Wednesday, 2 January 2013

தேங்காய் பால் பாயசம்.

என் முதல் பதிவை  இனிப்புடன் தொடங்கலாம்னு நினைத்தேன்
அதுக்காக எப்பவும் ரெசிப்பி மட்டும்தான் பதிவா போட்டு உங்களை
எல்லாம் கஷ்டப்படுத்துவேன்னு பயந்துடாதீங்க. எனக்கு சமையல்
 நினைவு இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்து கொள்வேன்.
அந்தமாதிரி சமயங்களில் மட்டும் இது போல எதானும் குறிப்பு போடுவேன்.
சரி எல்லாரும் பாயசம் சாப்பிட வாங்க.

தேவையான பொருட்கள்.

பச்சை அரிசி.....................................  ஒருகைப்பிடி அளவுக்கு
காய்ச்சி ஆறவைத்த பால்.............  200 மில்லி
வெல்லம் அல்லது கருப்பட்டி---------------  200 கிராம்
துருவிய தேங்காய்ப்பூ.................................  ஒருமூடி
முந்திரி, திராட்சை.................................................  10,  10
ஏலக்காய்ப்பொடி...........................................  ஒரு டீஸ்பூன்
                     
செய்முறை.
அரிசியை அரைமணி நேரம்  ஊறவைக்கவும்.  நன்கு ஊறியதும் அரிசி தேங்காய்த்துருவலை மிக்சியில் ரவை பக்குவத்தில் அரைத்துக் கொள்ளவும்
                       
அரைத்த விழுதை கூட ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில்
போட்டு அடுப்பை   சிம்மில் வைத்து கை வி டாமல் கிளறிக்கொடுக்கவும்.
சீக்கிரம் அடிப்பிடிக்கும் .  ஸோ கை விடாமல் அரிசி நன்கு வேகும் வரை
                           
கிளறவும். கருப்பட்டியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கரைய விட்டு கல்,
மண் போக நன்கு வடிகட்டிக்கொள்ளவும். அடுப்பில்
                           
கொதித்துக்கொண்டிருக்கும் கலவை நன்கு வெந்ததும் கருப்பட்டி கரைசலைச்
சேர்க்கவும். கருப்பட்டி வாசனை போகும் வரை கிளறவும். நன்கு சேர்த்து கொதித்ததும் கீழே இறக்கி ஆறிய பாலை விட்டு கலக்கவும்.ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சையை  வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்ப்பொடி தூவவும். சுவையான தேங்காய்ப்பால் பாயசம் ரெடி..
                                     
பொதுவாக இந்த பாயசம் வெல்லம் சேர்த்துதான் செய்வாங்க. வெல்லத்தை விட கருப்பட்டி உடல் நலனுக்கு நல்லது. அதனால ஒரு மறுதலுக்காக நான் கருப்பட்டி சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அதனாலதான் உங்க கூடவும் பகிர்ந்து கொள்கிறேன். 

32 comments:

 1. இனிப்பான சுவையான
  பாயசப் பறிமாறலுக்குப்
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. வந்துட்டேன் :-)

  ReplyDelete
 3. இது எனக்கு புதுசா இருக்க்கு... சிம்பிளாவும் இருக்கு... செய்ட்து பாக்குறேன்

  ReplyDelete
 4. அட அட அட. பிரமாதமா இருக்கே பாயசம். பக்கத்திலிருந்தால் வந்து சாப்பிடலாம்:)அருமை மா.

  ReplyDelete
 5. இராஜராஜேஸ்வரி அம்மா முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 6. ஆமினா அக்கா கூப்பிட்டதும் ஓடிவந்துட்டீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க அக்கா. நன்றி

  ReplyDelete
 7. வல்லிசிம்ஹன்மா வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிம்மா. அடிக்கடி வாங்க.ரொம்ப சந்தோஷமா இருக்கிறது உங்கள் வரவு.

  ReplyDelete
 8. சுவையான ஆரம்பம்! கலக்குங்க! வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 9. அட கலக்கலுங்க பதிவுக்காகவே சமைச்சீங்களோ( போட்டோ உபயம் )

  ReplyDelete
 10. மணிமாறன் சார் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 11. சேஷாத்ரி சார் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 12. ஹா ஹா ஹா ஆமாங்க ப்ரேம்குமார் சார் . படங்களும் நானே எடுத்துதான் சேர்த்தேன். நன்றிங்க.

  ReplyDelete
 13. சுவையான சமையல் குறிப்பு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 14. சுரேஷ்சார் வருகை புரிந்ததற்கு மிகவும் நன்றிங்க. நானும் இதோ உங்க பக்கம் வெந்து பார்க்கிறேன்

  ReplyDelete
 15. நாக்குல எச்சில் ஊறுது,

  ReplyDelete
 16. கவியாழி கண்ணதாசன் சார் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 17. படங்களும் விளக்கமும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. ரமணி சார் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
 19. இனிப்பான பதிவு பகிர்த்து கொண்டமைக்கு நன்றி.இது என்னுடைய முதல் வருகை உங்களின் தளத்திற்கு.மீண்டும் வருவேன்.....

  ReplyDelete
 20. இனிப்போடு ஆரம்பித்துள்ளீர்கள், இனிமையான பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன், மற்றபடி பாயாசம் மேல் பொறாமையெல்லாம் கிடையாதாக்கும்,

  வாழ்த்துக்கள் சகோ,,,,,,,,,

  ReplyDelete
 21. அன்பைத்தேடி அன்பான வருகைக்கு நன்றிங்க. முதல் வரவா இனி அடிக்கடி வருவீங்க.

  ReplyDelete
 22. SPARKARTS வாங்க வாங்க. பாயசம் மேல ஏங்க பொறாமைல்லாம் படனும்?

  ReplyDelete
 23. பார்க்கவே சூப்பரா இருக்குங்க..

  ReplyDelete
 24. அப்படியா நன்றிங்க. சாப்பிடவும் நல்லாவே இருக்கும்.

  ReplyDelete
 25. வணக்கம்
  சிவகாமி (சகோதரி)

  வலைப்பூ ஆரம்பித்த சில நாட்கள்தான் நீங்கள் ஒரு லக்கிதான் என்று சொல்லவேண்டும் ஏன் என்றால்வலைச்சரம் வலைப்பூவில் ஆறிமுகம்ஆனாது பல ஆண்டுகள் வலைப்பூ ஆரம்பித்து சிலரது பதிவுகள் வலைச்சரத்தில் அறிமுகம் காணவில்லை தரமான பதிவுகள் நல்ல ஆளுமை விருத்தி உங்களிடம் உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழமுடன்
  பார்க்க இங்கேhttp://blogintamil.blogspot.com/  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -

  ReplyDelete
 26. வணக்கம்
  சின்ன தவறு நடைபெற்றது (வளமுடன் என்ற சொல்லுக்கு வாழமுடன்) என்று எழுதிவிட்டேன் அதை திருத்தம் செய்து வெளியீடு செய்யவும் பிலிஸ்
  இதை பின்னூட்டமாக ஏற்க்கவேண்டம் சகோதரி,, அறிவித்தல் இது
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 27. ஆஹா, மிகவும் இனிமையான தேங்காய்ப்பால் பாயஸப்பதிவு. எனக்கு மிகவும் பிடித்தது. நாக்கில் நீர் ஊறுகிறது. உடனே சாப்பிட வேண்டும் போல ஆசை ஏற்படுகிறது.

  புத்தாண்டின் முதல் பதிவாக இதைக்கொடுத்துள்ளது மிகவும் சிறப்பு.

  இலை போட்டதும் முதலில் வைப்பது பாயஸம் அல்லவா!

  தங்களின் 31.12.2012 வெளியிட்ட பதிவு நுனி இலை போல.

  இப்போது அழகான படங்கள் + செய்முறை விளக்கங்களுடன் பாயஸமும் பரிமாறி விட்டீர்கள். பலே பலே .. பேஷ் பேஷ்..
  ரொம்ப நன்னாயிருக்கு.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 28. 2008ரூபன் சார் வருகை புரிந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க வலைச்சர அறிமுகம் எனக்கே சந்தோஷ ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என் பொறுப்பு கூடி இருப்பதாக உணர்கிறேன். எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன். நல்ல தரமான பதிவுகளாக கொடுக்கவும் முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 29. வை. கோ. ஐயா, நன்றிங்க. இந்த உங்க உற்சாகமூட்டும் பின்னூட்டம் படித்ததும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? நீங்க மிகவும் மூத்தபதிவர். வயசிலும் பெரியவங்க.உங்க வழிகாட்டல் என்னைப்போல வளர்ந்து வரும் பதிவர்களுக்கு மிகவும் தேவை.முதல்ல உங்களை எப்படி அழைப்பது என்பதிலேயே சிறிது குழப்பம். கோபுசார் என்றோ, கோபால் சார் என்றோ உங்க பெயரைச்சொல்லி அழைப்பது பொருத்தமாக இருக்காது. ஸோ இந்த தடவை வை. கோ. சார்னு அழைச்சேன். எப்படியோ என்பக்கம் வந்து கருத்து சொன்னதுக்கு மிகவும் நன்றிகள். அடிக்கடி வாங்க ஐயா. இந்த பதிவில் எழுத்துப்பிழைகள் இல்லாம எழுதி இருக்கிறேனா> அப்படி நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் தானே என் எழுத்தை செம்மை படுத்திக்கொள்ள முடியும் இல்லயா? தகுந்த ஆலோசனைகளை சொல்லி என்னை வழி நடத்துங்கள் ஐயா. நன்றிகள்.

  ReplyDelete
 30. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (22/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete