Tuesday 15 January 2013

தங்கமே தங்கம். (1)

பாக்கியத்தம்மாவும், பேத்தி ரீமாவும் கோவிலில் ஸ்வாமி தரிசனம் முடிந்து வாசலில் வந்து உட்கார்ந்தார்கள்
.ரீமா கண்ணு நீ மேலே என்ன பண்ணப்போற்தா இருக்கே?
 படிப்புதான் முடிச்சுட்டியே?
பாசத்துடன் பேத்தியைப்பார்த்து கேட்டாள் பாட்டிம்மா.
 ஆமா பாட்டி எனக்கு ஜர்னலிஸ்டா ஆகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.
  ஓ, அப்படியா உனக்கு  எது விருப்பமோ அப்படியே செய். ஜர்னலிஸ்டுன்னா  கண்ணையும் காதையும் நல்லா திறந்து வச்சுக்கணும் நாம பார்க்குற, கேட்குற விஷயங்களை நல்லா உள் வாங்கிகணும். எல்லாரும் ரசிக்கும் படியாக சுவாரசியமா எழுதத்தெரிஞ்சுக்கணும்மா.என்று பாட்டி அறிவுரை சொன்னாங்க.
 ஆமா பாட்டிஅது எனக்கும் தெரியும் . நான் அதற்கு முயற்சி செய்யலாம்னு நினைக்கிறேன் என்றாள். ரீமா.
 ஓ க்கே ஆல் த பெஸ்ட் என்று பாட்டி மனது நிறையா வாழ்த்தினாள். ரீமாவுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள் கேட்டு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.

 சரி பாட்டி முத்ல்ல உங்க கிட்டேந்தே விஷயங்கள் முதலில் தெரிந்து கொள்கிறேன்.சொல்லுங்க. நீங்க ஏன் கழுத்திலோ கையிலோ காதிலோ நகை ஏதுமே போட்டுக்கமாட்டீங்கறீங்க? நகை பிடிக்காதா உங்களுக்கு? என்றாள்.
 எனக்கா நகை பிடிக்காது? ரொம்ப, ரொம்ப பிடிக்கும், உன் தாத்தாவும் என் ஆசையைப்புரிந்து கொண்டு ஆசை ஆசையா புதுசு புதுசா நகை கள் வாங்கித்தருவாங்க. கழுத்து நிறைய சங்கிலி, கை நிறைய வளையல்கள்  விரல் களில் மோதிரங்கள் காதில் வைரக்கம்மல் என்று எல்லாம் போட்டுக்கொண்டிருந்தேன்மா. என்று பாட்டி சொல்லவும்,
 அப்போ அதெல்லாம் இப்ப எங்க? என்ற பேத்தியிடம்
 அது ஒரு பெரிய கதைமா என்றாள் பாட்டி.
 ஓ ப்ளாஷ்பேக்கா. சொல்லு சொல்லு என்று ஆவலுடன் ரீமா கேட்கவும் பாட்டி பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

 நீ பிறக்கும் முன்பு நடந்த நிகழ்ச்சிம்மா. உன் அம்மா பிரசவத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தா. உன் அப்பாவும் நானும் மட்டும்தானே வீட்டில். உன் அப்பா மத்திய அரசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். காலை 7.30-க்கு வீட்டைவிட்டு கிளம்பி போனா இரவு 7-மணிக்கு திரும்பி வருவான். அவனுக்கு காலை உணவு  மதிய உணவு எல்லாம் ரெடி பண்ண நான் காலை 5 மணிக்கே எழுந்து டிபன் லஞ்ச் எல்லாம் செய்து கொடுப்பேன். தினசரியுமே காலேல 5.30-க்கு பால் பூத் போயி பால் வாங்கி வந்துடுவேன். உன் அப்பா கூட சொல்லுவான். நீ ஏம்மா பால் வாங்கப்போறே? நான் போயி வாங்கி வருவேனே என்று. அலுத்து சலித்து வரும் மகன் அடிச்சுப்போட்டாப்ல தூங்கும் போது எழுப்ப மன்சே வராது. அதுவும் இல்லாம எனக்கு நகை களுக்கு பிறகு மிகவும்பிடித்தவிஷயம் காப்பி.காலை ஃப்ரெஷ் பாலில் ஃப்ரெஷ் டிகாக்‌ஷன் கலந்து காப்பி குடிக்க ரொம்பவே பிடிக்கும். அதுவும் இல்லாம எனக்கு மார்னிங்க் வாக்கிங்க் போனது போலவும்  இருக்குமில்லியா ? அதான் நானே போய் வந்துடுவேன். ரொம்ப தூரமெல்லாம் இல்லே. நடந்து போகும் தூரத்தில்தான் பூத் இருந்தது. முன்னேல்லாம்  பால் பாட்டில்களில் வந்தது. பால் கார்ட், பாட்டில்கள் எடுத்துகொண்டு பூத் போயி வர அரைமணி நேரம் கூட ஆகாது.

 நீ பிறந்த செய்தி வந்ததும் உன் அப்பா என்னிடம் அருமையா பேத்தி பொறந்திருக்கா. உன்கிட்டேந்து ஒரு பவுன் நகையைத்தா. குழந்தைக்கு இடுப்புக்கு அரஞாண், வளை, மோதிரம் பண்ணிண்டு குழந்தையை பாத்துட்டு வரலாம்னு சொன்னான். அப்பவும் கூட நான் என் நகையை கழட்டிக்
கொடுக்கலே. நீ குழந்தைக்கு புதுசாவே வாங்கிக்கோன்னு சொன்னேன்.
அப்படி ஒரு நாள் பால் வாங்கப்போகும் போது டயம் சரியா பாக்காம ரொம்ப சீக்கிரமே போயிட்டேன் போல இருக்கு. பௌர்ணமி நிலாவின் வெளிச்சம் ஊர் பூராவும்  லைட்டு போட்டது போல இருந்தது.எப்பவுமே மெயின் ரோடு வழியா சுத்திகிட்டுதான் போவேன். அன்று என்னமோ தோணித்து, ஒரு முட்டுசந்து வழியா போயிட்டேன். கொஞ்ச தூரம்தான் போயிருப்பேன் பின்னாடிலேந்து யாரோ மண்டையில் ஏதோ கனமான பொருளால ஓங்கி அடிச்சது மட்டும்தான் நினைவில் இருக்கு. வேர எதுவுமே நினைவில் இல்லே.அப்படி அடிச்சவன் என் நகை ஒன்னு விடாம கழட்டிண்டு என்னையும் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் உருட்டி விட்டுட்டு போயிட்டான்.இது ஒன்னுமே எனக்குத்தெரியாம மயங்கிட்டேன்.

அச்சச்சோ,  அப்புறம் என்னாச்சு பாட்டி, என்னமோ திரில்லிங்க் ஸ்டோரிகேக்குரா மாதிரி இருக்கு, சொல்லு, சொல்லு என்று பேத்தி அவசரப்படுத்தவும், இருடி சொல்லிகிட்டேதானே வரேன்.
                                                                                                                          (தொடரும்.)

33 comments:

  1. பாட்டி பாவங்க !
    ம்ம்ம்.. அப்புறம் ...

    ReplyDelete
    Replies
    1. ம்ம் அடுத்து சொல்வாங்க. தவறாம வந்துடுங்க ஸ்ரவாணி.முதல் வருகைக்கு நன்றி

      Delete
  2. ஆஹா, தலைப்பைப்படித்ததும் நான் எழுதிய என் குட்டியூண்டு நகைச்சுவைக்கதை நினைவுக்கு வந்ததூஊஊஊ.

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_691.html
    தலைப்பு: “தங்கமே தங்கம்”

    என் அந்தத் தலைப்பையே தேர்ந்தெடுத்துள்ள் ”தங்கமே தங்கம்” ஆகிய தங்களுக்கு என் வாழ்த்துகள்.

    இனிமேல் தான் தங்களின் இந்தப்பதிவினை நான் பொறுமையாகப் படிக்க வேண்டும். மீண்டும் நான் எனக்கு நேரம் கிடைக்கும் போது வருகை தந்து எனிமா கொடுப்பேன். [எனிமா = பின்னூட்டம்] ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  3. இந்தக்கதையை அருமையாகத் தொடங்கி இருக்கீங்கோ. சபாஷ்.

    //ஜர்னலிஸ்டுன்னா கண்ணையும் காதையும் நல்லா திறந்து வச்சுக்கணும் நாம பார்க்குற, கேட்குற விஷயங்களை நல்லா உள் வாங்கிகணும். எல்லாரும் ரசிக்கும் படியாக சுவாரசியமா எழுதத்தெரிஞ்சுக்கணும்மா, என்று பாட்டி அறிவுரை சொன்னாங்க. //

    இப்படி அறிவுரை சொன்ன பாட்டியை எனக்கு ரொம்பவும் பிடிச்சுப்போச்சு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஓ பாட்டியை ரொம்பவும் பிடிச்சு போச்சா. நல்லது. தொடர்ந்து வாங்க சார். நன்றி

      Delete
  4. //காஃபி. காலை ஃப்ரெஷ் பாலில் ஃப்ரெஷ் டிகாக்‌ஷன் கலந்து காஃபி குடிக்க ரொம்பவே பிடிக்கும்.//

    ஐயோ இந்தப்பாட்டி என்னைப்போலவே இருக்காங்கோ.

    எனக்கும் அப்படித்தான். எல்லாம் ஃப்ரெஷ் ஆகவே இருக்கணும்.

    ஆனால் நான் அடிக்கடி காஃபி குடிப்பேனாக்கும். திக்கா ஸ்ட்ராங்காக இருக்கணும். நிறைய நுரையுடன், சூடாக, பெரிய டம்ளரில் வழிய வழிய, ஆத்திக்கொள்ள டவராவுடன் வேண்டும் எனக்கு.

    இந்தப்பாட்டி எப்படியோ தெரியவில்லை.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அவங்களுக்கும் டபரா டம்ப்ளரில் நுரை பொங்க ஆத்தி குடிக்கணும்தான்.அவங்களுக்கு ஜீனி தூக்கலா இருக்கணும்.பெரிய வெங்கல டம்ளரில் குடிச்சாதான் அவங்களுக்கு திருப்த்தி.

      Delete
  5. //பௌர்ணமி நிலாவின் வெளிச்சம் ஊர் பூராவும் லைட்டு போட்டது போல இருந்தது.//

    நல்ல உதாரணம்.

    //எப்பவுமே மெயின் ரோடு வழியா சுத்திகிட்டுதான் போவேன். அன்று என்னமோ தோணித்து, ஒரு முட்டுசந்து வழியா போயிட்டேன். கொஞ்ச தூரம்தான் போயிருப்பேன் பின்னாடிலேந்து யாரோ மண்டையில் ஏதோ கனமான பொருளால ஓங்கி அடிச்சது மட்டும்தான் நினைவில் இருக்கு.//

    அடடா, அட ராமா, அடப்பாவமே!

    //வேறு எதுவுமே நினைவில் இல்லே.அப்படி அடிச்சவன் என் நகை ஒன்னு விடாம கழட்டிண்டு என்னையும் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் உருட்டி விட்டுட்டு போயிட்டான்.//

    அச்சச்சோ .... ஓடும் சாகடையில் உருட்டி விட்டுட்டாங்களா? பாவிப்பசங்க .... பாவம் அந்தப்பாட்டி.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, அந்தப்பாட்டி சொல்லும்போதே பேத்தி ரீமாவுக்கும் இப்படித்தான் ஆத்திரம் பொத்துகிட்டு வந்திச்சு.

      Delete
  6. //”அச்சச்சோ, அப்புறம் என்னாச்சு பாட்டி, என்னமோ திரில்லிங்க் ஸ்டோரிகேக்குறா மாதிரி இருக்கு, சொல்லு, சொல்லு”

    என்று பேத்தி அவசரப்படுத்தவும், ”இருடி சொல்லிகிட்டேதானே வரேன்.” என்றாள் பாட்டி.//

    என்னைப்போலவே சூப்பரான இடத்தில் “தொடரும்” போட்டுட்டீங்கோ.
    பலே பலே .... சபாஷ் .... வெரி குட்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

      Delete
  7. தங்கமே தங்கமாக அருமையாக தொடர்..

    ReplyDelete
    Replies
    1. இரஜராஜேஸ்வரிம்மா வருகை புரிந்ததற்கு நன்றிம்மா.

      Delete
  8. அட இண்ட்ரஸ்டிங்கா ஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ், வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

      Delete
  9. திருடன் பறிச்சுக்கிட்டுப் போனதால பாட்டிக்கு நகைஙக மேல ஆசை போயிடுச்சு போலருக்கு. பெண்களுக்கு பாதுகாப்புல விழிப்புணர்வு எவ்வளவு அவசியம்ங்கறதுக்கு இன்னொரு அழகான உதாரணம். தொடரட்டும் கதை... காத்திருக்கேன் ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் அண்ணா, உங்க பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  10. அடடா.... பாட்டி நகையெல்லாம் பறிகொடுத்துட்டாங்களே.... அப்புறம் என்னாச்சு.... காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் சார் வாங்க அடுத்த பதிவுல தொடருகிறேங்க. வந்துடுங்க. நன்றி

      Delete
  11. வை. கோ. சார் நீங்களும் இந்த தலைப்புல பதிவு போட்டிருக்கீங்களா. இன்னும் பாக்கலியே. உங்க தலைப்பை காபி பண்ணிடெனோ? வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றி. ஏன் சார் எனிமா கொடுப்பேன்னு வயித்துல புளியை கரைக்கிரீங்க? பயம்மா இருக்கே.

    ReplyDelete
  12. உஷாஸ்ரீ குமார் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  13. மனோ மேடம் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. மிகவும் சிறப்பாக ஒரு சமூக விழிப்புணர்வைக் கொடுக்க வல்ல
    தொடர் கதை ஒன்றினைத் தொடர்ந்துள்ளீர்கள் தோழி .மிகவும்
    சுவாரசியமாகவும் உள்ளது இத் தொடர் !...வாழ்த்துக்கள் மென்மேலும்
    சிறப்பாகத் தொடரட்டும் .அன்போடு கருத்திட்டு வந்த தங்கள் தளத்தினை
    காலப் பற்றாக் குறை காரணமாக அவதானிக்கத் தவறி விட்டேன்
    மன்னிக்கவும் .இனி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள்
    ஆக்கத்தினையும் கண்டு மகிழ்வேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
    Replies
    1. அம்பாளடியாள் முதல் வருகையா. உங்க பக்கம் அடிக்கடி வந்து உங்க கவிதையெல்லாம் ரசிப்பேன். அடிக்கடி வாங்க. நன்றி

      Delete
  15. 'என்னமோ திரில்லிங்க் ஸ்டோரி கேக்குரா மாதிரி இருக்கு"

    Engalukkum thaan.. kalakkunga..!

    ReplyDelete
    Replies
    1. கோவை ஆவி வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  16. அட!! சஸ்பன்ஸ்ல நிறுத்திடீங்களே??பாட்டி ரொம்ப பாவம்.
    அடுத்த பதிவையும் படிக்கிறேன்.

    ReplyDelete
  17. விறுவிறுப்பாகத் தொடர்கிறது.

    ReplyDelete
  18. உரையாடல் ஆரம்பம், முடிதல் ஈர் இடங்களிலும் " என்கிற குறியிடுங்கள்.
    முடிக்கும்போது 'என்றாள் பாட்டி.' என்கிற வார்த்தைகளுடன் முடிக்கலாம்.

    ReplyDelete
  19. நிஜாமுதீன் சார் வருகை புரிந்ததற்கும் சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனை கூறியதற்கும் நன்றி.

    ReplyDelete
  20. முதலாவது வாசித்தேன் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. விறுவிறு கதை.விதியின் செயலோ?,தொடருங்கள்

    ReplyDelete