Sunday 13 January 2013

பொங்கல்&ஃப்ரூட் சாலட்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
நிறைய பேரு பொங்கலும் வடையும் எப்படி செய்யுறதுன்னு பதிவு
               
 போட்டிருப்பங்க. நான் கொஞ்சம் மாத்தி யோசித்தேன். ஹ ஹ ஹ
பண்டிகை தினங்களில் தானே பலவகைப்பழங்கள் வாங்குவோம்
 இல்லியா? அதை வைத்து ஃப்ரூட் சாலட் செய்தேன். ஆமா எனக்கு
ஒரு டௌட்டு. ஃப்ரூட் சாலட்னு சொல்லனுமா? ஃப்ரூட் ஸலாட்னு
சொல்லணுமா. சரி உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே வச்சுக்
கோங்க. எப்படி சொன்னாலும் அதன் சுவை அப்படியே தானே இருக்கப்போவுது.

தேவையானவை
ஆரஞ்சுப்பழம்------------------- ஒன்று
ஆப்பிள்பழம்--------------------  ஒன்று.
வாழைப்பழம்------------------- மூன்று.
மாதுளம்பழம்------------------  ஒருகப்.
(உரித்த முத்துக்கள்)
மாம்பழம்-----------------------  ஒன்று.
(சீசனில்மட்டும்)
திராட்சைப்பழம்--------------  ஒரு கப்
கருப்பு திராட்சை-----------  ஒருகப்
சப்போட்டா பழம்----------- இரண்டு
 ஜீனி--------------------------  ஒரு கப்
 மில்க்மெயிட்-------------  இரண்டு கரண்டி
எவரெஸ்ட் மில்க் மசாலா பவுடர்----   இரண்டு ஸ்பூன்

செய் முறை
 எல்லா பழங்களையும் கழுவி சுத்தம் செய்து  தோல் நீக்கி கொட்டை நீக்கி சிறு
                           
துண்டுகளாக கட் செய்து ஒரு பாத்திரத்தில் போடவும்.மில்க் மசாலா பொடி,
                     
மில்க் மெயிட்பால்,ஜீனி சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கூல், கூலாக
                         
பறிமாறவும்.இதையே கஸ்டர்ட் சேர்த்து செய்து கொடுத்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். அதற்கு ஒருகப் பாலில் இரண்டுஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
                       
போட்டு நன்கு கூழாகும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். அது நன்கு ஆறியபிறகு ஆறியபால் அரை லிட்டர் வரையும் விட்டு மேலாக பழங்களையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.
                      

24 comments:

  1. ஃப்ரூட் சாலட் அருமையாக இருக்கிறது.
    உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கோமதி அரசு மேடம் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஒரு ப்ரூட் சாலட் எனக்கு பார்சல் அனுப்பிடும்மா. உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கிருஷ்ணா ரவி வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  6. கணேஷ் அண்ணா உங்களுக்கில்லாத்ததா? இதோ அனுப்பி வைக்கிறேண் ஹா ஹா ஹா. வருகை புரிந்ததற்கு நன்றிங்க. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஃப்ரூட் சாலட் அருமை ..
    பொங்கல் வாழ்த்துகள் .

    ReplyDelete
  8. ஆஹா நாக்கில் நீர் ஊற வைத்து விட்டீர்களே! படங்களெல்லாம் அழகோ அழகு. பக்குவம் சொன்னவிதம் அதைவிட அழகு.

    ஒரு சின்ன சந்தேகம். மூன்றாவதாகக் காட்டியுள்ள படத்தில் மொத்தம் மூன்று கைகள் உள்ளனவே!

    அவற்றிற்கு சொந்தக்காரர்களான இருவரும் யாரு என்று எனக்கு மெயில் மூலம் ரகசியமாகச் சொல்லுங்கோ. அது தெரியாவிட்டால் என் தலையே வெடிச்சுடும் போல ஒரு தவிப்புடன் நான் இப்போது.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
  9. ஃப்ரூட் சாலட் கூல், கூலாக இனித்தது...

    ReplyDelete
  10. பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இராஜராஜேஸ்வரிம்மா வருகைபுரிந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  12. வை.கோ. சார் பின்னூட்டத்திலும் இப்படி காமெடி பண்ரீங்களே? வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  13. கலையன்பன் வருகை புரிந்ததற்கு நன்றிங்க. இனிப்பை ரசிததற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  14. கவியாழி கண்ண தாசன் ஐயா, வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete

  15. இனிய பொங்கல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கோவைக் கவி வருகை புரிந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. FAIZA KADER, வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  19. ஆஹா... ஃப்ரூட் சாலட் என்றவுடன் என்னைப்போல் ஒரு கலவை தான் எழுதி இருப்பீங்கன்னு வந்தேன். நிஜ ஃப்ரூட் சாலட்... ஒரு கப் எடுத்துக்கிட்டேன்... நல்லாவே இருக்கு. :)

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. வாங்க வெங்கட் சார், நல்லா இருந்துச்சா, அடிக்கடி வாங்க எதானும் கொடுத்துக்கிட்டே இருப்பேன். முதல்ல தேங்காய்ப்பால் பாயசம் கொடுத்திருந்தேனே நீங்கதான் வரலே. மிஸ்பண்ணிட்டீங்க இப்பகூட போயி பார்க்கலாம். ஹா ஹா . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் தி நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. படங்களுடன் விளக்கிச் சென்ற விதமும் அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்க்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ரமணி சார் வருகை புரிந்ததற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. ப்ரூட் சாலட் செய்யு முறையை அறிந்தேன். நன்று
    மன்னிக்கவும்.எனது முந்தைய கருத்தை நீக்கி விடவும்.

    ReplyDelete
  24. டி.என். முரளீதரன் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete