Sunday 31 March 2013

ஆட்டோ காரர்

என் வீட்டுக்காரரின் நண்பரும் அவர் மனைவியும் சமீபத்தில் மும்பை சென்று
வந்தபோது சந்தித்த ஒரு அனுபவத்தை உங்க கூட பகிர்ந்து கொள்கிறேன்.
 அவங்க சொல்வது போல சொல்றேன்

 நாங்க பாந்த்ரா என்னுமிடத்திலிருந்து அந்தேரி என்னுமிடத்திற்கு போகவேண்டி ஆட்டோவுக்காக காத்துக்கொண்டிருந்தோம். அப்ப
ஒரு ஆட்டோ வந்தது. அது கொஞ்சம் வித்யாசமாக இருந்தது.ஓட்டுனர்
இருக்கைக்கு மேலே ஒரு குட்டி டி.வி. பெட்டி இருந்தது. அதில் தூர்தர்ஷன்
 சேனல் போயிட்டு இருந்தது.அதுமட்டுமில்லே கீழே ஒரு ஃப்ர்ஸ்ட்எயிட்
பாக்ஸ், அதில் பஞ்சு,டெட்டால்,சில அத்தியாவசிய மருந்து பொருட்களும்
இருந்தது.

 நான் மறுபடியும் சுற்று முற்றும் பார்த்ததில் சின்ன ரேடியோ, நெருப்பணைக்கும்கருவி, காலண்டர், எல்லா மத கடவுள்களின்
சின்ன சின்ன படங்கள், எல்லா மத அடையாளங்களைக்குறிக்கும்
படங்கள்,அதாவது, இஸ்லாம், கிறிடியன், புத்திசம், ஹிந்துயிசம்
என்று எல்லாமே இருந்தது. ஆட்டோ மட்டும் வித்யாச்மானது இல்லே
 ஓட்டுனரும் வித்யாசமானவராகத்தான் இருப்பார் போலன்னு நினைத்து
அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

முதலில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருந்தாராம். அது நஷ்டத்தில் ஓடினதால் கம்பெனி மூடிட்டாங்களாம்.
 வெற வழி இல்லாம ரிக்‌ஷா ஓட்ட ஆரம்பித்திருக்கார்.8-9  வருஷமாக
 ரிக்‌ஷா ஓட்டிட்டு இருப்பதாகச்சொன்னார். சார் வீட்ல டி. வி. பாத்துகிட்டு
 பொழுதை வீணாக கழித்தால் என் பொண்டாட்டி புள்ளைகளுக்கு யாரு சோறுபோடுவாங்க. எந்த தொழிலானா என்னங்க?, நேர்மையா உழைச்சு சம்பாதிக்கணும் இல்லியா?என்றார். ஸ்கூல் படிக்கற 2 குழந்தங்க இருக்காங்க.


காலை 8- முதல் இரவு 10 வரை ரிக்‌ஷா ஓட்டுறேன் என்றார். நான் கேட்டேன்
இப்படி பூரா நாளும் ஆட்டோ ஓட்டுவதால் வேற எதுக்குமே நேரம் கிடைக்காது இல்லே? ஆமா சார். ஆனாலும் நான் சும்மா இருக்கறதில்லே
ஒவ்வொரு ஞாயித்துக்கிழமைலேயும் அந்தேரில இருக்குற ஓல்ட் ஏஜ் ஹோம்

போயி அங்க இருக்கும் முதியவர்களுக்கு என்னாலான சின்ன சின்ன உதவிகள் செய்வேன் டொனேஷன் என்னும் விதத்தில் அவங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட், பிரஷ்,சோப் ஹேராயில் இப்படின்னு ஏதானும் வாங்கி கொடுத்துட்டு இருக்கேன் எப்பல்லாம் கொஞ்சம் அதிகப்படியா வரும்படி வருதோ அப்பல்லாம் இப்படி பண்ணிட்டு இருக்கேன். இது மனதுக்கு கொஞ்சம் அமைதி கொடுக்குது. என்றார்.

அதுமட்டுமில்லாம ஹேண்டி கேப்ட் காரங்களுக்கு ஃப்ரீயாவே வண்டி ஓட்டுறார். எங்க கண்களுக்கு அவர் ஒரு ஹீரோவாகவே தெரிஞ்சார்.
இது போல நல்லவங்களை நாம பாராட்டி உற்சாகப்படுத்தணும் இல்லியா?
இவ்வளவு நல்ல மனதுள்ளவருக்கு ஆட்டோ சார்ஜுக்கு மேலே கொஞ்சம் கூட பணம் கொடுக்க தோணிச்சு. அவர் வாங்க மறுத்துவிட்டார். எங்க பங்குக்கு நீங்க போகும் ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு ஏதானும் பொருட்கள் வாங்கி கொடுங்க சார்னு கம்பெல் பண்ணி பணம் கொடுத்தோம்.

ஃப்ரெண்டும் அவர்மனைவியும் அந்த ஆட்டொக்காரரைப்பற்றி சொன்னதும் அந்த நல்ல மனிதரை நாமளும் தெரிஞ்சுக்கலாம் இல்லியான்னுதான் இந்தப்பதிவு. உலகத்தில் எங்கயாவது ஒரு மூலேல இதுபோல மனிதாம்பிமான மனதுள்ள நல்லவங்களும் இருந்துகிட்டுதான் இருக்காங்க இல்லியா?
read more " ஆட்டோ காரர்"

Wednesday 27 March 2013

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

ரொம்ப நாளா வெளி ஊரு போயிட்டு வந்து பார்த்தா நிறைய பேரு
 நிறையா பதிவெல்லாம் போட்டு கலக்கி இருக்காங்க. முதல்ல
அங்கல்லாம் போயி பாத்துட்டு வரலாம்னு போனதுல என் பக்கம்
 வரவே டைம் கிடைக்கல்லே. இப்ப வந்துட்டேன். ஹோலி பண்டிகை
பற்றி நிறையா பேரு ஏன் அந்தப்பெயர் வந்தது,ஏன்ன் விளையாடுராங்க
 என்றெல்லாம் நிறையா சொல்லிட்டாங்க. நானும் மறுபடியும் அதையே
 சொல்லி போரடிக்க விரும்பல்லே. எங்க ஊருல எப்படி


விளையாடுனாங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன். ஓக்கேவா. பொதுவா
 வட மா நிலங்களில் ஹோலி பண்டிகை ஆரவாரமாக உற்சாகமாக
கொண்டாடுராங்க. பூர்ணிமா அன்று இரவு 12 மணிக்கு ஒவ்வொரு பில்டிங்க
 காரங்களும்  நம்ம ஊர்ல சொக்கப்பானை கொளுத்துவாங்க இல்லியா
அதுபோல சொக்கப்பானை கொளுத்துவாங்க. அதில் வேண்டாத பழைய பொருட்களைப்போட்டு எரிப்பாங்க.ஹோலிகா பொம்மையும் போட்டு எரிப்பாங்க.பிரசாதமாக அவல் ,பொரி, கடலை வெல்லம் கலந்துதருவாங்க முக்கியமாகபுரண் போளிசெய்வாங்க.

 மறு நா காலை 7 மணி முதலே முதல்ல குழந்தைகள் ஒவ்வொரு வீடாகப்போயிதங்கள் நண் பர்களை அழைத்து வந்து ஒருவர் மேல் ஒருவர் கலர் பொடிகள் தூவி பிச்காரி என்னும் பீச்சாங்குழலில்தண்ணீர் நிறப்பி ஒருவருக்குமேல் ஒருவர் அடித்து  விளையாட்டை துவங்குவார்கள். இதற்கென்றே ஒரு பெரியட்ரம் நிறையா   தண்ணீர் நிறப்பி  பில்டிங்க் வாசலில் காலையிலேயே வச்சுடுவாங்க.உற்சாகமாக குழந்தைகள் விளையாடுவாங்க. அதுமட்டுமில்லே பெரியவங்களும் ஆண் பெண் எல்லாருமே வீடு வீடாகப்போயி நண்பர்களைஅழைத்துவர கிளம்புவார்கள். எல்லா ஊரு எல்லா பாஷைக்காரங்களும் கலந்து இருப்பாங்க.

பொதுவாக அன்று வெள்ளைக்கலரில் தான் ட்ரெஸ் போடுவாங்க.ரோட்டில் நடந்து போனாலும் வாகனங்களில் போனாலும் விடாமல் துரத்திச்சென்று
கலர் அடிச்சுடுவாங்க. அன்று அலுவலகம் பள்ளிகள் எல்லாமே விடு முறை
விட்டுடுவாங்க நண்பர்கள் கூப்பிட  வந்ததுமே நாம வீட்டைப்பூட்டிக்கொண்டு வெளியே வந்து அவங்க கூட கல்ந்து கிட்டா பொழைச்சோம். இல்லேன்னா
வெளிலேந்தே ஜன்னல் வழியா வாசல் கதவு இடை வெளிவழியா கல்ர் தண்ணியை ஊத்தி  வீட்டையும் நம்மயும் ஒரு வழி பண்ணிடுவாங்க.

 வீடு வீடாக போகும்போது ஒவ்வொருவரும் கட்டி அணைத்து ஹேப்பி ஹோலி சொல்லி ஏதானும் ஸ்வீட்டையும்  வாயில்அடைச்சுடுவாங்க. எல்லார் முகங்களிலும் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு வந்து ஒட்டிக்கும்.இளவயசு பையன் பெண்கள் பலூனில் தண்ணீர் நிறப்பி மாடியில் இருந்து கீழே பார்க்கிறவங்க மேலே வீசி அடிப்பாங்க.பாக்கவே வேடிக்கையாக இருக்கும்.

7 மணிக்கு ஆரம்பிக்கும் கலர் விளையாட்டுக்கள் மதியம் 2 மணியுடன் ஒரு
முடிவுக்கு வரும். திரும்பி வரும் ஒவ்வொருவரையும் யாருன்னே அடையாளம் காணமுடியாதபடிக்கு எல்லார் முகங்களும் பலகலர்களி ஜொலி
ஜொலித்துக்கொண்டிருக்கும்.தலை முடி எல்லாம் கூட மல்டி கலரில் மினு மினுக்கும்.எருமை மாட்டை வைக்கோல் போட்டு தேய்த்துக்குளிப்பாட்டுவதுபோல எல்லாரும் ப்ரெஷ் கொண்டு தேய்த்து தேய்த்து குளிப்பாங்க.எல்லார் வீட்டு பாத்ரூம் தண்ணியும் காலி ஆயிடும்.

 அப்புரம் வீட்டு அம்மாக்களுக்குத்தான் அடுப்பங்கறை வேலைகள் ரெடியாக காத்துகிட்டு இருக்குமே.ஏகப்பசியுடன் இருப்பாங்க எல்லாரும். சூடு சூடாக ஒரு புலாவ், ராய்த்தா, புரன்போளி யுடன் விருந்து சாப்பாடு ரெடி பண்ணி சாப்பிட்டு முடிக்கவே 4 மணி ஆயிடும். ஹோலி கலர் ட்ரெஸ் தோய்க்கவே முடியாதபடிபலகலர்களில் சாயம் பூசிக்கொண்டிருக்கும்.ஒவ்வொருவரின் உடம்பில் உள்ள கலர்களும் போக குறைந்தது  ஒரு வாரமாவது ஆகும்.

இப்படியாக ஹோலிப்பண்டிகை ஆரவாரமாக கொண்டாடுவாங்க இங்க
எல்லாருக்கும் ஹேப்பி ஹோலி


read more "ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் "