Thursday 17 January 2013

தங்கமே தங்கம் (2)

”வீட்டுல உன் அப்பா 7 மணிக்கு எழுந்ததும் என்னைத்தேடிப்பார்த்திருக்கான்”. ”பால் வாங்கப்போன அம்மாவை இன்னும் காணோமேன்னு பதறிப்போயி சைக்கிளை எடுத்துக்கொண்டு  நான் வழக்கமாக போகும் மெயின் ரோடில் 

பதட்டமாகத்தேடிக்கொண்டு போயி பூத்ல போயி அங்கு இருந்தவரிடம்  ”அம்மா வந்தாங்களா?” என்று பதட்டமுடன் கேட்டான்.
”இல்லியே தம்பி.  நான் கூட ஏன் அம்மா இன்று வரலேன்னு நினைச்சேன். ஒரு வேளை உடம்புக்கு சுகமில்லியோன்னு   நினச்சேன் தம்பி.” என்றார். என்னாச்சு தம்பி, ரொம்ப பதட்டமாக இருக்கீங்க/ என்று கேட்கவும்

”இல்லே அண்ணாச்சி, அம்மா வழக்கம் போல காலை பால் வாங்க கிளம்பிட்டாங்க.  வீட்ல பால் பாட்டில் கார்டு  எதுவும் இல்லீங்க. அதான் தேடிகிட்டு வந்தேன்”. என்று சொல்லி விட்டு மறுபடியும் தேட ஆரம்பித்தான், அந்தமுட்டுச்சந்து வந்ததும் அதில் திரும்பினான்.   ரோட்டில் பால் பாட்டில் 

சிதறி   கார்ட் ஒரு புறம், பால் பை   ஒருபுறமாக விழுந்து கிடந்ததைப் பார்த்தவன்சுற்றுமுற்றும் தேடினான். ம்  ம்  ம் என்று  சாக்கடையில் இருந்து முனகல் சப்த்தம் வரவே அங்குபோய்ப்பார்த்ததும்   அதிர்ந்து போனான். ”அம்மா, அம்மா என்னாச்சும்மா ?”என்று கேட்டவாறே அவளைத்தூக்கினான். 

பொட்டு நகை இல்லாமல் அம்மாவைப்பார்த்ததுமே அவனுக்கு புரிந்து விட்டது இது நகைக்காக நடந்த திருட்டென்று.

அம்மாவைப்பார்த்தான் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. புடவை ரவிக்கை எல்லாம் சாக்கடையின் அழுக்கு தண்ணீரின் கெட்ட வாசம்.

மெதுவாக அம்மாவை சைக்கிளின் பின் புறம் உக்காத்தி வைத்து  பக்கத்தில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போனான்.  தலைக்காயத்தை துடைத்து கட்டுப்போட்ட டாக்டர்’ என்னாச்சுப்பா ?”என்றார்.
அவரிடம் மறைக்க முடியாமல்    எல்லாம் சொல்லி கிளம்பினார்கள்.

” சார் போலீஸ் ஸ்டேஷன் போயி ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துருங்க. அது நல்லது. இப்படி ரத்தகாயம் வரும்படி அடிச்சுப்போட்டு நகை எல்லாம் திருடி இருக்காங்க.சும்ம விடக்கூடாது அவங்களை” என்றார் டாக்டர்.
 சரி டாக்டர். என்று சொல்லிவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள். பாலைக்காய்ச்சி காப்பி போட்டு அம்மாவுக்கும் கொடுத்துவிட்டு அவனும் குடித்தான்.

” என்னடாப்பா ஆபீசுக்கு நேர மாகுதே நீ கிளம்பு, இன்னிக்கு ஒரு நாள் காண்டீன்ல சாப்பிட்டுக்கோ ” என்றாள் அம்மாக்காரி.
” என்னமா விளையாடுரியா? உன்ன இந்த நிலமைல விட்டுட்டு நான் எப்படி ஆபீசுக்கு போக முடியும் இன்னிக்கு லீவுதான். நீ பேசாம படுத்து ரெஸ்ட் எடு. நான் பாக்கி வேலையெல்லாம் பார்த்துக்கொள்கிறேன்”  என்றான்.
சொன்னபடியே வீட்டு வேலைகள் எல்லாம் செய்து  சமையலையும் செய்து முடித்து   தாயும் மகனுமாக சாப்பிட்டு முடித்தார்கள்.

”கண்ணா அந்த டாக்டர் சொன்னது போல போலீஸ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடலாமா? 20 பவுன் நகைடா. உன் அப்பா ஆசை ஆசையாக செய்து போட்ட நகைகள் . மனசேஆறமாட்டேங்குதுபான்னு”  அம்மா கலங்கி அழவே ஆரம்பித்துவிட்டார்கள்.
”அழாதீங்கம்மா நகை தானே வேற நானே பண்ணிப்போடறேன் உனக்கு ஒன்னும் ஆகல்லியே அதை நினைச்சு சமாதானப்படுத்திக்கொள்ளணும்மா.”

“ போலீஸ் கம்ப்ளைண்டுன்னு போனா இழுத்தடிப்பாம்மா. அபீசுக்கு என்னால அடிக்கடி லீவெல்லாம் போடமுடியாதும்மா.புரிஞ்சுகோ.” என்றான் மகன்.

“அதுக்கில்லேடா உன் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒவ்வொரு காசா சேர்த்து ஆசை , ஆசையா பண்ணி தந்த நகை. குழந்தைக்குன்னு நீ கேட்டப்போ கூட நா கழட்டிதரமாட்டேன்னுட்டேன். இன்னிக்கு யாரோ ஒருவன்

எல்லாத்தயும் சுருட்டிண்டு போயிட்டானே. அப்படியே எப்படிப்பா விடமுடியும்”? சரி உன் சவுரியம் பாத்துக்கோ என்று சொல்லி அமைதி ஆனாள்.
அம்மாவின் வாட்டமான முகம் மகனுக்கு பாக்கவே முடியல்லே. சரி ஆனது ஆகட்டும் என்று அம்மவைக்கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி போனான்.
                                                                                                                 (தொடரும்.)

42 comments:

  1. தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? -

    http://mytamilpeople.blogspot.in/2013/01/get-file-size.html

    ReplyDelete
  2. சார் என்ன சொல்ரீங்க புரியல்லே. வேர எங்கியானும் போடவேண்டிய கமெண்ட் மறந்து போயி இங்க போடீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அவர் தளத்துல இன்னிக்கு போட்ருக்கற பதிவைப் படிக்கச் சொல்றாரும்மா. அதான் விஷயம்.

      Delete
    2. ஓ, அப்படியா? எனக்குதான் சரியா புரியல்லே.

      Delete
  3. நமக்குமே மனசு ஆறலியே !

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரவாணி வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

      Delete
  4. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன மகனின் அனுபவங்களைத் தெரிநது கொள்ள ஆவலுடன் காத்திருக்கேன் நான். நல்லாவே சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு கதை. வாழ்த்துக்கள்மா.

    ReplyDelete
    Replies
    1. வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றி கணேஷண்ணா.

      Delete
  5. அருமை. அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டும்படியான இடத்தில் தொடரும் போடுகிறீங்க.சிறப்பாக இருக்கு. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ராம்வி வாங்க, வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  6. அன்புள்ள பூந்தளிர்,

    காலை வணக்கம்.

    கதையோட்டம் தெள்ளத்தெளிவாகவே போகிறது. சந்தோஷம்.

    நேற்று இரவு முழுவதும் தூங்காமல், பிறகு விடியற்கால 5 மணிக்குத் தூங்கிப்போய் இப்போது 12 மணிக்கு மேல் தான் எழுந்துள்ளேன்.

    நிறைய பேச வேண்டியது உள்ளது.

    மீண்டும் தாமதமாக வருவேனாக்கும். ஜாக்கிரதை! ;)))))

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
    Replies
    1. கோபால் சார் நல்லா ரெஸ்ட் எடுத்துகிட்டு நிதானமா வாங்க.

      Delete
  7. //அந்தமுட்டுச்சந்து வந்ததும் அதில் திரும்பினான். ரோட்டில் பால் பாட்டில் உடைந்து சிதறி கார்ட் ஒரு புறம், பால் பை ஒருபுறமாக விழுந்து கிடந்ததைப்பார்த்தவன் சுற்று முற்றும் தேடினான். ம் ம் ம் என்று சாக்கடையில் இருந்து முனகல் ச ப் த ம் வரவே அங்குபோய்ப்பார்த்ததும் அதிர்ந்து போனான். //

    நல்லவேளையாக அந்தப்பக்கமாகப்போய்ப் பார்த்தானே!

    சாக்கடை நீர் கிழவியை அப்படியே அடித்துச்செல்லாமல், அப்படியே அவள் அங்கேயே உயிருடன் முனகிக்கொண்டு இருந்ததும் அதிர்ஷடம் தான்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபால் சார் கதையை வரிக்கு வரி ரசிச்சிருக்கீங்க. சாக்கடையில் தண்ணி எங்க ஓடுது. குட்டையா தேங்கித்தானே நிக்குது.:)))))

      Delete
  8. //பொட்டு நகை இல்லாமல் ’அ ம் மா’ வைப்பார்த்ததுமே அவனுக்கு புரிந்து விட்டது இது நகைக்காக நடந்த திருட்டென்று.//

    ஆஹா, அவன் டக்குன்னு புரிந்து கொண்டது புத்திசாலித்தனம் தான்.

    [அம்மாவின் காலை ஏனோ நீங்கள் உடைத்து ’அம்மவை’ என ஆக்கி விட்டீர்கள்.

    ஒரு சமயம் சாக்கடையில் விழுந்த போது அம்மாவுக்கு கால் உடைந்து போயிருக்குமோ? ;))))) ]

    { இது தான் என் எனிமா. எனிமா = பின்னூட்டம் }


    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா, அம்மாவுக்கு காலை ஒட்ட வைத்துவிட்டேன் சார். எனிமா பின்னூட்டம் நா இதுதானா. ஒக்கே, ஒக்கே.

      Delete
  9. /இப்படி ரத்தகாயம் வரும்படி அடிச்சுப்போட்டு நகை எல்லாம் திருடி இருக்காங்க.சும்ம விடக்கூடாது அவங்களை என்றார் டாக்டர்.
    சரி டாக்டர். என்று சொல்லிவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள்.//

    டாக்டருக்கு என்ன; எதையாவது ஈஸியாகச் சொல்லிவிடுவார். போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்து பார்க்கும் நமக்கல்லவோ அதன் கஷ்டங்கள் தெரியப்போகிறது!

    ஆனாலும் கதையை இழுத்துச்செல்ல இது உதவத்தான் போகிறது. ;)

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க கதையை இழுத்துச்செல்ல அந்த சம்பாஷணைகள் தேவையாதான் இருந்திச்சு. நல்லாவே அலைய வச்சாங்கதான்.

      Delete
  10. //பாலைக்காய்ச்சி காப்பி போட்டு அம்மாவுக்கும் கொடுத்துவிட்டு அவனும் குடித்தான்.//

    // நீ பேசாம படுத்து ரெஸ்ட் எடு. நான் பாக்கி வேலையெல்லாம் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.//

    //சொன்னபடியே வீட்டு வேலைகள் எல்லாம் செய்து சமையலையும் செய்து முடித்து தாயும் மகனுமாக சாப்பிட்டு முடித்தார்கள்.//

    ஆஹா! நல்ல பையன், என்னைப்போலவே “அம்மாக்கோண்டு” போலிருக்கு, ;)


    >>>>>>>.

    ReplyDelete
    Replies
    1. ஆமாமாம், உங்களைப்போலவே தான். அம்மா கோண்டுவே தான். :)))))))))). அம்மா கோண்டு ஆனாலும் நல்ல பையன் இல்லியா?

      Delete
  11. பரவாயில்லை நல்லாவே கதை விடறீங்களே சாரி சாரி கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களே ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எழில் ஹா ஹா, கதை நல்லா விடுரேனா?ஓஒ கோபால் சார்க்கு நடுவில் இருந்து கமெண்ட் போடுரீங்க இல்லே. அதான் . ஒக்கே ஒக்கே. கருத்துக்கு நன்றிங்க.

      Delete
  12. //அழாதீங்கம்மா நகை தானே; வேற நானே பண்ணிப்போடறேன்; உனக்கு ஒன்னும் ஆகல்லியே; அதை நினைச்சு சமாதானப் படுத்திக் கொள்ளணும்மா.//

    சும்மாவா, 20 பவுன் நகையாச்சே; இன்றைய மதிப்புக்கு சுளையா ஐந்து அல்லது ஆறு லக்ஷம் அல்லவோ.

    தனக்கு ஒண்ணும் ஆகாமல் பிழைத்து வந்ததால் மட்டுமே அந்தப் பாட்டியால் நகையை நினைத்து, அழுது புலம்ப முடிகிறதூஊஊஊ..

    பின் ’நகை’யை இழந்தவள் ’புன்னகை’யா புரிய முடியும் என நீங்கள் சொல்வதும் புரிகிறதூஊஊஊ.

    >>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமா பொன் நகையை இழந்தவங்க எப்படி சார் புன்னகை பண்ண முடியும் ? சரிதானே நான் சொல்ரது?

      Delete
  13. //அம்மாவின் வாட்டமான முகம் மகனுக்கு பாக்கவே முடியல்லே.
    சரி ஆனது ஆகட்டும் என்று ’அ ம் மா’ வைக் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி போனான்.//

    அச்சச்சோ! போலீஸ் ஸ்டேஷனுக்கே போயாச்சா?

    பிறகு என்னென்ன கூத்துகள் நடக்குமோன்னு நினைத்தாலே எனக்கு ஹேண்டும் ஓடலை, லெக்கும் ஆடலை.

    நல்ல விறுவிறுப்பான இடத்தில் “தொடரும்” வேறு. ஜோர் ஜோர்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பிள்ளை முதல்லயே சொன்னான் போலிசெல்லாம் ரொம்ப இழுத்தடிப்பாங்கன்னு. அந்த அம்மா தானே கேக்கல்லே. அவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடவேண்டி வந்ததே.

      Delete
  14. இந்தப் பதிவினில் உள்ள ஒரு சில குறைபாடுகளை மெயில் மூலம் தனியாகச் சொல்லுவேன்.

    அவற்றைப் பின்பற்றினால் தங்கள் பதிவு, மேலும் அழகுக்கு அழகூட்டக்கூடியதாக இருக்கும்.

    Bye for Now.

    பிரியமுள்ள
    கோபு

    ooooo

    ReplyDelete
    Replies
    1. உங்க மெயிலுக்காக காத்திருக்கேன். வழிகாட்ட இப்படி ஒரு நல்ல வழிகாட்டி இருக்கும்போது எனக்கென்ன கவலை. பிச்சு உதறிடுவேன் இல்லே?

      Delete
  15. அடடா... நகைக்காக இப்படி ஆகிவிட்டதே... அடுத்து என்ன ஆச்சு என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் சார், அடுத்தபகுதிக்கு வெயிட் பண்ணுங்க.வருகை புரிந்ததற்கு நன்றி.

      Delete
  16. நிஜாமுதீன் உங்க கமெண்ட் பப்லிஷ் பண்ணினேன் . ஆனா இங்க தெரியல்லே? ஏன்? இதுபோல தகுந்த அறிஉரைகள் கூறி வரவும். நன்றி.

    ReplyDelete
  17. விறுவிறுப்பாக செல்கிறது தொடர்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் வருகை புரிந்ததற்கு நன்றி. வரேன் உங்க தளத்திற்கும்.

      Delete
  18. பூந்தளிர்...
    கதையைப் படித்து வருகிறேன்.
    'சிறுகதை' என்று போட்டு விட்டு தொடர்கதையாகக் கொண்டு போகிறீர்களே?

    ReplyDelete
    Replies
    1. நிஜா முதீன் சிறு தொடர் என்று லேபில் மாத்திட்டேன். இப்ப ஓகேவா?

      Delete
  19. இந்த அத்தியாய்த்தின் ஆரம்பம்... பாட்டி தன்னிலையில் கூறுவதுபோல் ஆரம்பித்து, தொடர்ச்சி, வர்ணனையாளர் (அதாவது நீங்கள்) சொல்வதுபோல் மாற்றம் கண்டு விட்டதே? ஏன்? இதைப்போல் வராமல் இனி பார்த்துக் கொள்ளவும். (2)

    ReplyDelete
    Replies
    1. நிஜாமுதீன் சார், முதல் முறையாக கதை எழுத ட்ரை பண்ணி இருக்கேன். அதான் சில விஷயங்கள் தெரிஞ்சுக்காம இருந்துட்டேன்.இனி கவனமாக இருக்கேன். அப்பப்ப வந்து சரி தவறு சுட்டிக்காட்டுங்க. ஆனாதானே என்னைன் திருத்திக்க முடியும் இல்லியா? நன்றி

      Delete
  20. தளிரின் ரசனையில் "நிஜாம் பக்கம்"-மும் இடம் பிடித்துள்ளதா? மகிழ்ச்சி!

    (3)

    ReplyDelete
  21. //பூந்தளிர்18 January 2013 23:57

    நிஜாமுதீன் உங்க கமெண்ட் பப்லிஷ் பண்ணினேன் . ஆனா இங்க தெரியல்லே? ஏன்? இதுபோல தகுந்த அறிஉரைகள் கூறி வரவும். நன்றி.//

    கதையின் முதல் அத்தியாயத்தில் பப்ளிஷ் ஆகியுள்ளது. பாருங்கள்..(4)

    ReplyDelete
  22. சரியா கவனிக்காம சொதப்பலா ரிப்லை கமெண்ட் போட்டிருக்கேன். சரியான முந்திரிக்கொட்டை குணம் இல்லே?

    ReplyDelete
  23. இரண்டாவதும் வாசித்தேன் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete