Friday, 11 January 2013

பாடும் ரேடியோ.

எங்க அம்மவின் ஊரில் ஒரு வயசான பாட்டிம்மா இருந்தாங்க. அவங்களுக்கு பழைய சினிமா பாடல் களை எழுதி வைத்துக்கொள்வதில் தனி விருப்பம். அவங்க நோட்புக் காட்டினாங்க. சுமாரா 50, 60 வருஷங்களுக்கு முன் வந்த
பழைய படங்களின் பாடல்கள் இருந்தது, என்ன படம்,   யாரு    பாடி இருக்காங்கன்னு எந்த தகவலும் இல்லே. இப்ப நான் பகிர்ந்துகொள்ளும் பாடல் அவங்க கிராமத்தில் முதல் முதலாக மின்சாரம் வந்தப்போ ஏதோஒரு
படத்தில் வந்தபாடல் பொருத்த்மா இருந்திச்சாம். ரொம்ப வேடிக்கையான பாடலாக இருந்தது. அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

பாடும் ரேடியோ  பட்டனைத்தட்டி விட்டால் பாடும் ரேடியோ.
பல தேசப்பாட்டை இங்கே படித்துக்கொண்டே கேட்க்கலாம்
பாடும் ரேடியோ. பம்பாய், கொல்கட்டா, மதராஸ், டெல்லி.
பச்சைத்தண்ணிக்குள்ளே ஹீட்டர் வச்சதும் வென்னீ வரும்
 காப்பி பொடியைப்போட்டு 10- நிமிஷம் கழிச்சு பார். காப்பியா
டீயா கோக்கோவா? கம கம வென வாசம் வீசும்காபி சொகுசாய்
கரண்டுனுடைய மகிமை சொன்னால் கடவுளுக்கும் மேலே,
காணாத பொருளை எல்லாம் காட்டும் கண் முன்னாலேகரண்டுனுடைய
மகிமையினாலே. குழாயை திருப்பிவிட்டால் கொட்டுது வாட்டர்.  குடம்
தூக்கும் வேலை இல்லே  தீர்ந்தது மேட்டர். இதைத்தொட்டால் ஹாட் வாட்டர்
 அதைத்தொட்டால் கூல் வாட்டர், இது  வென்னி, அது தண்ணி.
கம கமவென, குளு, குளுவென மழை பொழியும் ஷவர்பாத்
ரொட்டி கேக்கை வெட்டிப்பார்   பாலாடை, பசு வெண்ணை, பழமெல்லாம்
எடுத்து பாடம் பண்ணி கை படாமல் டப்பாவில் அடைத்து, பலதேசம்
 நமக்கென்று அனுப்பி வைக்கும்   டின்னு.,டின்னாய் அனுப்பி வைக்கும் சீமை
எங்களுக்கில்லை.இந்த தேசம் விளையா விட்டாலும் கவலை எங்களுக்கில்லை.இது வே மருந்து அலமாரி. தலவலிக்கொரு மாத்திரை, இருமலுக்கொரு மாத்திரை விடியக்கால நேரத்திலே விட்டமின்னு மாத்திர
சாயங்கால நேரத்துலெ வலுவுள்ள மாத்திரே,எல்லாத்துக்கும் மேலிருக்குது
விட்டாமீனு ஏ மாத்திட்ரே, விட்டமீனு மாத்திரே.

இப்படி இந்தப்பாட்டு நீளமாக போய்க்கொண்டே இருக்கிறது. பதிவு
 பெரிசாகிடுமோன்னு பாதியிலேயே நிறுத்திக்கறேன்.

இது போல நிறைய பாட்டுக்கள் எழுதி வச்சிருக்காங்க. அதில் இன்னொரு பாட்டும் மிக ரசனையுடன் இருந்தது. நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்,எஸ் ,கிருஷ்ணனும், அவர் மனைவி மதுரம் அவர்களும் பாடுவதுபோல ஒருபாடல்   குடிச்சு  பழகணும், எல்லோரும் குடிச்சுப்பழகணும், காலையில் பல் தேய்த்தவுடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப்பழகணும் என்று பாடல் ஆரம்ப வரிகள். இப்படி பழையபாடல்கள் கருத்துள்ள வரிகளுடன் இருந்தது. ஒரே பதிவில் எல்லா பாடல்களையும் பதிவிட்டால் பதிவு நீளமாகி படிப்பவர்கள் அலுத்துக்கொள்ளும்படி போரடித்து விடுமே இல்லியா?ஸோ
ஒரு பாடல் பகிர்வுடன் அதுவும் பாதிப்பாடலுடனேயே நிறுத்திக்கொள்கிறேன்.
read more "பாடும் ரேடியோ."

Wednesday, 9 January 2013

கும்பிடலாம் வாங்க.


கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு புக்கில் படித்த விஷயம். வெரி இண்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சி. அதான் உங்க எல்லாருடனும் ஷேர் பண்ணிக்குறேன்.


எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?

தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?

read more "கும்பிடலாம் வாங்க."

Monday, 7 January 2013

கேளடி பெண்ணே.

ஒரு குடும்பததை சிறப்பாக வழி நடத்திச்செல்பவள் ஒரு பெண்தான்.
பிறந்தவீட்டில் பெற்றோருக்கு பெண்ணாக, புகுந்தவீட்டில் கணவனுக்கு
நல்ல மனைவியாக, பெரியவர்களை மதிக்கும் நற்பண்புகள் நிறைந்தவள்
 பெண்.குடும்பததையும் நல்லவிதமாக கவனித்துக்கொண்டு, வெளிவேலை
களையும் கவனித்துக்கொண்டுபாலன்ஸ்டாக சமாளிக்கும் திறமை இயற்கை
யிலேயே ஒரு பெண்ணுக்கு அமைந்து விடுகிறது.இவ்வளவு திறமைகளை
தனக்குள்ளே வைத்திருக்கும் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வதில்
மட்டும் சிறிது கவனக்குறைவாக இருக்கிறார்கள்.காலை 5-மணிக்கு எழுந்து
காலை உணவு, மதிய உணவு, சிறியவர்களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணுவது
அலுவலகம் செல்பவர்களுக்கு காலை, மதிய உணவு வகைகள், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பார்த்துப்
பார்த்து அவசர அவசரமாக செய்துவிட்டு, அவசரமாக அலுவலகம் செல்வதி
லேயே கவனமாக இருப்பார்கள்.

 அவர்களுக்கும் பசி இருக்கும் காலை அவசரத்தில் ஒரு வாய் அள்ளிப்போட்டுக்கொள்ளக்கூட நேரமில்லை என்று அவசரமாக  அலுவலகம் கிளம்புவார்கள். அலுவலகத்திலும் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். என்ன அவசரமானாலும் காலை உணவைத்தவிர்க்கவே கூடாது.ரெண்டு ப்ரெட் ஸ்லைஸ்,இல்லேனா ரெண்டு இட்லி இதுபோல ஏதானும் சாப்பிட்டு கிளம்பினால் சோர்வு இல்லாமல் தெம்பாக இருக்கும்.
இவ்வளவு உழைப்புக்கு உடலளவிலும் மனதளவிலும் தெம்பாக இருந்தால் தானே முடியும். தங்களையும் கவனித்துக்கொள்ள சிறிது பழக்கப்படுத்திக்கொள்ள்வேண்டும்.சாப்பாட்டு விஷயத்தில் மட்டுமில்லாமல்
எல்லா விஷயங்களிலுமேதிட்டமிட்டுசெயல்படபழக்கப்படுத்திக்கொள்ளலாம்
 எல்லாருக்குமே சொல்வது சுலபம்தான். அவரவர் நிலமையில் இருந்து பார்த்தாதானே தெரியும்னு சொல்வாங்க. கரெக்ட் தான்.

மறு நாளுக்கு தேவையான வற்றை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொண்டால் காலை நேர பர பரப்பிலிருந்து விடு படலாம்.அதாவது
காய் நறுக்கி வைப்பது, தேங்காய் துருவி ஃப்ரீசரில் வைப்பது, குழந்தைகளின் ட்ரெஸ்களை இரவே தயார் செய்து வைப்பது என்று சிறு, சிறு வேலைகளை இரவே செய்து வைத்துக்கொள்ளலாம்.அதுபோல தங்கள் உடல் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக்கொள்வது.மனதை எப்பவும் லேசாகவும் சந்தோஷ மாகவும் வைத்துக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளலாம். குளிர் காலங்களில் தோல் வறண்டு போகும். கொஞ்சமாக நல்லெண்ணையோ, தேங்காயெண்ணையோ ஒரு துளி தண்ணீர் சேர்த்து குழைத்து முகம் கழுத்துப்பகுதி கை கால் களில் தடவிக்கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும். வெயில் காலங்களில் பருத்தி உடையே சிறந்தது. லீவு நாட்களிலாவது  அரை மணி நேரம் காலை நேர வாக்கிங்க் போய்வரலாம். ஆபீசிலும் உக்காந்த இடத்திலேயே வேலை செய்ய வேண்டி இருக்கும். கொஞ்சமாவது நடைப்பயிற்சி இருந்தால் நல்லது தானே? வீட்டிலும் வேலைகள் செய்யும் போது இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டே வேலைகள் செய்தால் சோர்வு தெரியாது.

நம்மை நாமதான் கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டில் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நாம நன்றாக இருக்க வேண்டும் இல்லியா? தனக்கு பிடித்தமான புத்தகங்கள் படிப்பது பிடித்த இசை கேட்பது என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.  நம்ம கையில் தான் இருக்கிறது.எல்லாமே.சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் இல்லியா?
read more "கேளடி பெண்ணே."

Friday, 4 January 2013

குழந்தை வளர்ப்பு.

பொதுவாக இன்று எல்லா வீடுகளிலுமே ஒன்று, அல்லது இரண்டு
குழந்தைகள் தான் இருக்கிறாங்க.பெற்றோர்களும் அந்தக்குழந்தை
களை வசதியாக சௌகரியமாக வளர்க்கவேண்டும் என்னும் அக்கரையில்
இருவருமே வேலைக்கு போயி சம்பாதிக்கிறார்கள்.இதில் தவறேதும் இல்லே.
விளையாடுவதற்கு அதிக விலையில் உள்ள பொம்மைகள், உடையிலும்
உசத்தி துணியில் எடுத்துக்கொடுக்கிறார்கள்.உசத்தி ஷூ, பெண்குழந்தை என்றால் தங்க வைர நகைகள் பூட்டி அழகு பார்க்க நினைக்கிறார்கள்.சில
வீடுகளில் குழந்தைகள் கேட்கும் முன்பே விளையாட்டுப்பொருட்களோ
வேறு எதுவுமோ வாங்கி குவிக்கிறார்கள்.3-வயதுக்குள்ளேயே ப்ளே ஸ்கூல்
 அதுவும் பிரபலமான ஸ்கூலில்தான் சேர்க்கணும் என்று நினைக்கிறார்கள்.
இதெல்லாமே  சரிதான்.பள்ளியில் சேர்க்கும் போதும் புகழ் பெற்ற பள்ளிகளில்
தான் சேர்க்க நினைக்கிறார்கள். ஃபீஸ் எவ்வளவு அதிகமானாலும் தயங்குவதே இல்லை.குழந்தைக்கு நல்ல படிப்பு கிடைக்கணும் என்று ஆசைப்
படுவதில் தவறேதும் இல்லை. நான் சொல்ல வருவது என்ன என்றால்

குழந்தைகளுக்கு வசதியையும் சௌகரியங்களையும் கொடுக்கணும் என்று
நினைக்கும் பெற்றோர் அந்தக்குழந்தை நல்ல பழக்கவழக்கங்களுடன் சிறந்த
குடிமகனாக வளறணும் என்றும் சிறிது முயற்சி செய்யணும்.3-வயதிலிருந்து
10- வயது வரை அந்தக்குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்போ பட்டுத்துணிகளின்,  அல்லது  தங்க நகைகளின் மதிப்பு பற்றியோ எந்த வித
அபிப்ராயமும் இருக்காது.விளையாட்டு பொம்மைகளும் கூட ஒருவாரம் விளையாடி மறு வாரம் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது பணம் விரயம் தானே?அப்போது பெற்றோர்தானே சிறிது கவனமாக இருந்து கொள்ளணும்?
குழந்தைப்பருவத்தில் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அம்மாவையே எதிர்
பார்ப்பாங்க . (நாமதான் குழந்தைகளை குழந்தைகளாகவே நடத்துவதில்லையே? ).சின்ன வயதில் புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்வதில் குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடையவர்களாகவே இருப்பார்கள். இதை பெற்றோர் நல்ல விதத்தில் பயன் படுத்திக்கோள்ளலாம்
எல்லா பள்ளிகளிலுமே சனி ஞாயிறு விடுமுறைதான். அந்த லீவு நாட்களில்
குழந்தைகளை சிறு, சிறு வேலைகளைச்செய்ய பயிற்றுவிக்கலாம்..

காலை எழும்போதே அவங்க, அவங்க படுக்கையை அவங்களே சுருட்டி வைக்க சொல்லலாம்.ப்ரெஷில் பேஸ்ட் எடுது தாங்களே பல் விளக்க சொல்லிக்கொடுக்கலாம்.மத்த நாட்களில் எல்லாவற்றுக்கும் அம்மா செய்வாங்கன்னு சும்மா இருக்கும் குழந்தைகள் தானே செய்து கொள்ளும்போது ஆர்வமுடன் செய்வார்கள்.தனியாக அவ்ர்களே அவர்கள்
உள்ளாடைகளை துவைத்து, குளித்து வரவும் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கலாம். முதலில் சிறிது முரண்டு பிடிப்பார்கள் தான். நாளாவட்டத்தில்
ஆர்வமுடன் தன் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் பழக்கம் கூடவே படிந்துவிடும்.சாப்பிட உக்காரும் போது அவங்க தட்டு, டம்ளரை அவங்களையே எடுத்து வச்சுக்கசொல்லி பழக்கலாம் சாப்பிட்டு முடிந்ததும் தட்டு டம்ளரை ஸிங்கில் கொண்டு போடச்சொல்லலாம்..கூடியமானவரை அவங்க வேலைகளை அவங்களே செய்து கொள்ளும்படி ஈசியா பழக்கிடலாம். இந்த வேலை ஆண்தான் செய்யனும், இந்த வேலை பெண்தான் செய்யணும் என்றெல்லாம்  பிரித்து பார்க்கவே வேண்டாம். எல்லா குழந்தைகளும் எல்லா வேலைகளும் தெரிந்து கொள்ள நாம் பழக்கலாம். இதுபோல இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதனால் சிறுவயதிலேயே பழக்கி விடுவதால் வளற், வளற எந்தவேலைக்கும்
யாரையும் எதிர் பார்க்காமல் அவர்களாகவே செய்து கொள்ளும் பழக்கம் தன்னால வந்துவிடும். இதனால் அந்தக்குழந்தைகளுக்கும் நல்லது, பெற்றோர்
களுக்கும் நல்லது.அதுபோல அதிக கட்டுப்பாடுகள் விதிக்காமல் கொஞ்சம் விட்டுபிடித்தும் அவர்கள் செயல்களை உற்சாகமும் ஊக்கமும் படுத்தலாம்.
பெரியவர்களைக்கண்டால் மறியாதையுடன் பழகசொல்லி சொல்லிக்கொடுக்கலாம்..எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலேன்னு பாட்டு கேட்டிருப்பீங்களே.பெற்றோர்களுக்கு பொறுமை மட்டும் இருந்தால் இதை கண்டிப்பாக சாதிக்கலாம். அவர்களின் வேலைப்பளுவில் எரிச்சலும் கோபமும் வரத்தான் செய்யும். குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறிது முயற்சி செய்துதான் ஆக்ணும் பொறுப்புள்ள பெற்றோர்.  சரி இறுதியக சின்ன ஜோக் ஒன்று சொல்லிவிட்டு
பதிவை  முடித்துக்கொள்கிறேன்.

ரெண்டு பசங்க 10- வயதிற்குள் இருக்கும். கம்ப்யூட்டர் முன்பு உக்காந்து கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தாங்க.ஒரு பையன் மற்றவனிடம் ஏய்
மௌஸுக்கும், ரேட்டுக்கும்(  RAT) என்னடா வித்தியாசம்னு கேக்குரான்.மற்றவனோ நீ என்னடா கிறுக்கனா? மௌஸ், ரேட் ரெண்டுக்குமே எலின்னுதானே அர்த்தம்
இதுல ஏதுடா வித்தியாசம்னு கேலியாக கேட்டான். இல்லடா ஒரு வித்தியாசம் இருக்கு. கொஞ்சம் யோசிச்சிப்பாருடான்னான்.அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சான். போடா எனக்கு ஒன்னும் தெரியல்லே, நீயே சொல்லிடுன்னான்.சரி (கம்ப்யூட்டர்)  மௌஸுக்கு (எலிக்கு) முன்பக்கம் வாலு, நிஜம் ரேட்டுக்கு(எலிக்கு) பின் பக்கம் வாலு இருக்கு. இது எப்படி இருக்குன்னு சொல்லவும் இருவரும் சேர்ந்து பெரிதாக சிரிக்க ஆரம்பித்தார்கள். நீங்களும் சிரிச்சீங்களா?
read more "குழந்தை வளர்ப்பு."

Wednesday, 2 January 2013

தேங்காய் பால் பாயசம்.

என் முதல் பதிவை  இனிப்புடன் தொடங்கலாம்னு நினைத்தேன்
அதுக்காக எப்பவும் ரெசிப்பி மட்டும்தான் பதிவா போட்டு உங்களை
எல்லாம் கஷ்டப்படுத்துவேன்னு பயந்துடாதீங்க. எனக்கு சமையல்
 நினைவு இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்து கொள்வேன்.
அந்தமாதிரி சமயங்களில் மட்டும் இது போல எதானும் குறிப்பு போடுவேன்.
சரி எல்லாரும் பாயசம் சாப்பிட வாங்க.

தேவையான பொருட்கள்.

பச்சை அரிசி.....................................  ஒருகைப்பிடி அளவுக்கு
காய்ச்சி ஆறவைத்த பால்.............  200 மில்லி
வெல்லம் அல்லது கருப்பட்டி---------------  200 கிராம்
துருவிய தேங்காய்ப்பூ.................................  ஒருமூடி
முந்திரி, திராட்சை.................................................  10,  10
ஏலக்காய்ப்பொடி...........................................  ஒரு டீஸ்பூன்
                     
செய்முறை.
அரிசியை அரைமணி நேரம்  ஊறவைக்கவும்.  நன்கு ஊறியதும் அரிசி தேங்காய்த்துருவலை மிக்சியில் ரவை பக்குவத்தில் அரைத்துக் கொள்ளவும்
                       
அரைத்த விழுதை கூட ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில்
போட்டு அடுப்பை   சிம்மில் வைத்து கை வி டாமல் கிளறிக்கொடுக்கவும்.
சீக்கிரம் அடிப்பிடிக்கும் .  ஸோ கை விடாமல் அரிசி நன்கு வேகும் வரை
                           
கிளறவும். கருப்பட்டியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கரைய விட்டு கல்,
மண் போக நன்கு வடிகட்டிக்கொள்ளவும். அடுப்பில்
                           
கொதித்துக்கொண்டிருக்கும் கலவை நன்கு வெந்ததும் கருப்பட்டி கரைசலைச்
சேர்க்கவும். கருப்பட்டி வாசனை போகும் வரை கிளறவும். நன்கு சேர்த்து கொதித்ததும் கீழே இறக்கி ஆறிய பாலை விட்டு கலக்கவும்.ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சையை  வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்ப்பொடி தூவவும். சுவையான தேங்காய்ப்பால் பாயசம் ரெடி..
                                     
பொதுவாக இந்த பாயசம் வெல்லம் சேர்த்துதான் செய்வாங்க. வெல்லத்தை விட கருப்பட்டி உடல் நலனுக்கு நல்லது. அதனால ஒரு மறுதலுக்காக நான் கருப்பட்டி சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அதனாலதான் உங்க கூடவும் பகிர்ந்து கொள்கிறேன். 
read more "தேங்காய் பால் பாயசம்."

Monday, 31 December 2012

happy newyear

 இன்று புதிய  வலைப்பூ தொடங்கி இருக்கிறேன் நண்பர்களே. நானும் உங்க பக்கம் வந்து பின்னூட்டம் கொடுக்கிறேன். நீங்களும் என் பக்கம் வந்து பின்னூட்டம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தவும் நன்றி.அனை வருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
read more "happy newyear"