Wednesday 27 March 2013

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

ரொம்ப நாளா வெளி ஊரு போயிட்டு வந்து பார்த்தா நிறைய பேரு
 நிறையா பதிவெல்லாம் போட்டு கலக்கி இருக்காங்க. முதல்ல
அங்கல்லாம் போயி பாத்துட்டு வரலாம்னு போனதுல என் பக்கம்
 வரவே டைம் கிடைக்கல்லே. இப்ப வந்துட்டேன். ஹோலி பண்டிகை
பற்றி நிறையா பேரு ஏன் அந்தப்பெயர் வந்தது,ஏன்ன் விளையாடுராங்க
 என்றெல்லாம் நிறையா சொல்லிட்டாங்க. நானும் மறுபடியும் அதையே
 சொல்லி போரடிக்க விரும்பல்லே. எங்க ஊருல எப்படி


விளையாடுனாங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன். ஓக்கேவா. பொதுவா
 வட மா நிலங்களில் ஹோலி பண்டிகை ஆரவாரமாக உற்சாகமாக
கொண்டாடுராங்க. பூர்ணிமா அன்று இரவு 12 மணிக்கு ஒவ்வொரு பில்டிங்க
 காரங்களும்  நம்ம ஊர்ல சொக்கப்பானை கொளுத்துவாங்க இல்லியா
அதுபோல சொக்கப்பானை கொளுத்துவாங்க. அதில் வேண்டாத பழைய பொருட்களைப்போட்டு எரிப்பாங்க.ஹோலிகா பொம்மையும் போட்டு எரிப்பாங்க.பிரசாதமாக அவல் ,பொரி, கடலை வெல்லம் கலந்துதருவாங்க முக்கியமாகபுரண் போளிசெய்வாங்க.

 மறு நா காலை 7 மணி முதலே முதல்ல குழந்தைகள் ஒவ்வொரு வீடாகப்போயிதங்கள் நண் பர்களை அழைத்து வந்து ஒருவர் மேல் ஒருவர் கலர் பொடிகள் தூவி பிச்காரி என்னும் பீச்சாங்குழலில்தண்ணீர் நிறப்பி ஒருவருக்குமேல் ஒருவர் அடித்து  விளையாட்டை துவங்குவார்கள். இதற்கென்றே ஒரு பெரியட்ரம் நிறையா   தண்ணீர் நிறப்பி  பில்டிங்க் வாசலில் காலையிலேயே வச்சுடுவாங்க.உற்சாகமாக குழந்தைகள் விளையாடுவாங்க. அதுமட்டுமில்லே பெரியவங்களும் ஆண் பெண் எல்லாருமே வீடு வீடாகப்போயி நண்பர்களைஅழைத்துவர கிளம்புவார்கள். எல்லா ஊரு எல்லா பாஷைக்காரங்களும் கலந்து இருப்பாங்க.

பொதுவாக அன்று வெள்ளைக்கலரில் தான் ட்ரெஸ் போடுவாங்க.ரோட்டில் நடந்து போனாலும் வாகனங்களில் போனாலும் விடாமல் துரத்திச்சென்று
கலர் அடிச்சுடுவாங்க. அன்று அலுவலகம் பள்ளிகள் எல்லாமே விடு முறை
விட்டுடுவாங்க நண்பர்கள் கூப்பிட  வந்ததுமே நாம வீட்டைப்பூட்டிக்கொண்டு வெளியே வந்து அவங்க கூட கல்ந்து கிட்டா பொழைச்சோம். இல்லேன்னா
வெளிலேந்தே ஜன்னல் வழியா வாசல் கதவு இடை வெளிவழியா கல்ர் தண்ணியை ஊத்தி  வீட்டையும் நம்மயும் ஒரு வழி பண்ணிடுவாங்க.

 வீடு வீடாக போகும்போது ஒவ்வொருவரும் கட்டி அணைத்து ஹேப்பி ஹோலி சொல்லி ஏதானும் ஸ்வீட்டையும்  வாயில்அடைச்சுடுவாங்க. எல்லார் முகங்களிலும் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு வந்து ஒட்டிக்கும்.இளவயசு பையன் பெண்கள் பலூனில் தண்ணீர் நிறப்பி மாடியில் இருந்து கீழே பார்க்கிறவங்க மேலே வீசி அடிப்பாங்க.பாக்கவே வேடிக்கையாக இருக்கும்.

7 மணிக்கு ஆரம்பிக்கும் கலர் விளையாட்டுக்கள் மதியம் 2 மணியுடன் ஒரு
முடிவுக்கு வரும். திரும்பி வரும் ஒவ்வொருவரையும் யாருன்னே அடையாளம் காணமுடியாதபடிக்கு எல்லார் முகங்களும் பலகலர்களி ஜொலி
ஜொலித்துக்கொண்டிருக்கும்.தலை முடி எல்லாம் கூட மல்டி கலரில் மினு மினுக்கும்.எருமை மாட்டை வைக்கோல் போட்டு தேய்த்துக்குளிப்பாட்டுவதுபோல எல்லாரும் ப்ரெஷ் கொண்டு தேய்த்து தேய்த்து குளிப்பாங்க.எல்லார் வீட்டு பாத்ரூம் தண்ணியும் காலி ஆயிடும்.

 அப்புரம் வீட்டு அம்மாக்களுக்குத்தான் அடுப்பங்கறை வேலைகள் ரெடியாக காத்துகிட்டு இருக்குமே.ஏகப்பசியுடன் இருப்பாங்க எல்லாரும். சூடு சூடாக ஒரு புலாவ், ராய்த்தா, புரன்போளி யுடன் விருந்து சாப்பாடு ரெடி பண்ணி சாப்பிட்டு முடிக்கவே 4 மணி ஆயிடும். ஹோலி கலர் ட்ரெஸ் தோய்க்கவே முடியாதபடிபலகலர்களில் சாயம் பூசிக்கொண்டிருக்கும்.ஒவ்வொருவரின் உடம்பில் உள்ள கலர்களும் போக குறைந்தது  ஒரு வாரமாவது ஆகும்.

இப்படியாக ஹோலிப்பண்டிகை ஆரவாரமாக கொண்டாடுவாங்க இங்க
எல்லாருக்கும் ஹேப்பி ஹோலி


34 comments:

  1. வணக்கம் பூந்தளிர்!
    முதன்முறையாக உங்க பக்கம் வந்தேன்... நல்ல அருமையா இருக்கு!

    அதுவும் இன்னிக்கு ஹோலிப் பண்டிகைன்னு கலர்கலரா வாசனையோடு, நிறைய பக்ஷணம் பலகாரம் சாப்பாட்டோட்டை நிறைய விஷயங்களையும் உங்க பதிவிலே தந்து அசத்தியிருக்கீங்க.
    ரொம்ப நன்றி...:)

    உங்களுக்கும் என் இனிய ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இளமதி முதல் முறையா வரீங்களா? சந்தோஷம. இனி அடிக்கடி வருவீங்க. போட்டோ கூட இணைக்கணும்னுதான் நினச்சேன். காமிரா கொண்டு போனா அது உருப்படியா வீடு வந்து சேராது.ஸோ பகிர்வு மட்டும்தான்.

      Delete
  2. எப்படியோ மக்கள் சந்தோஷமா இருக்கத்தான் பண்டிகைகள்....
    ஆனால் நாம் எதிர் நோக்கியிருக்கும் தண்ணீர் பிரச்சனையையும் கவனத்தில் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ரொம்ப சரியா சொன்னீங்க. ஒவ்வொரு மா நிலத்திலும் கடுமையான தண்ணீர் பிரச்சனை இருக்கத்தான் செய்யுது.ஆனாலும் இது போல நேரங்களில் அதிக தண்ணீர் தேவையும் இருக்கே.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. ஹோலி பற்றி ஜாலியா ஏராளமான தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, ரசிச்சீங்களா. ஹோலி பற்றிய தகவல் ஏதுமே நான் சொல்லவே இல்லியே? எப்படி விளையாடுவாங்கன்னு மட்டும் தானே சொல்லி இருந்தேன்.

      Delete
  4. //ரொம்ப நாளா வெளி ஊரு போயிட்டு வந்து பார்த்தா நிறைய பேரு நிறையா பதிவெல்லாம் போட்டு கலக்கி இருக்காங்க. முதல்ல அங்கல்லாம் போயி பாத்துட்டு வரலாம்னு போனதுல என் பக்கம் வரவே டைம் கிடைக்கல்லே. இப்ப வந்துட்டேன்//

    நீங்க வந்துட்டீங்க! ஆனால் எங்களால் உங்கள் பக்கம் வரவே முடியவில்லை. காலையிலிருந்து முயற்சித்தும் வைரஸ் வைரஸ் என்று டேஞ்சர் அறிவிப்பு வந்து வெறுக்க வைத்து விட்டது. தெரியுமா உங்களுக்கு?

    ஊருக்குப்போய் ‘வைரஸ்’ஸையா வாங்கி வந்தீர்கள்? ;)))))

    ReplyDelete
    Replies
    1. ஐயோ சார் நான் பதிவு பப்ளிஷ் பண்ணினதும் என் பக்கம் போகவே முடியல்லே. மால்வெர் அட்டாக்னுதான் வந்திச்சு. காலை பூராவும் வரவே இல்லை. இப்ப 7 மணிக்கு தான் பேஜ் ஓபென் ஆச்சு.ஊர்லேந்து வரஸ் லாம் கூட வாங்கி வர முடியுமா.?இது புது தகவலா இருக்கே.

      Delete
  5. //எருமை மாட்டை வைக்கோல் போட்டு தேய்த்துக்குளிப்பாட்டுவதுபோல எல்லாரும் ப்ரெஷ் கொண்டு தேய்த்து தேய்த்து குளிப்பாங்க//

    இதெல்லாம் தேவையா? அனாவஸ்ய வெட்டி வேலையல்லவா? தண்ணீர் பஞ்சமல்லவா வந்துவிடும். நல்ல உதாரணம் சொல்றீங்கோ!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் தேவை தானுங்கோ. காலேலேந்து கலர் அடிச்சுகிட்டு சும்ம வெயில்ல சுத்தினா கலர் ஸ்ட்ராங்க உக்காந்துடுமே. அதை எப்படி அப்படியே விட்டு வைக்க முடியும். ஒரு முழு சோப் தீந்துடும். தண்ணீர் பஞ்சம் எல்லா இடத்திலும் இருக்குதான். இது போல சமயங்களில் தவிர்க்க முடியாதுங்கோ.

      Delete
  6. // வீடாக போகும்போது ஒவ்வொருவரும் கட்டி அணைத்து ஹேப்பி ஹோலி சொல்லி ஏதானும் ஸ்வீட்டையும் வாயில்அடைச்சுடுவாங்க. எல்லார் முகங்களிலும் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு வந்து ஒட்டிக்கும்.//

    கட்டிப்புடி வைத்தியம் வேறா? ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! ஜோர் தான்.

    //இளவயசு பையன் பெண்கள் பலூனில் தண்ணீர் நிறப்பி மாடியில் இருந்து கீழே பார்க்கிறவங்க மேலே வீசி அடிப்பாங்க.//

    அடப்பாவமே! இது வேறா?

    //பாக்கவே வேடிக்கையாக இருக்கும்.//

    நீங்கள் எழுதியிருப்பதே வேடிக்கையாகத்தான் இருக்குது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    அனைவருக்கும் அன்பான கலர்கலரான ஹோலி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என் பக்கம் வந்ததுமில்லாம நிறைய பின்னூட்டமும் கொடுத்து உற்சாகப்படுத்தியதற்கு நன்றிகள்.தமிழ் நாட்டு ஹோலி எப்படி இருக்கும். இதுபோல தானா?

      Delete
  7. தளிர்... உடனே உன் தளத்துலருந்து யுடான்ஸ் பதிவுப் பட்டைய நீக்கணும். அதனாலதான் ‘மால்வேர்’னு வந்து மத்தவங்க உள்ள வர கஷ்டப்படறாங்க. நீங்க ஊர்ல இல்லாததால இந்த தகவலை சொல்ல மறந்துட்டேன். ஸாரிம்மா...! ஹோலிப் பண்டிகையப் பத்தி படிக்கறப்ப, நான் சினிமாக்கள்லயும், கதைகள்லயும் படிச்ச, பார்த்த விஷயங்கள் மனக்கண்ல ஓடி உற்சாகம் தந்துச்சு! உங்களுக்கும் உங்கள் வீட்டினருக்கும் என் மனம் நிறைந்த ஹோலி நல்வாழ்த்துகள்! (தமிழ்நாட்ல இப்படி சந்தோஷமா ஆர்ப்பாட்டமா இருக்காதும்மா. ரொம்பவே சாதாரணமா இருக்கும்)

    ReplyDelete
    Replies
    1. அண்ணா உடான்ஸ் எப்படி நீக்கணும்? அப்புரம் தமிழ் மணம் எங்க போச்சு?காணோமே?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    2. உடான்ஸ் திரட்டியில் மால்வேர் இந்த பதிவை படிக்கவும் அன்பரே

      Delete
  8. ஹோலி பண்டிகை ஜாலியாத்தான் இருக்கு...! கெமிக்கல் இல்லாத கலர் பொடிகளை உபயோகிக்கனும். உடம்பில் பட்ட கலரே போக ஒரு வாரம் ஆகுமுன்னா... வீட்ல சுவற்றில எல்லாம் பட்டுட்டா.. எப்படி? கலர் கொண்டாட்டம் சுற்றுபுற அழகு, தூய்மை கெடாமல் கொண்டாடினால் ஹோலி ஜாலிதான்..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க உஷா நீங்க சொல்வது ரொம்ப சரிதான்.வீட்டு வாசல் கதவெல்லாம் கல்ர் கோலம் போட்டுக்கும். அதைச்சுரண்டி எடுக்கும் போது கதவோட பெயிண்டிங்கே காணாம போயிடும்.இந்த அவஸ்தைல்லாம் 2 வருஷம் முன்னே பாத்தேன் ஸோ அவங்க வந்து கூப்பிடும் போதே கிளம்பி டுவேன்.

      Delete
  9. தமிழ்நாட்டில் ஹோலி இவ்வளவு சிறப்பாக இருக்காது.. அருமையான பகிர்வு..

    ReplyDelete
    Replies
    1. கோவை ஆவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க,

      Delete
  10. ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரிம்மா வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

      Delete
  11. மக்கள் ஒருவருடன் ஒருவர் கூடி களிப்பதை பார்ப்பது ஆனந்தம் தான்

    ReplyDelete
  12. ஆமாங்க பூவிழி. இதுபோல வரும் பண்டிகை தினங்களில் தானே ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கிறது. அந்த சந்திப்பை சந்தோஷமாக கொண்டாடுவது நல்ல விஷயம் தானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  13. ஹோலி கொண்டாடி முடிச்சாச்சா..

    ReplyDelete
  14. வாங்க அமைதிச்சாரல் வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. முதல் வருகை என்னுடையது.. அருமை.. இனி தொடர்வேன்.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வேடந்தாங்கல் கருண் சார் முதல் முறையா வரீங்களா இனி அடிக்கடி வருவீங்க சார். சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  16. நல்ல அலசல்

    ReplyDelete
    Replies
    1. ப்ரேம் வருகை புரிந்ததற்கு நன்றிங்க.

      Delete
  17. அருமையாக இருக்கு படிக்க.
    அதுக்கப்புறம் தண்ணீர வேஸ்ட் செய்யறாங்களேனு தவிப்பு.

    இருக்கிற ஊர்ல நல்லாவே கொண்டாடலாம்.

    நாங்க தொலைக்காட்சியில் வரும் அத்தனை ஸ்டார் சீரியலிலும் பார்த்து மகிழ்கிறோம்:)
    நன்றி பூந்தளிர்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிம்மா வாங்க வாங்க உங்க வரவுக்கு ரொம்ப சந்தோஷம்ம்மா அடிக்கடி வாங்க. நன்றி

      Delete
  18. சுவார‌ஸ்ய‌மாக‌ ப‌திவிட்டிருக்கிறீர்க‌ள் பூந்த‌‌ளிர்! வாழ்த்துக்க‌ள்!!

    ReplyDelete
  19. மனோ மேடம் வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  20. ஹோலிப்பண்டிகையில் விளையாட்டு எப்படி இருக்கும் என்று வித்தியாசமான முறையில் பதிவாக்கி பகிர்ந்ததுக்கு நன்றி !

    ReplyDelete