ஒரு குடும்பததை சிறப்பாக வழி நடத்திச்செல்பவள் ஒரு பெண்தான்.
பிறந்தவீட்டில் பெற்றோருக்கு பெண்ணாக, புகுந்தவீட்டில் கணவனுக்கு
நல்ல மனைவியாக, பெரியவர்களை மதிக்கும் நற்பண்புகள் நிறைந்தவள்
பெண்.குடும்பததையும் நல்லவிதமாக கவனித்துக்கொண்டு, வெளிவேலை
களையும் கவனித்துக்கொண்டுபாலன்ஸ்டாக சமாளிக்கும் திறமை இயற்கை
யிலேயே ஒரு பெண்ணுக்கு அமைந்து விடுகிறது.இவ்வளவு திறமைகளை
தனக்குள்ளே வைத்திருக்கும் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வதில்
மட்டும் சிறிது கவனக்குறைவாக இருக்கிறார்கள்.காலை 5-மணிக்கு எழுந்து
காலை உணவு, மதிய உணவு, சிறியவர்களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணுவது
அலுவலகம் செல்பவர்களுக்கு காலை, மதிய உணவு வகைகள், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பார்த்துப்
பார்த்து அவசர அவசரமாக செய்துவிட்டு, அவசரமாக அலுவலகம் செல்வதி
லேயே கவனமாக இருப்பார்கள்.
அவர்களுக்கும் பசி இருக்கும் காலை அவசரத்தில் ஒரு வாய் அள்ளிப்போட்டுக்கொள்ளக்கூட நேரமில்லை என்று அவசரமாக அலுவலகம் கிளம்புவார்கள். அலுவலகத்திலும் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். என்ன அவசரமானாலும் காலை உணவைத்தவிர்க்கவே கூடாது.ரெண்டு ப்ரெட் ஸ்லைஸ்,இல்லேனா ரெண்டு இட்லி இதுபோல ஏதானும் சாப்பிட்டு கிளம்பினால் சோர்வு இல்லாமல் தெம்பாக இருக்கும்.
இவ்வளவு உழைப்புக்கு உடலளவிலும் மனதளவிலும் தெம்பாக இருந்தால் தானே முடியும். தங்களையும் கவனித்துக்கொள்ள சிறிது பழக்கப்படுத்திக்கொள்ள்வேண்டும்.சாப்பாட்டு விஷயத்தில் மட்டுமில்லாமல்
எல்லா விஷயங்களிலுமேதிட்டமிட்டுசெயல்படபழக்கப்படுத்திக்கொள்ளலாம்
எல்லாருக்குமே சொல்வது சுலபம்தான். அவரவர் நிலமையில் இருந்து பார்த்தாதானே தெரியும்னு சொல்வாங்க. கரெக்ட் தான்.
மறு நாளுக்கு தேவையான வற்றை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொண்டால் காலை நேர பர பரப்பிலிருந்து விடு படலாம்.அதாவது
காய் நறுக்கி வைப்பது, தேங்காய் துருவி ஃப்ரீசரில் வைப்பது, குழந்தைகளின் ட்ரெஸ்களை இரவே தயார் செய்து வைப்பது என்று சிறு, சிறு வேலைகளை இரவே செய்து வைத்துக்கொள்ளலாம்.அதுபோல தங்கள் உடல் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக்கொள்வது.மனதை எப்பவும் லேசாகவும் சந்தோஷ மாகவும் வைத்துக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளலாம். குளிர் காலங்களில் தோல் வறண்டு போகும். கொஞ்சமாக நல்லெண்ணையோ, தேங்காயெண்ணையோ ஒரு துளி தண்ணீர் சேர்த்து குழைத்து முகம் கழுத்துப்பகுதி கை கால் களில் தடவிக்கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும். வெயில் காலங்களில் பருத்தி உடையே சிறந்தது. லீவு நாட்களிலாவது அரை மணி நேரம் காலை நேர வாக்கிங்க் போய்வரலாம். ஆபீசிலும் உக்காந்த இடத்திலேயே வேலை செய்ய வேண்டி இருக்கும். கொஞ்சமாவது நடைப்பயிற்சி இருந்தால் நல்லது தானே? வீட்டிலும் வேலைகள் செய்யும் போது இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டே வேலைகள் செய்தால் சோர்வு தெரியாது.
நம்மை நாமதான் கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டில் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நாம நன்றாக இருக்க வேண்டும் இல்லியா? தனக்கு பிடித்தமான புத்தகங்கள் படிப்பது பிடித்த இசை கேட்பது என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். நம்ம கையில் தான் இருக்கிறது.எல்லாமே.சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் இல்லியா?

Tweet | |||||
வீட்டில் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நாம நன்றாக இருக்க வேண்டும் இல்லியா?
ReplyDeleteபெரும்பாலான பெண்கள் தவறவிடுவது இதுதான் ..
இராஜராஜேஸ்வரிம்மா முதல் வருகை புரிந்ததற்கும், கருத்துக்கும் நன்றிம்மா.
ReplyDeleteபல பெண்களும் கவனிக்க மறப்பது தங்கள் உடல் நிலையைத் தான்... மிகச் சரி சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்
ReplyDeleteசீனு சார் வருகை புரிந்த்தற்கும் கருத்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteபெண்கள் எப்போதுமே தைமையுடன் இருப்பதாலேயே எல்லா நேரங்களிலும் குடும்பத்தவர் மீது எப்போதும் எல்லா விஷயத்திலும் அக்கறையாய் இருக்கிறார்கள்
ReplyDeleteஅருமையான சிந்தனை.என் மனைவியையும் படிக்கச் சொல்கிறேன்.ஆனால் அந்த சமையல் சம்மந்தப்பட்ட அறிவுரையை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்.ஏன்னா அது நம்ம டிபார்ட்மெண்ட் ..ஹி..ஹி..
ReplyDeleteகவியாழி கண்ணதாசன் சார் வருகை புரிந்த்தற்கும் கருத்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteஹா ஹா ஹா, மணிமாறன் சார் சூப்பர். இப்படிதான் மனைவிக்கு கிச்சனில் ஹெல்ப் பண்ணனும். வருகை புரிந்ததற்கு நன்றிங்க.
ReplyDeleteசுவர் இருந்தால் சித்திரம் வரையலாம் . இதை எல்லோரும் உணர்ந்தால் எத்தனை பிரச்சனைகள் சுலபமாக முடியும் .இனிய நல்வாழ்த்து பூந்தனிர்.
ReplyDeleteஎன் பெரிய மாமி பெயரும் தங்கள் பெயரே. அவ கடவுளுடனிருக்கிறா. பலோவராகிறது கேட்டிங்க.
உங்களிற்குப் பிறகு அனும்மா பலோவராகியுள்ளா. நானினைக்கிறேன் என் பக்கத்தில் வருமென்று. இல்லாவிடில் எப்படி அவர் சேர்ந்தார் வேட் பிரஸ் எனக்குத் தகவல் தந்தது.
வேதா. இலங்காதிலகம்.
அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள் பூந்தளிர்! வாழ்த்துக்கள்! இன்றைய பெண்களுக்கு மிகவும் தேவையான அறிவுரை! மேலும் இது போன்ற சிறந்த பதிவுகளைத் தொடருங்கள்!!
ReplyDeleteநிறையா பேரு ஃபாலோவரான நம்க்கு வாசகர்களும் நிறைய கிடைப்பாங்க இல்லியா. நல்லது தானே. இன்னும், இன்னும் நல்லா எழுதணும்னு தேடிகிட்டே இருப்போம்.
ReplyDeleteமனோ மேடம் வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிம்மா. அடிக்கடி வாங்க. நன்றி
ReplyDeleteநம்மை நாமதான் கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டில் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நாம நன்றாக இருக்க வேண்டும் இல்லியா?//
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்
பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ரமணிசார் வருகை புரிந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteபயனுள்ள நல்ல ஆலோசனைகள்! நன்றி!
ReplyDeleteசுரேஷ் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள் தான்.
ReplyDelete//கேளடி பெண்ணே.// என்ற தலைப்பும் அருமை தான்.
//நம்மை நாமதான் கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டில் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நாம நன்றாக இருக்க வேண்டும் இல்லியா? தனக்கு பிடித்தமான புத்தகங்கள் படிப்பது பிடித்த இசை கேட்பது என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். நம்ம கையில் தான் இருக்கிறது.எல்லாமே.சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் இல்லியா?//
சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இதை வீட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் முதலில் உணர வேண்டும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சின்னச்சின்ன வேலைகளில் தானும் பங்கெடுத்து அவர்களுக்கு தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும், என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.
உதாரணமாக “நீ சாப்பிட்டாயா? நான் உனக்கு பரிமாறட்டுமா?” என அன்பு வார்த்தைகளை அவ்வப்போது சொல்லி சந்தோஷப்படுத்தலாம்.
சமையலை ருசித்து சாப்பிட்டபின் குறை மட்டுமே கூறாமல், எது மிக நன்றாக உள்ளதோ, அதை மனம் திறந்து பாராட்டலாம்.
”இன்றைய சாம்பார் சூப்பர். ரஸம் ரொம்ப ஜோராக டேஸ்ட் ஆக இருந்தது” என்பது போல.
ஆண்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டுக்களையும், காஃபி டவரா டம்ளர்களையும் தாங்களே எடுத்துச்சென்று கையோடு கழுவி வைக்கலாம்.
காய்கறிகளை அழகாக வெட்டிக்கொடுத்து உதவலாம்.
இதுபோல அவரவர்களால் முடிந்தவற்றை செய்து கொடுத்து உதவி, பெண்களின் எவ்வளவோ கஷ்டங்களை உணர்ந்து செயல் பட்டாலே போதும். அவர்களுக்கும் மனதுக்கு சற்றே ஆறுதலாக இருக்கும்.
சிறப்பான பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன்’
VGK
வை. கோ. சார், நீங்க சொல்லி இருக்கும் விஷயங்களையும் பதிவில் சேர்த்திருக்கலாம்.
ReplyDeleteபதிவு சுருக்கமாக இருக்கணும் என்று சில விஷயங்களைத்தான் சொல்லி இருக்கிறேன். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.