். போடா எனக்கு ஒன்னும் தெரியல்லே, நீயே சொல்லிடுன்னான்.சரி (கம்ப்யூட்டர்)  மௌஸுக்கு (எலிக்கு) முன்பக்கம் வாலு, நிஜம் ரேட்டுக்கு(எலிக்கு) பின் பக்கம் வாலு இருக்கு. இது எப்படி இருக்குன்னு சொல்லவும் இருவரும் சேர்ந்து பெரிதாக சிரிக்க ஆரம்பித்தார்கள். நீங்களும் சிரிச்சீங்களா?

29 comments:

 1. பிள்ளைகளை வளர்பதிலுள்ள அக்கறை சரியே!உண்மையை எடுத்துரைதுள்ளீர்கள் கூடவே கொசுறாக விடுகதையும் அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நல்லதொரு பதிவு! இறுதியில் ஜோக் அருமை! நன்றி!

  ReplyDelete
 3. எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே ---

  குழந்தை வளர்ப்பு பற்றிய சிறப்பான சிந்தனைகள் .பாராட்டுக்கள்...

  ReplyDelete
 4. குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரை சிறப்பு. அவரவர் தேவைகளை அவர்களே செய்யுமாறு பழக்கிவிடுவது நல்லது தான். தன்னம்பிக்கை வளரும் நல்ல பகிர்வு. ஜோக் சொன்னதும் தான் கம்யூட்டர் மவுஸ பார்த்தேன் ஆமா முன்னாடி வாலு இருக்குங்க. ஹஹஹ

  ReplyDelete
 5. கவியாழி கண்ணதாசன் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 6. சுரேஷ் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 7. இராஜராஜேஸ்வரிம்மா வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 8. சசிகலா முதல் தடவையா வரீங்களா. வாங்க. ரசித்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 9. குழந்தைகளைப் பற்றி நானும் எழுதி உள்ளேன். படித்துப் பாருங்க.

  ReplyDelete

 10. வணக்கம்

  சின்ன குழந்தை சிறந்து வளா்ந்திடச்
  சொன்ன கருத்தோ சுவை!

  ReplyDelete
 11. ஜோதிஜி வருகைக்கு நன்றிங்க உங்க பக்கம் வந்து படிச்சுப்பார்க்கிறேங்க.

  ReplyDelete
 12. கவிஞர். கி. பாரதி தாசன் ஐயா வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 13. நல்ல கருத்துக்கள்...நல்ல கட்டுரை ...

  ReplyDelete
 14. உஷா ஸ்ரீ குமார் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.அடிக்கடி வாங்க.

  ReplyDelete
 15. குழந்தை வளர்ப்பு பற்றி மிக அழகாக கருத்துக்களை கூறியிருக்கீங்க பூந்தளிர்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. சிறப்பான பதிவு.. அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..

  ReplyDelete
 17. ராம்வி வாஙக வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 18. அன்பைத்தேடி வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 19. சொல்லும் விஷயமும் சொல்லிச் செல்லும் விதமும்
  மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. ரமணிசார் வருகை புரிந்த்தற்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. அட... பூந்தளிர் வலைத்தளம் ஆரம்பிச்சதை லேட்டா கவனிச்சிருக்கேன் நான். ஆனா உங்க எழுத்தைப் படிச்சு நிறைய சந்தோஷப்படற முதல் நபர் நானாத்தான் இருப்பேன். குழந்தை வளர்ப்பைப் பற்றி அக்கறையுடன் சொல்லிய கருத்துக்கள் அருமைங்க. அதிலயும் கடைசில அந்த எலி ஜோக்கை வெகுவாக ரசித்தேன். தொடர்ந்து கலக்க என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. கணேஷ் அண்ணா உங்களைத்தான் எதிர் பார்த்தேன் வந்துட்டீங்க. உங்க உற்சாமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றிங்க.புதுசா பதிவு எழுத வரவங்களுக்கு உங்களைபோல பெரியவங்களின் பின்னூட்டம்தான் பெரிய சந்தோஷம். வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க அடிக்கடி வந்து கருத்துக்கள் சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்க.உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. அனைத்துப் பதிவுகளுமே இயல்பாக அலட்டல் இல்லாமல்
  இருப்பது உங்கள் திறந்த நல்ல மனத்தைக் காட்டுகிறது.
  தொடர்ந்து கலக்குங்க. நல் வாழ்த்துக்கள் பொங்கலுக்கும் சேர்த்தே !

  ReplyDelete
 24. ஸ்ரவாணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.உங்க எல்லாருடைய உற்சாகமூட்டும் பின்னூட்டம் தான் என்னை நன்றாக எழுத வைக்கிறது. நன்றிங்க.

  ReplyDelete
 25. //கூடியமானவரை அவங்க வேலைகளை அவங்களே செய்து கொள்ளும்படி ஈசியா பழக்கிடலாம். இந்த வேலை ஆண்தான் செய்யனும், இந்த வேலை பெண்தான் செய்யணும் என்றெல்லாம் பிரித்து பார்க்கவே வேண்டாம். எல்லா குழந்தைகளும் எல்லா வேலைகளும் தெரிந்து கொள்ள நாம் பழக்கலாம்.//

  இதை சிறுவயதிலேயே சொல்லிக்கொடுத்து பழக்கி விடுவது தான் மிகவும் நல்லது. அதுபோலெல்லாம் செய்யாமல் இன்று எங்களைப்போல புலம்பி எந்தப்பயனும் இல்லை.

  //இதனால் சிறுவயதிலேயே பழக்கி விடுவதால் வளற், வளற எந்தவேலைக்கும் யாரையும் எதிர் பார்க்காமல் அவர்களாகவே செய்து கொள்ளும் பழக்கம் தன்னால வந்துவிடும்.//

  மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு என, பெற்றோர்களைப் பிரிந்து வெளியூர்களில் தனியாகத் தங்க நேரிடும் குழந்தைகளுக்கும், இது மிகவும் பயன் தரும்.

  //பெரியவர்களைக்கண்டால் மரியாதையுடன் பழகசொல்லி சொல்லிக்கொடுக்கலாம்..//

  ஆம், இது இன்றைய குழந்தைகளிடம் மிகவும் குறைவாகவே உள்ளது. நிச்சயமாக இதுபற்றி சொல்லித்தரத்தான் வேண்டும்.

  பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள. நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 26. ஆமா சார் குழந்தகளை பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது பெற்றோர்கள் கையில் தானே இருக்கிறது இல்லியா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 27. அன்புள்ள பூந்தளிர்,
  இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அறிமுகம் ஆகியிருக்கிறது. பாராட்டுக்கள்!

  http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_17.html

  நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமா ரஞ்சனிம்மா, நானும் போய்ப்பார்த்தேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

   Delete
  2. Child Care Tips in Tamil, Spoken Tamil, Tamil Sports, Tamil Short Stories. Find more Tamil Kids Category Section Visit : http://www.valaitamil.com/kids

   Delete