Monday, 21 January 2013

தங்கமே தங்கம். (3)

பேத்தியிடம் கதை சொல்லும் சுவாரசியத்தில் பாட்டி ஃப்ளாஷ் பேக்கில் சஞ்சரித்து அவளும் மகனும் நடந்து கொண்டது பேசிக்கொண்டது எல்லாவற்றையும் நம்ம கண்முன்னாடியும் காட்டணும் என்று- தான்  பேத்தியுடன் பேசுறோம் என்பதையே மறந்து நிஜம்மாகவே  அந்த நேரத்துக்கே  போயி  எல்லா சம்பவங்களையும் நினைத்துக் கொண்டிருந்தாள் .

போலீஸ் ஸ்டேஷனில் போயி இன்ஸ்பெக்டரிடம் விவரம் சொல்லி ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக்கொடுத்தார்கள்.

இன்ஸ்பெக்டர் பாக்கியத்தம்மாவிடம்    " இது எப்ப நடந்துச்சி?"   என்றார். 

"இன்னக்கு காலேல நடந்ததுங்க0"  என்றார் அம்மா.

" எவ்வளவு மணி இருக்கும் அப்ப ?"

" சரியா தெரியலியே. தினசரி 5.30-க்குத்தான் போவேன். இன்று எப்படியோ டயம் சரியா பாக்காம சீக்கிரமே போயிட்டேன்."

"சரி நீங்க ஏன் பால் வாங்க போரீங்க்? உங்க மகன் போகமாட்டாரோ’’ன்னு கேட்டார்.

" இல்லே சார் அவன் என்னை போக வேண்டாம்னுதான் சொன்னான். எனக்கு காலை வாக்கிங்க் போனது போல இருக்குமேன்னு நான் தான் போவேன்"

".சரி உங்களுக்கு யாரு மேலேயாவது சந்தேகம் இருக்கா? ஆளை அடையாளம் காட்டமுடியுமா?" என்றார்,

"என்ன சார் நீங்க/ அடிச்ச ஆளு யாருன்னே தெரியல்லே. பின்னாடிலேந்து அடிச்சிருக்கான். இதுல எப்படி அடையாளம்லாம் காட்டமுடியும். நாங்க யாரை சந்தேகப்பட முடியும்?  அக்கம்பக்கம் எல்லாருடனும் நல்ல அன்னியோனியமான பழக்கம்தான் எங்களுக்கு இருக்கு.  நாங்க போயி யாரை சந்தேகப்பட முடியும்?"

" ஓகே, உங்க பகுதியில் வேலையில்லாம யாரானும் ரௌடிபசங்க நடமாட்டம் இருக்குதா?"

"{ ஏன் சார் வேலை இல்லேன்னா அவன ரௌடியாகத்தான் இருப்பானா?"

"அப்படி இல்லே. இந்த திருட்டு,   நகைக்காகத்தான் நடந்திருக்குன்னு நல்லாவே தெரியுது. வரும்படி இல்லாதவன் சாப்பாட்டுக்கு திருட்டுத் தொழில்ல இறங்கி இருக்கலாமில்லே? சரி... எத்தனை பவுன்  போட்டுக்கிட்டிருந்தீங்க என்ன டிசைன் எத்தனை உருப்படி எல்லாம் தெளிவா பேப்பர்ல எழுதிக்கொடுங்க.எந்த ஆயுதத்தால அடிச்சான்னு தெரியுமா?"

" ஏன் சார் தூண்டி துருவி கேட்டு கிட்டே இருக்கீங்க. அம்மாவே வலியிலும் வேதனையிலும் நொந்து போயி இருக்காங்க. ஆளத்தெரியுமா ஆயுதத்த தெரியுமான்னு மடக்கி மடக்கி கேட்டுகிட்டே இருந்தா எப்படி. எங்களுக்கு தெரிந்தவரை எல்லாம் சொல்லிட்டோம். காவல் துறை மக்கள் சேவைக்குதானே இருக்கு. இதுபோல தர்மசங்கடப்படுத்துரீங்களே சார்"  என்று மகன் கெஞ்சாத குறையாக இன்ஸ்பெக்டரிடம் கேட்கவும்,

" சரி சரி நீங்க சரியான ஒத்துழைப்பு கொடுத்தால் தான் திருட்டுப்போன பொருட்களை எங்களால தேடி கண்டு பிடிக்க முடியும் இல்லே. இப்படி அலுத்துகிட்டா எப்படி? ரைட்டு... இங்க நாங்க 6 பேரு இருக்கோம் எல்லாருக்கும் டீயும் பன்னும் வாங்கி கொடுத்திட்டு நீங்க கிளம்புங்க" என்று அதிகாரமாகச்சொன்னார்.

 மகனுக்கோ இதைக்கேட்டதுமே மூக்கின் மேல கோவம் பொத்துகிட்டு வந்தது. "என்ன சார் நீங்க...  நாங்க எதுக்கு உங்களுகெல்லாம் டீயும் ப்ன்னும் வாங்கி தரணும்?" என்றான்.

"சார் இன்னிலேந்து நாங்க உங்களுக்காக்த்தானே, உங்க வேலையைத்தானே பார்க்கப்போறோம். அதுக்கு நன்றியா ஒரு டீயும் பன்னும் வாங்கி கொடுத்ததான் என்ன?"

" சார் நீங்க பண்ணுகிற வேலைக்குத்தானே கவர்மெண்டுல உங்களுக்கு சம்பளமே கொடுக்குறாங்க. அப்புறமா எதுக்கு சார் எங்களையும் கஷ்ட்டப்படுத்துரீங்கன்னு " கோவமாக கேட்ட மகனிடம் அம்மா, "போனாப்போறது விடு வயித்து பசி கேக்கறா. வாங்கி கொடுத்துட்டு போலாம்’’னு சொன்னா.

"போம்மா, நீ வேற, இதுதான் ஆரம்பம் இன்னும் எப்படில்லாம் டார்ச்சர் பண்ணுவாங்களோ தெரியல்லே’’ன்னு அலுத்துக் கொண்டே அவர்கள் கேட்டதை வாங்கி கொடுத்துவிட்டு தாயும் மகனும் வீடு வந்தார்கள்.

-இன்னும் வரும்...

12 comments:

 1. ஓ..தொடர்கதையா....இனி தொடரலாம்...

  ReplyDelete
 2. அருமையா போகுது பிளாஷ்பேக்.. தொடர்ந்து எழுதுங்க..

  ReplyDelete
 3. ம்ம்..அப்பறம்??

  ReplyDelete
 4. நான் சொல்லியிருந்த ஒருசில ஆலோசனைகளின்படி சிறிய சிறிய பத்திகளாகப் [Paragraphs] பிரித்து, ஆங்காங்கே இடைவெளியும் கொடுத்து, அவரவர்களின் வசனங்களுக்கு “ மேற்கோள் “ குறிகள் கொடுத்து வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு என் நன்றிகள். பாராட்டுக்கள்.

  >>>>>>

  ReplyDelete
 5. //"சரி நீங்க ஏன் பால் வாங்க போ றீ ங் க ?//

  ”காஃபி போட்டுக்குடிக்கத்தான்!”

  ”காலை எழுந்தவுடன் எழுச்சியாக எனக்குக் காஃபி வேண்டுமாக்கும்”

  என்று அந்த அம்மா அப்பாவித்தனமாகச் சொல்வது போல கூட காட்டியிருக்கலாம்! ;)

  >>>>>>

  ReplyDelete
 6. //இங்க நாங்க 6 பேரு இருக்கோம் எல்லாருக்கும் டீயும் பன்னும் வாங்கி கொடுத்திட்டு நீங்க கிளம்புங்க" என்று அதிகாரமாகச் சொன்னார்.//

  இந்த இடத்தில் தான் கதையின் சுவாரஸ்யமே மிகவும் யதார்த்தமாகத் துவங்க ஆரம்பித்துள்ளது. ;)))))

  >>>>>>

  ReplyDelete
 7. //"சார் இன்னிலேந்து நாங்க உங்களுக்காக்த்தானே, உங்க வேலையைத்தானே பார்க்கப்போறோம். அதுக்கு நன்றியா ஒரு டீயும் பன்னும் வாங்கி கொ டு த் தா த் தா ன் என்ன?"//

  ஆஹா, இனி காவல்துறை இதே காரியமாக இருக்கப்போவதால் நகை உடனடியாக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ;)

  டீ + பன் இல் ஆரம்பித்தது, பிறகு டிபன், காஃபி சாப்பாடு எனத் தொடர்ந்து, மிகப்பெரிய விருந்தில் கொண்டுபோய் விடப்போகிறது என்பது தெள்ளத்தெளிவாகி விட்டது.

  தொடர்ந்து எழுதுங்கள் ..... காத்திருக்கிறோம் ..... நாங்களும் ...

  விருந்து சாப்பிட [படிக்க]. ;)

  oooooo

  ReplyDelete
 8. சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது தொடர்ந்து வருகிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. புகார் கொடுத்துட்(டீ)(டா)ங்க.

  பாட்டி, சீக்கிரம் வந்து மீதிக் கதையைச் சொல்லுங்க.

  ReplyDelete
 10. கேட்டதும் கொடுக்க அவர்கள் என்ன சொந்தமா என்ன?

  ReplyDelete
 11. ம்ம்ம்ம்.... அப்புறம்...

  கேட்க/படிக்க காத்திருக்கிறேன்! :)

  ReplyDelete
 12. சுவாரஸ்யத்தின் அளவு கூடிக் கொண்டே செல்கிறது பூந்தளிர். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருப்பு!

  ReplyDelete