Sunday 31 March 2013

ஆட்டோ காரர்

என் வீட்டுக்காரரின் நண்பரும் அவர் மனைவியும் சமீபத்தில் மும்பை சென்று
வந்தபோது சந்தித்த ஒரு அனுபவத்தை உங்க கூட பகிர்ந்து கொள்கிறேன்.
 அவங்க சொல்வது போல சொல்றேன்

 நாங்க பாந்த்ரா என்னுமிடத்திலிருந்து அந்தேரி என்னுமிடத்திற்கு போகவேண்டி ஆட்டோவுக்காக காத்துக்கொண்டிருந்தோம். அப்ப
ஒரு ஆட்டோ வந்தது. அது கொஞ்சம் வித்யாசமாக இருந்தது.ஓட்டுனர்
இருக்கைக்கு மேலே ஒரு குட்டி டி.வி. பெட்டி இருந்தது. அதில் தூர்தர்ஷன்
 சேனல் போயிட்டு இருந்தது.அதுமட்டுமில்லே கீழே ஒரு ஃப்ர்ஸ்ட்எயிட்
பாக்ஸ், அதில் பஞ்சு,டெட்டால்,சில அத்தியாவசிய மருந்து பொருட்களும்
இருந்தது.

 நான் மறுபடியும் சுற்று முற்றும் பார்த்ததில் சின்ன ரேடியோ, நெருப்பணைக்கும்கருவி, காலண்டர், எல்லா மத கடவுள்களின்
சின்ன சின்ன படங்கள், எல்லா மத அடையாளங்களைக்குறிக்கும்
படங்கள்,அதாவது, இஸ்லாம், கிறிடியன், புத்திசம், ஹிந்துயிசம்
என்று எல்லாமே இருந்தது. ஆட்டோ மட்டும் வித்யாச்மானது இல்லே
 ஓட்டுனரும் வித்யாசமானவராகத்தான் இருப்பார் போலன்னு நினைத்து
அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

முதலில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருந்தாராம். அது நஷ்டத்தில் ஓடினதால் கம்பெனி மூடிட்டாங்களாம்.
 வெற வழி இல்லாம ரிக்‌ஷா ஓட்ட ஆரம்பித்திருக்கார்.8-9  வருஷமாக
 ரிக்‌ஷா ஓட்டிட்டு இருப்பதாகச்சொன்னார். சார் வீட்ல டி. வி. பாத்துகிட்டு
 பொழுதை வீணாக கழித்தால் என் பொண்டாட்டி புள்ளைகளுக்கு யாரு சோறுபோடுவாங்க. எந்த தொழிலானா என்னங்க?, நேர்மையா உழைச்சு சம்பாதிக்கணும் இல்லியா?என்றார். ஸ்கூல் படிக்கற 2 குழந்தங்க இருக்காங்க.


காலை 8- முதல் இரவு 10 வரை ரிக்‌ஷா ஓட்டுறேன் என்றார். நான் கேட்டேன்
இப்படி பூரா நாளும் ஆட்டோ ஓட்டுவதால் வேற எதுக்குமே நேரம் கிடைக்காது இல்லே? ஆமா சார். ஆனாலும் நான் சும்மா இருக்கறதில்லே
ஒவ்வொரு ஞாயித்துக்கிழமைலேயும் அந்தேரில இருக்குற ஓல்ட் ஏஜ் ஹோம்

போயி அங்க இருக்கும் முதியவர்களுக்கு என்னாலான சின்ன சின்ன உதவிகள் செய்வேன் டொனேஷன் என்னும் விதத்தில் அவங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட், பிரஷ்,சோப் ஹேராயில் இப்படின்னு ஏதானும் வாங்கி கொடுத்துட்டு இருக்கேன் எப்பல்லாம் கொஞ்சம் அதிகப்படியா வரும்படி வருதோ அப்பல்லாம் இப்படி பண்ணிட்டு இருக்கேன். இது மனதுக்கு கொஞ்சம் அமைதி கொடுக்குது. என்றார்.

அதுமட்டுமில்லாம ஹேண்டி கேப்ட் காரங்களுக்கு ஃப்ரீயாவே வண்டி ஓட்டுறார். எங்க கண்களுக்கு அவர் ஒரு ஹீரோவாகவே தெரிஞ்சார்.
இது போல நல்லவங்களை நாம பாராட்டி உற்சாகப்படுத்தணும் இல்லியா?
இவ்வளவு நல்ல மனதுள்ளவருக்கு ஆட்டோ சார்ஜுக்கு மேலே கொஞ்சம் கூட பணம் கொடுக்க தோணிச்சு. அவர் வாங்க மறுத்துவிட்டார். எங்க பங்குக்கு நீங்க போகும் ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு ஏதானும் பொருட்கள் வாங்கி கொடுங்க சார்னு கம்பெல் பண்ணி பணம் கொடுத்தோம்.

ஃப்ரெண்டும் அவர்மனைவியும் அந்த ஆட்டொக்காரரைப்பற்றி சொன்னதும் அந்த நல்ல மனிதரை நாமளும் தெரிஞ்சுக்கலாம் இல்லியான்னுதான் இந்தப்பதிவு. உலகத்தில் எங்கயாவது ஒரு மூலேல இதுபோல மனிதாம்பிமான மனதுள்ள நல்லவங்களும் இருந்துகிட்டுதான் இருக்காங்க இல்லியா?

32 comments:

  1. ஆமாங்க நல்ல மனிதர்கள் கொஞ்சம் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. உஷா அன்பரசு முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  2. சுற்றிலும் நல்ல மனிதர்கள் தான்... ஆனால் நாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்து மாறுபடும்...

    உங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz

    கருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :

    நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...

    தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-

    மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan

    அன்புடன் DD
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் சார் நீங்க சொல்வது சரிதான் எனக்குமே என் பக்கம் ஓபன் ஆகவே மாட்டேங்குது அத உடான்ஸ் எப்படி நீக்கணும். நீங்க கொடுதிருக்கும் 2 லிங்கும் போயி பாத்தேன் அந்தஃபேஸ்புக் லிங்க் ஓபென் ஆகலே. இன்னொரு லிங்க்ல உங்க மத்தபதிவெல்லாம் வருது இப்ப நான் என்ன பண்ணனும். வருகைக்கும் தகுந்த ஆலோசனைக்கும் நன்றி

      Delete
  3. அந்த ஆட்டோக்காரரை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது.

    இதுபோல நல்ல மனம் உடையவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் நல்லவங்க எல்லா இடங்களிலும் இருக்காங்கதான். நமக்குத்தெரியவருவதுதான் லேட்டாகுது.

      Delete
  4. எந்தத்தொழில் செய்தால் தான் என்ன?

    அதில் உண்மை, நேர்மை, ஈவு இரக்கம், மனிதாபிமானம் சேர்ந்து இருந்தால் அதுவே போதும்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமா செய்யும் தொழிலே தெய்வம் என்று ஆத்மார்த்தமாக செய்து வருகிறார்

      Delete
  5. //ஒவ்வொரு ஞாயித்துக்கிழமைலேயும் அந்தேரில இருக்குற ஓல்ட் ஏஜ் ஹோம்
    போயி அங்க இருக்கும் முதியவர்களுக்கு என்னாலான சின்ன சின்ன உதவிகள் செய்வேன் டொனேஷன் என்னும் விதத்தில் அவங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட், பிரஷ்,சோப் ஹேராயில் இப்படின்னு ஏதானும் வாங்கி கொடுத்துட்டு இருக்கேன் எப்பல்லாம் கொஞ்சம் அதிகப்படியா வரும்படி வருதோ அப்பல்லாம் இப்படி பண்ணிட்டு இருக்கேன். இது மனதுக்கு கொஞ்சம் அமைதி கொடுக்குது. என்றார்.//

    பாராட்டப்பட வேண்டிய மிகவும் நல்லதொரு செயல். அவர் வாழ்க!

    ப்திவிட்டு எங்களுக்கும் தெரிவித்த தாங்களும் வாழ்க வாழ்கவே!!

    ReplyDelete
    Replies
    1. அவர் போட்டோலாம் போட்டு என்ன விளம்பர படுத்தவேண்டாம்னு சொல்லிட்டாராம். ஸோ தகவல்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது.

      Delete
  6. //இவ்வளவு நல்ல மனதுள்ளவருக்கு ஆட்டோ சார்ஜுக்கு மேலே கொஞ்சம் கூட பணம் கொடுக்க தோணிச்சு. அவர் வாங்க மறுத்துவிட்டார்.//

    நேர்மையான தன்மானமுள்ள மனிதர். இதுபோன்றவர்களை நாம் பார்ப்பதே மிகவும் ஆச்சர்யம் தான்.

    //எங்க பங்குக்கு நீங்க போகும் ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு ஏதானும் பொருட்கள் வாங்கி கொடுங்க சார்னு கம்பெல் பண்ணி பணம் கொடுத்தோம்.//

    அச்சா, பஹூத் அச்சா! கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    நல்ல பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே தன்மானமும் மனித நேயமும் மிக்கவராகத்தான் இருக்கிறார்.

      Delete
  7. உங்கள் இந்தப்பதிவு என்னும் ஆட்டோ நிறைய ஒரே வைரஸ் ஆக இருந்தது. காலையிலிருந்து 100 முறை முயன்றும் ஆட்டோவில் ஏறி அமரவே முடியவில்லை.

    இப்போ மாலை 4 மணிக்குத்தான் வைரஸ் நீங்கியது. ஏங்க இப்படி ஏகப்பட்ட வைரஸ்ஸை வைத்து வர நினைப்பவர்களையெல்லாம், பயமுறுத்திறீங்க?

    ReplyDelete
    Replies
    1. சார் எனக்கே என் பக்கம் ஓபன் ஆகாம படுத்தி எடுக்குது. ஊர்லேந்து வந்து போட்ட 3 பதிவும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் பப்லீஷே பண்ண முடிந்தது.
      வரவங்களை எல்லாம் நான் பயமுறுத்தல்லே நானே பய்ந்து போயித்தான் இருக்கேன். நீங்க அப்படியும் விடாம தொடர்ந்து வந்து நிறையாபின்னூட்டங்களும் கொடுப்பது ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகப்வும் இருக்கு.

      Delete
  8. இவர் பற்றி முன்னாலேயே பத்திரிகையில் படித்திருக்கிறேன். மனித‌ நேயம் உள்ள‌வர்கள் இது மாதிரி அவ்வப்போது தென்படுவது தான் மனதுக்கு ஆறுதலாயிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. மனோ மேடம் ஆமா பத்திரிக்கைல அவர் பற்றிய செய்தி அவரின் ஆட்டோவுக்குள்ள பொருட்கள் பற்றி எல்லாம் போட்டிருக்காங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

      Delete
  9. ஆட்டோகாரர் மட்டுமல்ல.. அவரை பற்றி உங்களுக்கு சொன்ன உங்க நண்பரும், அவரைப் பற்றி எங்களுக்கு சொன்ன நீங்களும் நிச்சயம் நல்ல மனிதர்கள் தாம்.. பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  10. ஆட்டோக்காரர்கள் என்றாலே அலற வைப்பவர்கள் என்கிற பொதுவான கருத்துக்கு இடையில் குறிஞ்சி பூத்தாற் போல இவரைப் போல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி தளிர்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாண்ணா அந்த நண்பருக்கு சென்னையில் ஆட்டோக்காரரிடம் மிகவும் மோசமான அனுபவம்தான் கிடைத்ததாம். ஆனாலும் அதிலும் இவரைப்போல நல்லவங்க இருக்கத்தான் செய்வாங்க.ஓரிருவர் செய்யும் தவறுகளால் எல்லாரையும் நாம தப்பாக நினைக்க கூடாது இல்லியா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  11. இல்லாதவர்களிடம் மனிதம் இன்னும் வாழ்கிறது.ஆட்டோக்கார அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  12. மிக நல்ல தகவல் சொல்லப்பட்டுள்ளது. நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  14. ஆம் பெருமைக்குரிய விஷயம்

    ReplyDelete
  15. பூவிழி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  16. எடுத்துகாட்டாக வாழும் ஒரு மனிதரை எடுத்துக் காட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  17. வாங்க குட்டன் சார். வருகைக்கு கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! என்று வாழ்த்த தோன்றுகிறது! இவரைப் போல் நல்லவர்கள் இன்னும் சிலர் பூமியில் இருப்பதால் தான் இன்னும் அழியாமல் இருக்கின்றது. நல்ல செய்தியைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி பூந்தளிர்!

    ReplyDelete
  19. அன்புள்ள சகோதரி சிவகாமி அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (22.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 22ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/22.html

    ReplyDelete
  20. இதுபோல நல்ல மனிதர்களை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி பதிவு போட்டிருப்பது சிறப்பு.

    ReplyDelete
  21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete