Wednesday 9 January 2013

கும்பிடலாம் வாங்க.


கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு புக்கில் படித்த விஷயம். வெரி இண்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சி. அதான் உங்க எல்லாருடனும் ஷேர் பண்ணிக்குறேன்.


எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?

தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?



ஏன் தெரியுமா? நம்ம லைஃப்ல கட்டைவிரல் நம்மை பெத்தவங்கன்னு வச்சுக்குவோம். எப்பவேணா நம்மைவிட்டு விலகிடுவாங்க.ஆள்காட்டிவிரல்

நம்மகூடப்பிறந்தவங்கன்னு வச்சுக்குங்க.அவங்களும் எப்பவேணாலும் நம்மை விட்டு விலகிடலா.ம். இப்ப சுட்டுவிரல் நாமபெத்த குழந்தைகன்னு

வச்சுக்கலாம்.அவங்களும் ஒருஸ்டேஜ்ல நம்மைவிட்டு விலகிப்போயிடலாம்.

ஆனா மோதிர விரலை ஏன் விலக்கமுடியலை????? அது புருஷன் பெண்ட்டாட்டின்னு வச்சுக்கலாம். என்னிக்குமே விலகமுடியாத விலகக்கூடாத பந்தம் கணவன்மனைவி பந்தம்தான். அதனால தான் அந்தவிரல்களை விலக்கமுடியலை. அதை சிம்பாலிக்கா உணர்த்தத்தான்

மோதிரவிரலில் எங்கேஜ் மெண்ட் ரிங்க் போடுராங்க.சரிதானே?????

எல்லாரும் கும்பிட ஆரம்பிச்சுட்டீங்களா. ம் ம் ம் ட்ரை பண்ணிபாருங்க

உண்மை புரியும்.

27 comments:

  1. ஆகா.. என்னே கண்டுபிடிப்பு.. :-)

    ReplyDelete
  2. கோவை ஆவி முதல் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. ஆகா அருமை
    புதிய அரிய விஷயம்
    செய்து பார்த்து அதிசயித்தேன்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ரமணி சார் வருகை புரிந்த்தற்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  5. என்னிக்குமே விலகமுடியாத விலகக்கூடாத பந்தம் கணவன்மனைவி பந்தம்தான்.

    அருமையான பந்தம் ..

    பாந்தமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரிம்மா வருகை புரிந்ததற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிம்மா. அதுக்குள்ள எனக்கு வலைச்சரத்தில் அறிமுகமா? நம்பவே முடியல்லே. ஆச்சரியமான சந்தோஷமா இருக்கும்மா.

    ReplyDelete
  8. நானும் படித்திருக்கிறேன். ஆனால் நிறைய பேருக்கு பகிர செய்துள்ளமைக்கு வாழ்த்துக்கள்! தொடர்க!

    ReplyDelete
  9. மோதிர விரல்தான் கணவன்-மனைவி என்கிற உவமையை விளக்கிய சுவையான பதிவு.
    நன்று!

    ReplyDelete
  10. நல்ல விசயம் பூந்தளிர்.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. உஷா அன்பரசு வருகை புரிந்ததற்கு நன்றிங்க. நாம படிச்ச நல்ல விஷயங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்னுதான் இதை எழுதினேன்.இங்க நிறைய பேரு பார்ப்பாங்க இல்லியா?

    ReplyDelete
  12. நிஜாமுத்தீன் வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிங்க. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  13. நிஜாமுதீன் வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிங்க. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  14. அருணா செல்வம் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  15. நானும் தெரிந்து கொண்டேன் பகிர்தமைக்கு நன்றிகள் பல.
    (வேண்டுகோள்) உங்களின் தளத்தில் பதிவுகளுக்கு மேலே உள்ள google friend connect widget எடுத்து வலது புறமாக அதாவது side bar ஆக வைக்கலாமே இதனால் உங்களின் தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளகிறது

    ReplyDelete
  16. அழகான விளக்கம்...
    உறவுகளில் உன்னதமான உறவிற்கு
    மிகவும் அழகான விளக்கம் கொடுத்தீர்கள்..
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. அட... புது விஷயமாத்தான் இருக்கு. அதேசமயம் நல்லாவும் இருக்கு. பூந்தளிர் தான் படித்த புத்தகத் தேன்களை அடிக்கடி இப்படி சேகரித்துத் தரட்டும்.

    ReplyDelete
  18. அன்பைத்தேடி,,, அன்பு சார் வருகைக்கு நன்றிங்க. நீங்க சொல்லி இருப்பது எனக்கு சரியாக புரியல்லே. புதுசு இல்லியா. கொஞ்சம் சொல்லித்தரீங்களா? என்ன செய்யனும் என்று.

    ReplyDelete
  19. மகேந்திரன் சார் வருகை புரிந்த்தற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  20. மகேந்திரன் சார் வருகை புரிந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க. அடிக்கடி வாங்க,

    ReplyDelete
  21. பால கணேஷ் அண்ணா வருகை புரிந்த்தற்கும் என் பகிர்வு நல்லா இருக்குனு ரசித்ததற்கும் நன்றிங்க. இதுபோல பதிவுபோட்டா இது காபி பேஸ்ட் வகையாக இருக்குமா.?புதுசா வலைப்பூ தொடங்கி இருக்கேன் இல்லியா. நிறையா, நிறையா டௌட்ஸ் இருக்கு. யாரிடம் கேட்டு தெரிஞ்சுக்கன்னு தெரியல்லே.

    ReplyDelete
    Replies
    1. காபி பேஸ்ட் என்பது மற்ற வலைத் தளங்களில் இருந்தும், பத்திரிகைகளின் தளங்களில் இருந்தும் செய்திகளை எடுத்து தானே எழுதியது போல் ஒரு நன்றிக் குறிப்பு கூட இல்லாமல் வெளியிடுவது. அந்தச் செயல் நமக்கு வேண்டாம் பூந்தளிர். பத்திரிகைகளில் ரசிதததை அந்த பத்திரிகையின் பெயர், தேதி (முடிந்தால்) உடன் பகிர்ந்து கொள்வது ரசனையில் அடங்கும். திருட்டில் வராது. எனவே தாராளமாகச் செய்யலாம் அதை. இன்னும் எந்த விளக்கம் வேண்டுமெனினும் bganesh55@gmail.com க்கு மடலிடுங்கள். அல்லது 73058 36166 க்கு பேசுங்கள். எனக்குத் தெரிந்ததை சொல்லி உதவுகிறேன்.

      Delete
  22. அண்ணா ஆலோசனைக்கு நன்றி. நீண்ட மெயில் அனுப்பி இருக்கிறேன் பாருங்க.

    ReplyDelete
  23. மிகவும் சுவாரஸ்யமானதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. சுரேஷ் வருகை புரிந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  25. //என்னிக்குமே விலகமுடியாத விலகக்கூடாத பந்தம் கணவன் மனைவி பந்தம்தான்.

    அருமையான பந்தம் ..

    பா ந் த மா ன

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

    என்றொருவர் கூறியிருப்பது படிக்கவே பாந்தமாக ஜோராக கணவன் மனைவி உறவு போலவே இருக்கிறது.

    இதற்கு மேல் நான் என்ன சொல்ல இருக்கிறது?

    கணவன் மனைவி உறவு தான் கடைசிவரை நீடிக்கும்.

    நடுவில் விட்டுப்போகாது.

    எக்காரணத்தாலும் விட்டுப்போகவும் நாம் விடலாகாது. ;)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  26. வை. கோ. சார் வாங்க, உங்க பின்னூட்டம் படிச்சாதான் நான் எழுதும் விஷயங்களுக்கே பெருமை கிடைக்கிறது.மிகவும் நன்றிங்க.

    ReplyDelete