Friday 11 January 2013

பாடும் ரேடியோ.

எங்க அம்மவின் ஊரில் ஒரு வயசான பாட்டிம்மா இருந்தாங்க. அவங்களுக்கு பழைய சினிமா பாடல் களை எழுதி வைத்துக்கொள்வதில் தனி விருப்பம். அவங்க நோட்புக் காட்டினாங்க. சுமாரா 50, 60 வருஷங்களுக்கு முன் வந்த
பழைய படங்களின் பாடல்கள் இருந்தது, என்ன படம்,   யாரு    பாடி இருக்காங்கன்னு எந்த தகவலும் இல்லே. இப்ப நான் பகிர்ந்துகொள்ளும் பாடல் அவங்க கிராமத்தில் முதல் முதலாக மின்சாரம் வந்தப்போ ஏதோஒரு
படத்தில் வந்தபாடல் பொருத்த்மா இருந்திச்சாம். ரொம்ப வேடிக்கையான பாடலாக இருந்தது. அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

பாடும் ரேடியோ  பட்டனைத்தட்டி விட்டால் பாடும் ரேடியோ.
பல தேசப்பாட்டை இங்கே படித்துக்கொண்டே கேட்க்கலாம்
பாடும் ரேடியோ. பம்பாய், கொல்கட்டா, மதராஸ், டெல்லி.
பச்சைத்தண்ணிக்குள்ளே ஹீட்டர் வச்சதும் வென்னீ வரும்
 காப்பி பொடியைப்போட்டு 10- நிமிஷம் கழிச்சு பார். காப்பியா
டீயா கோக்கோவா? கம கம வென வாசம் வீசும்காபி சொகுசாய்
கரண்டுனுடைய மகிமை சொன்னால் கடவுளுக்கும் மேலே,
காணாத பொருளை எல்லாம் காட்டும் கண் முன்னாலேகரண்டுனுடைய
மகிமையினாலே. குழாயை திருப்பிவிட்டால் கொட்டுது வாட்டர்.  குடம்
தூக்கும் வேலை இல்லே  தீர்ந்தது மேட்டர். இதைத்தொட்டால் ஹாட் வாட்டர்
 அதைத்தொட்டால் கூல் வாட்டர், இது  வென்னி, அது தண்ணி.
கம கமவென, குளு, குளுவென மழை பொழியும் ஷவர்பாத்
ரொட்டி கேக்கை வெட்டிப்பார்   பாலாடை, பசு வெண்ணை, பழமெல்லாம்
எடுத்து பாடம் பண்ணி கை படாமல் டப்பாவில் அடைத்து, பலதேசம்
 நமக்கென்று அனுப்பி வைக்கும்   டின்னு.,டின்னாய் அனுப்பி வைக்கும் சீமை
எங்களுக்கில்லை.இந்த தேசம் விளையா விட்டாலும் கவலை எங்களுக்கில்லை.இது வே மருந்து அலமாரி. தலவலிக்கொரு மாத்திரை, இருமலுக்கொரு மாத்திரை விடியக்கால நேரத்திலே விட்டமின்னு மாத்திர
சாயங்கால நேரத்துலெ வலுவுள்ள மாத்திரே,எல்லாத்துக்கும் மேலிருக்குது
விட்டாமீனு ஏ மாத்திட்ரே, விட்டமீனு மாத்திரே.

இப்படி இந்தப்பாட்டு நீளமாக போய்க்கொண்டே இருக்கிறது. பதிவு
 பெரிசாகிடுமோன்னு பாதியிலேயே நிறுத்திக்கறேன்.

இது போல நிறைய பாட்டுக்கள் எழுதி வச்சிருக்காங்க. அதில் இன்னொரு பாட்டும் மிக ரசனையுடன் இருந்தது. நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்,எஸ் ,கிருஷ்ணனும், அவர் மனைவி மதுரம் அவர்களும் பாடுவதுபோல ஒருபாடல்   குடிச்சு  பழகணும், எல்லோரும் குடிச்சுப்பழகணும், காலையில் பல் தேய்த்தவுடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப்பழகணும் என்று பாடல் ஆரம்ப வரிகள். இப்படி பழையபாடல்கள் கருத்துள்ள வரிகளுடன் இருந்தது. ஒரே பதிவில் எல்லா பாடல்களையும் பதிவிட்டால் பதிவு நீளமாகி படிப்பவர்கள் அலுத்துக்கொள்ளும்படி போரடித்து விடுமே இல்லியா?ஸோ
ஒரு பாடல் பகிர்வுடன் அதுவும் பாதிப்பாடலுடனேயே நிறுத்திக்கொள்கிறேன்.

30 comments:

  1. பாட்டியின் போக்கிஷம்ம்னு சொல்லுங்க .பதிவுக்கு பெருமை

    ReplyDelete
  2. முதல் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. அடடே... என்.எஸ்.கேயின் அநத அருமையான பாடலை சின்ன வயசுலயே கேடடு ரசிச்சதுண்டு பூந்தளிர். ஆனா உங்க பாட்டி எழுதி வெச்ச பழைய பாடல் ரொம்பவே புதுசு எனக்கு. இந்த மாதிரி அருமையான விஷயங்களை பகிர்றப்ப பதிவு நீளமா இருக்கேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ரசிப்பாங்க. அதனால முழுசாவே பகிரத் தயங்காதீங்க. நன்று. என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பொக்கிஷமான இனிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல பாடல் பகிர்வு. காக்க வேண்டிய படைப்புகள். ஆமா என்ன எங்க தளம் வருகை தர மாட்டிங்களோ ?

    ReplyDelete
  6. பாலகணேஷ் அண்ணா வருகை புரிந்ததற்கும் உற்சாகமான பின்னூட்டத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரிம்மா வருகை புரிந்ததற்கு நன்றிம்மா.

    ReplyDelete
  8. சசி கலா உங்க பக்கம் உள்ளவே வரமுடியல்லியே ஏங்க? பின்னூட்டமும் போட முடியல்லே ஃபாலோவராகவும் இணைச்சுக்கவும் முடியல்லே. ஒரே குழப்பமா இருக்குங்க. எப்படி உள்ளே வரணும்னு சொல்லுங்க. பலமுறை வந்து பார்த்தேன் . உள்ளே வரவே முடியல்லே.

    ReplyDelete
  9. அந்தக்காலத்தில் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனும், அவர் மனைவி மதுரமும் நிறையவே இது போல் பாடியுள்ளார்கள்.

    மாவரைக்கும் கிரைண்டர் மிக்ஸி எல்லாம் கண்டுபிடித்து உபயோகத்திற்கு அவை வருவதற்கு பலகாலம் முன்பாகவே இவற்றையெல்லாம் தீர்க்கதரிசி போல உணர்ந்து பாடியுள்ளார்கள் என்பதை நினைத்து நானே பல நேரங்களில் ஆராய்ந்து வியந்து போய் உள்ளேன்.

    நல்லதொரு பகிர்வு, பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  10. பாட்டு அருமையா இருக்குங்க அந்த காலத்து பாட்டு வரிகள் ரசித்தேன். முழுசாவே பதிவிட்டிருக்கலாம் ஆமாங்க சசிகலாவை என்னாலும் பிடிக்க முடியல வாழ்த்துக்கள் பூந்தளிர்

    ReplyDelete
  11. வை.கோ. சார் வருகை புரிந்த்தற்கும், கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  12. எழில் வருகை புரிந்த்தற்கும் கருத்துக்கும் நன்றிங்க. அவங்க தளதுக்குள்ள ஏன் போக முடியல்லே?

    ReplyDelete
  13. அருமையான பாடல்தான்! பழைய பட பாடல்கள் என்றும் ரசிக்க வைக்கும்! முழு பாடலையும் பகிர்ந்திருக்கலாமே! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  14. சுரேஷ் வருகைக்கு நன்றிங்க பதிவு நீளமாக ஆகிடுமோன்னுதான் முழு பாடலையும் போடலே.

    ReplyDelete
  15. அருமையான பொக்கிஷம். தொடர்ந்து பகிருங்கள்.

    ReplyDelete
  16. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete
  17. கோவை2 தில்லி வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  18. எழில் தொடர் வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  19. கரண்டு, தண்ணி எல்லாம் இருக்குன்னு பாட்டு சொல்லுது .. தமிழ்நாட்டு பாட்டில்லைன்னு நினைக்கிறேன்.. ;-)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. போகி அன்று பழைய பொருட்களை தூக்கிப் போடலாம்.பழைய பாடல்களை தூக்கிப் போடா முடியாது அருமை.
    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. கலைவாணரின் அந்தப்பாடலும்....
    உங்களின் பாடல் பகிர்வும்..
    மனதுக்கு இதமாய் இருந்தது...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. கோவை ஆவி ஹ ஹ ஹ ஆமாங்க. எனக்கும் அப்படித்தான் தோனுது. வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  23. டி. என். முரளீதரன் வருகை புரிந்ததற்கு கருத்துக்கும் நன்றிங்க. என்றுமே ஓல்ட் இஸ் கோல்ட் தானே?

    ReplyDelete
  24. கவிஞர் கி. பாரதி தாசன் ஐயா, வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. மகேந்திரன் சார் வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  27. நல்லதொரு பொக்கிஷப் பகிர்வு.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  28. ரஞ்சனிம்மா, வாங்க வாங்கம்மா. வருகை புரிந்த்தற்கு நன்றிங்க. அடிக்கடி வாங்க. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்மா.

    ReplyDelete
  29. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. மகேந்த்திரன் சார் வருகை புரிந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete