Friday 25 January 2013

தங்கமே தங்கம் (4)

போலீஸ் ஸ்டேஷன் போய் வந்தவிவரம்   எப்படியோ அக்கம் பக்க வீட்டுக்காரர்களுக்கெல்லாம்    அதற்குள் பரவி விட்டது. ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வந்து விட்டார்கள். ‘‘என்னம்மா ஆச்சி?’ன்னு   சிலர் உண்மையான அக்கறையுடன்    கேட்டார்கள்

ஒவ்வொருவருக்காக பதில் சொல்ல    அலுப்பாக இருந்தது. சிலரோ என் காது படவே, ‘‘புருஷன் போனபிறகும் கூட இவ்வளவு நகைகள் ஏன் போடணும்.? இப்ப என்னாச்சி?’’ என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசிவிட்டுப் போனார்கள்.

‘‘ஏன் பாட்டி புருஷன் இல்லாதவங்க நகையெல்லாம் போடக் கூடாதா?’’ என்றாள்  ரீமா.

‘‘அப்ப்டில்லாம் இல்லேம்மா. நான் ஏன் போட்டுட்டு இருந்தேன் தெரியுமா?  உன் தாத்தா சாகும்முன்பு  என்னிடம், ‘பாக்கியம்! நான் போயிட்டா கூட என் ஞாபகார்த்தமா
 இந்த நகைகள் உன் உடம்பிலேயே இருக்கணும். ஒரு நகையைக்கூட கழட்டக்கூடாது’ன்னு சொன்னார்". நான் கூட 'ஏங்க இப்படில்லாம் அபசகுனமாகப்பேசுரீங்க்? அப்படில்லாம் எதுவும் நடக்காது’ன்னேன். ஆனா உன் தாத்தா சொன்னது போல அவர் முந்திக்கிட்டார்.’’

‘‘அவர் சொன்னவார்த்தைக்கு கட்டுப்பட்டுதான் நான் எல்லா நகையும் எப்பவும் போட்டுகிட்டே இருந்தேன்மா. இதப்போயி எல்லார்கிட்டயும் சொல்லி க்கிட்டு இருக்கமுடியுமா?’’

"சரி பாட்டி, புருஷன் இல்லேன்னா ஏன் நகை போடக்கூடாதுன்னு சொல்றாங்க?"  விடாப்பிடியாக ரீமா கேட்கவும்,

"கொழந்தே!  நாம் பிறந்த குடும்பத்துக்குன்னு ஒரு பாரம்பரியம், சம்பிரதாயம், தலைமுறை, தலைமுறையாக வந்த  பழக்கவழக்கங்கள்னு சிலது உண்டும்மா.அதை நாம மதிக்கணும் மறியாதை கொடுக்கணும். கடைப்பிடிக்கவும் செய்யணும்.’’

‘‘என் தலைமுறையில் கூட கொஞ்சம் பரவால்லே, தலைமுடியும், கலர்புடவையும் தப்பிச்சுடுத்து, எனக்கு முந்தய தலைமுறை பெண்கள் எவ்வளவெல்லாம் க்‌ஷ்டங்கள் அனுபவிச்சு இருக்காங்க தெரியுமா?’’

‘‘என் பாட்டில்லாம் ரொம்ப கஷ்டங்கள் அனுபவிச்சிருக்காங்க. அந்தக் காலத்துல பெணகளுக்கு படிப்பு எதுக்குன்னு கல்வி  அறிவு கொடுக்க மறுக்கப்பட்டார்கள். அதனால தன்னால யோசித்து முடிவெடுக்க முடியாமலே வளர்ந்துட்டாங்க. பிறந்ததும் பெற்றோருக்கு அடங்கி இருந்தாங்க, திருமணம் முடிந்ததும் கணவ்ருக்கு அடங்கி இருந்தாங்க வயசு காலத்தில் மகனுக்கு அடங்கி இருந்தாங்க.’’

 ‘‘ஏன் தெரியுமா... அவர்கள் எப்பவும் ஒருவரைச்சார்ந்தே இருக்க வேண்டிய நிலைமை. தன்னால எந்த முடிவு எடுக்கும் சுதந்திரமும் கிடையாது.  எதானும் கேள்வி ஏன் எதற்குன்னு  கேட்டாக்கூட பெரியவங்க சொன்னா சரின்னு  கேட்டுக்கணும், ஏன் எதுக்குன்னுல்லாம்கேள்வி கேக்கக்கூடாதுன்னே சொல்லி குட்டி குட்டி, குட்டுப்பட்டே வளர்ந்துட்டாங்க.இது ஒரு வீட்டு நிலமை இல்லே, வீட்டுக்கு வீடு இதே கதைதான். அதனால இயல்பா ஏத்துகிட்டாங்க.’’

‘‘புருஷன் தவறிட்டான்னா அந்த மனைவி சின்ன வய்சுப்பொண்ணோ, பெரிய வய்சுப்பொண்ணோ எப்படி இருந்தாலும் சரி அவங்க தலை மொட்டை அடிக்கப்பட்டு 9 கஜம் வெள்ளைப்புடவையும் சுத்தி விட்டு வீட்டின் ஒரு இருண்ட மூலையில் தள்ளிவச்சுடுவாங்க. அவங்க வெளி ஆண்களை பார்க்கவோ பேசவோ கூடாது, சுப காரியங்களில் கலந்து கொள்ள்வும் கூடாது,’’

‘‘அதுமட்டும் இல்லே... சாப்பாட்டு விஷயத்தில்கூட கட்டுப்பாடுகள், அமாவாசை, பௌர்ணமி,  சனி ஒரு பொழுது, ஷஷ்டி அந்த விரதம் இந்த   விரதம் என்று பாதி நாள் பட்டினி போட்டுவாங்க. குளிரோ மழையோ வெய்யிலோ காலை 4 மணிக்கு எழுந்து குளிரக்குளிர நதியில் போயி நீராடி விட்டுத்தான் அடுப்பையே பத்தவைக்கணும் என்றகட்டுப்பாடுகள்.’’

‘‘மொத்தத்தில் புருஷனைப்பறி கொடுத்த பெண்ணுக்கு மீதி உள்ள வாழ் நாட்கள் ஒரு பனிஷ்மெண்டாகத்தான் இருக்கும். என் தலைமுறையில் கொஞ்ச்ம் இம்ப்ரூவ்மெண்ட் வந்திச்சி. சில துணிச்சலான பெண்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினாங்க.’’

‘‘இதில் ஆச்சரியம் என்னன்னா முற்போக்கு சிந்தனை உள்ள சில ஆண்களும் சப்போர்ட் பண்ணினாங்க. கொஞ்சம் கொஞ்சமாக கலர்ப் புடவைக்கும்   சின்ன சின்ன நகை களும் போட ஆரம்பிச்சாங்க.
இப்பல்லாம் பெண்களும் தங்களுடைய   கல்வித்தகுதியை வளர்த்துக்கிட்டாங்க  ..  இப்ப உள்ள கால கட்டத்துல ஆண்களுக்கு சமமா பெண்களும் வெளில இறங்  கி வேலைக்குப்போயி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. தன் காலில் தான் நிற்கும் தைரியம் கொடுத்த துணிவு’’

‘‘நாமபொறந்ததிலேந்தே நம்ம பெற்றோர் நமக்கு பொட்டுவச்சு பூ வெச்சு நகை போட்டு அழகு பார்த்திருக்காங்க. புருஷன் கட்டுரது தாலியும் மெட்டியும் மட்டும்தானே. அதை ‌வேணா  நீக்கிடலாம். மத்ததை எல்லாம் எதுக்கு நீக்கணும் அதெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று துணிச்சலா பேச ஆரம்பிச்சு அவங்க இஷ்ட்டப்படியே நடக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க. . அதிலும் தவறேதும் இருப்பதாக தெரியலேதான்.’’

‘‘ஆமா பாட்டி இதில ஏதும் தப்பிருக்கறதா தெரியல்லே. ஆமா, உங்க நகை ஏதானும் திரும்ப கிடச்சுதா இல்லியா?’’

‘‘ஓ...! எதையோ சொல்ல வந்து தேவை இல்லாம என்னல்லாமோ சொல்லிகிட்டு இருக்கேன் பாரேன். ரெண்டு வருஷம் போலீஸ்காரா இழுத்தடிச்சது தான் மிச்சம். ஒரு திருகாணிகூட திரும்பக் கிடைக்கலே. போலீஸ்காராள்ல சிலபேரு நல்லவங்களாகவும் இருக்காங்கதான். ஆனா நமக்கு கிடைச்சது மோசமான அனுபவம்.  அதுக்கு அவங்களை ஏன் குறை  சொல்லணும்?’’

‘‘எதுமேலயும் அதிக ஆசை வைக்கக்கூடாதுங்குறதுக்கு   இந்த சம்பவம் எனக்கு நல்ல படிப்பினை ஆச்சும்மா. அதிலேந்து   நகை போடுறதையே விட்டுட்டேன்.  உன் அம்மாவிடம் கூட சொல்லுவேன் - ‘வெளில போகும் போது தாலிக்கொடிமட்டும் தங்கத்தில் போட்டுக்கோ. மத்ததெல்லாம் கவரிங்கே போதும். இப்ப தங்கம் விக்குற விலையில் யாரு என்ன பண்ணூவாங்கன்னே சொல்ல முடியாது’ன்னு.’’

‘‘சரி பாட்டி! இவ்வளவு நாளா இதையெல்லாம் நீ என்கிட்ட ஏன் சொல்லவே இல்லே?’’   என்றாள் பேத்தி.

‘‘சொல்ல சந்தர்ப்பமே அமையல்லியே,   தவிர இது சொல்லிக்கும்படி அப்படி முக்கியமான விஷயமா தோணலேம்மா.’’

‘‘என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க். இப்படி எவ்வளவு சுவாரசியமான ப்ளாஷ் பாக் உன் லைஃப்ல நடந்திருக்கு ஒண்னொண்ணா எனக்கு சொல்லு. நான் இந்த சம்பவத்தையே ஒரு சிறு கதையா எழுதி ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பப் போறேன் பாரு’’   என்றாள்.

‘‘போடி... பத்திரிக்கையில் எழுதும்படி இது ஒன்னும்  சுவாரசியமான விஷயம் இல்லே. அதுவுமில்லாம நீ ஜர்னலிஸ்ட்டா ஆகணும்னு ஆசைப்படறே இல்லியா? அப்போ ஒன் பார்வையை   விசாலப்படுத்தி   உன்னைச் சுத்தி   நடக்கும் நாலாவித  விஷயங்களையும் பாரு,   டெய்லி ந்யூஸ் பேப்பரில் வரும் ஒருவரிச் செய்தியில் கூட   பல கதை அடங்கி இருக்கும்  . சும்ம ஒருத்தரையே சுத்தி வராதே.’’

‘‘பாட்டி நீ சொல்லறதும் சரிதான். ஆனாகூட நீ சொன்ன விஷயம் எனக்கே கதை கேக்குற மாதிரி சுவாரசியமா இருந்துச்சி கண்டிப்பா படிக்கிறவங்களும் ரசிப்பாங்க பாரேன்’’ என்றாள்.

‘‘சரி, சரி... கோவிலுக்குப் போறேன்னு சொல்லிட்டு  போன பாட்டியும் பேத்தியும் எங்க ஊர் சுத்தப் போயிட்டாங்களோன்னு வீட்ல உன் அப்பாவும் அம்மாவும் கவலைப்படுவாங்க. இருட்டிடுச்சி, வா வீட்டுக்கு போலாம்’’ என்று பாட்டி சொல்ல, இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

                                                               (முற்றும்)

read more "தங்கமே தங்கம் (4)"

Monday 21 January 2013

தங்கமே தங்கம். (3)

பேத்தியிடம் கதை சொல்லும் சுவாரசியத்தில் பாட்டி ஃப்ளாஷ் பேக்கில் சஞ்சரித்து அவளும் மகனும் நடந்து கொண்டது பேசிக்கொண்டது எல்லாவற்றையும் நம்ம கண்முன்னாடியும் காட்டணும் என்று- தான்  பேத்தியுடன் பேசுறோம் என்பதையே மறந்து நிஜம்மாகவே  அந்த நேரத்துக்கே  போயி  எல்லா சம்பவங்களையும் நினைத்துக் கொண்டிருந்தாள் .

போலீஸ் ஸ்டேஷனில் போயி இன்ஸ்பெக்டரிடம் விவரம் சொல்லி ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக்கொடுத்தார்கள்.

இன்ஸ்பெக்டர் பாக்கியத்தம்மாவிடம்    " இது எப்ப நடந்துச்சி?"   என்றார். 

"இன்னக்கு காலேல நடந்ததுங்க0"  என்றார் அம்மா.

" எவ்வளவு மணி இருக்கும் அப்ப ?"

" சரியா தெரியலியே. தினசரி 5.30-க்குத்தான் போவேன். இன்று எப்படியோ டயம் சரியா பாக்காம சீக்கிரமே போயிட்டேன்."

"சரி நீங்க ஏன் பால் வாங்க போரீங்க்? உங்க மகன் போகமாட்டாரோ’’ன்னு கேட்டார்.

" இல்லே சார் அவன் என்னை போக வேண்டாம்னுதான் சொன்னான். எனக்கு காலை வாக்கிங்க் போனது போல இருக்குமேன்னு நான் தான் போவேன்"

".சரி உங்களுக்கு யாரு மேலேயாவது சந்தேகம் இருக்கா? ஆளை அடையாளம் காட்டமுடியுமா?" என்றார்,

"என்ன சார் நீங்க/ அடிச்ச ஆளு யாருன்னே தெரியல்லே. பின்னாடிலேந்து அடிச்சிருக்கான். இதுல எப்படி அடையாளம்லாம் காட்டமுடியும். நாங்க யாரை சந்தேகப்பட முடியும்?  அக்கம்பக்கம் எல்லாருடனும் நல்ல அன்னியோனியமான பழக்கம்தான் எங்களுக்கு இருக்கு.  நாங்க போயி யாரை சந்தேகப்பட முடியும்?"

" ஓகே, உங்க பகுதியில் வேலையில்லாம யாரானும் ரௌடிபசங்க நடமாட்டம் இருக்குதா?"

"{ ஏன் சார் வேலை இல்லேன்னா அவன ரௌடியாகத்தான் இருப்பானா?"

"அப்படி இல்லே. இந்த திருட்டு,   நகைக்காகத்தான் நடந்திருக்குன்னு நல்லாவே தெரியுது. வரும்படி இல்லாதவன் சாப்பாட்டுக்கு திருட்டுத் தொழில்ல இறங்கி இருக்கலாமில்லே? சரி... எத்தனை பவுன்  போட்டுக்கிட்டிருந்தீங்க என்ன டிசைன் எத்தனை உருப்படி எல்லாம் தெளிவா பேப்பர்ல எழுதிக்கொடுங்க.எந்த ஆயுதத்தால அடிச்சான்னு தெரியுமா?"

" ஏன் சார் தூண்டி துருவி கேட்டு கிட்டே இருக்கீங்க. அம்மாவே வலியிலும் வேதனையிலும் நொந்து போயி இருக்காங்க. ஆளத்தெரியுமா ஆயுதத்த தெரியுமான்னு மடக்கி மடக்கி கேட்டுகிட்டே இருந்தா எப்படி. எங்களுக்கு தெரிந்தவரை எல்லாம் சொல்லிட்டோம். காவல் துறை மக்கள் சேவைக்குதானே இருக்கு. இதுபோல தர்மசங்கடப்படுத்துரீங்களே சார்"  என்று மகன் கெஞ்சாத குறையாக இன்ஸ்பெக்டரிடம் கேட்கவும்,

" சரி சரி நீங்க சரியான ஒத்துழைப்பு கொடுத்தால் தான் திருட்டுப்போன பொருட்களை எங்களால தேடி கண்டு பிடிக்க முடியும் இல்லே. இப்படி அலுத்துகிட்டா எப்படி? ரைட்டு... இங்க நாங்க 6 பேரு இருக்கோம் எல்லாருக்கும் டீயும் பன்னும் வாங்கி கொடுத்திட்டு நீங்க கிளம்புங்க" என்று அதிகாரமாகச்சொன்னார்.

 மகனுக்கோ இதைக்கேட்டதுமே மூக்கின் மேல கோவம் பொத்துகிட்டு வந்தது. "என்ன சார் நீங்க...  நாங்க எதுக்கு உங்களுகெல்லாம் டீயும் ப்ன்னும் வாங்கி தரணும்?" என்றான்.

"சார் இன்னிலேந்து நாங்க உங்களுக்காக்த்தானே, உங்க வேலையைத்தானே பார்க்கப்போறோம். அதுக்கு நன்றியா ஒரு டீயும் பன்னும் வாங்கி கொடுத்ததான் என்ன?"

" சார் நீங்க பண்ணுகிற வேலைக்குத்தானே கவர்மெண்டுல உங்களுக்கு சம்பளமே கொடுக்குறாங்க. அப்புறமா எதுக்கு சார் எங்களையும் கஷ்ட்டப்படுத்துரீங்கன்னு " கோவமாக கேட்ட மகனிடம் அம்மா, "போனாப்போறது விடு வயித்து பசி கேக்கறா. வாங்கி கொடுத்துட்டு போலாம்’’னு சொன்னா.

"போம்மா, நீ வேற, இதுதான் ஆரம்பம் இன்னும் எப்படில்லாம் டார்ச்சர் பண்ணுவாங்களோ தெரியல்லே’’ன்னு அலுத்துக் கொண்டே அவர்கள் கேட்டதை வாங்கி கொடுத்துவிட்டு தாயும் மகனும் வீடு வந்தார்கள்.

-இன்னும் வரும்...
read more "தங்கமே தங்கம். (3)"

Thursday 17 January 2013

தங்கமே தங்கம் (2)

”வீட்டுல உன் அப்பா 7 மணிக்கு எழுந்ததும் என்னைத்தேடிப்பார்த்திருக்கான்”. ”பால் வாங்கப்போன அம்மாவை இன்னும் காணோமேன்னு பதறிப்போயி சைக்கிளை எடுத்துக்கொண்டு  நான் வழக்கமாக போகும் மெயின் ரோடில் 

பதட்டமாகத்தேடிக்கொண்டு போயி பூத்ல போயி அங்கு இருந்தவரிடம்  ”அம்மா வந்தாங்களா?” என்று பதட்டமுடன் கேட்டான்.
”இல்லியே தம்பி.  நான் கூட ஏன் அம்மா இன்று வரலேன்னு நினைச்சேன். ஒரு வேளை உடம்புக்கு சுகமில்லியோன்னு   நினச்சேன் தம்பி.” என்றார். என்னாச்சு தம்பி, ரொம்ப பதட்டமாக இருக்கீங்க/ என்று கேட்கவும்

”இல்லே அண்ணாச்சி, அம்மா வழக்கம் போல காலை பால் வாங்க கிளம்பிட்டாங்க.  வீட்ல பால் பாட்டில் கார்டு  எதுவும் இல்லீங்க. அதான் தேடிகிட்டு வந்தேன்”. என்று சொல்லி விட்டு மறுபடியும் தேட ஆரம்பித்தான், அந்தமுட்டுச்சந்து வந்ததும் அதில் திரும்பினான்.   ரோட்டில் பால் பாட்டில் 

சிதறி   கார்ட் ஒரு புறம், பால் பை   ஒருபுறமாக விழுந்து கிடந்ததைப் பார்த்தவன்சுற்றுமுற்றும் தேடினான். ம்  ம்  ம் என்று  சாக்கடையில் இருந்து முனகல் சப்த்தம் வரவே அங்குபோய்ப்பார்த்ததும்   அதிர்ந்து போனான். ”அம்மா, அம்மா என்னாச்சும்மா ?”என்று கேட்டவாறே அவளைத்தூக்கினான். 

பொட்டு நகை இல்லாமல் அம்மாவைப்பார்த்ததுமே அவனுக்கு புரிந்து விட்டது இது நகைக்காக நடந்த திருட்டென்று.

அம்மாவைப்பார்த்தான் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. புடவை ரவிக்கை எல்லாம் சாக்கடையின் அழுக்கு தண்ணீரின் கெட்ட வாசம்.

மெதுவாக அம்மாவை சைக்கிளின் பின் புறம் உக்காத்தி வைத்து  பக்கத்தில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போனான்.  தலைக்காயத்தை துடைத்து கட்டுப்போட்ட டாக்டர்’ என்னாச்சுப்பா ?”என்றார்.
அவரிடம் மறைக்க முடியாமல்    எல்லாம் சொல்லி கிளம்பினார்கள்.

” சார் போலீஸ் ஸ்டேஷன் போயி ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துருங்க. அது நல்லது. இப்படி ரத்தகாயம் வரும்படி அடிச்சுப்போட்டு நகை எல்லாம் திருடி இருக்காங்க.சும்ம விடக்கூடாது அவங்களை” என்றார் டாக்டர்.
 சரி டாக்டர். என்று சொல்லிவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள். பாலைக்காய்ச்சி காப்பி போட்டு அம்மாவுக்கும் கொடுத்துவிட்டு அவனும் குடித்தான்.

” என்னடாப்பா ஆபீசுக்கு நேர மாகுதே நீ கிளம்பு, இன்னிக்கு ஒரு நாள் காண்டீன்ல சாப்பிட்டுக்கோ ” என்றாள் அம்மாக்காரி.
” என்னமா விளையாடுரியா? உன்ன இந்த நிலமைல விட்டுட்டு நான் எப்படி ஆபீசுக்கு போக முடியும் இன்னிக்கு லீவுதான். நீ பேசாம படுத்து ரெஸ்ட் எடு. நான் பாக்கி வேலையெல்லாம் பார்த்துக்கொள்கிறேன்”  என்றான்.
சொன்னபடியே வீட்டு வேலைகள் எல்லாம் செய்து  சமையலையும் செய்து முடித்து   தாயும் மகனுமாக சாப்பிட்டு முடித்தார்கள்.

”கண்ணா அந்த டாக்டர் சொன்னது போல போலீஸ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடலாமா? 20 பவுன் நகைடா. உன் அப்பா ஆசை ஆசையாக செய்து போட்ட நகைகள் . மனசேஆறமாட்டேங்குதுபான்னு”  அம்மா கலங்கி அழவே ஆரம்பித்துவிட்டார்கள்.
”அழாதீங்கம்மா நகை தானே வேற நானே பண்ணிப்போடறேன் உனக்கு ஒன்னும் ஆகல்லியே அதை நினைச்சு சமாதானப்படுத்திக்கொள்ளணும்மா.”

“ போலீஸ் கம்ப்ளைண்டுன்னு போனா இழுத்தடிப்பாம்மா. அபீசுக்கு என்னால அடிக்கடி லீவெல்லாம் போடமுடியாதும்மா.புரிஞ்சுகோ.” என்றான் மகன்.

“அதுக்கில்லேடா உன் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒவ்வொரு காசா சேர்த்து ஆசை , ஆசையா பண்ணி தந்த நகை. குழந்தைக்குன்னு நீ கேட்டப்போ கூட நா கழட்டிதரமாட்டேன்னுட்டேன். இன்னிக்கு யாரோ ஒருவன்

எல்லாத்தயும் சுருட்டிண்டு போயிட்டானே. அப்படியே எப்படிப்பா விடமுடியும்”? சரி உன் சவுரியம் பாத்துக்கோ என்று சொல்லி அமைதி ஆனாள்.
அம்மாவின் வாட்டமான முகம் மகனுக்கு பாக்கவே முடியல்லே. சரி ஆனது ஆகட்டும் என்று அம்மவைக்கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி போனான்.
                                                                                                                 (தொடரும்.)
read more " தங்கமே தங்கம் (2)"

Tuesday 15 January 2013

தங்கமே தங்கம். (1)

பாக்கியத்தம்மாவும், பேத்தி ரீமாவும் கோவிலில் ஸ்வாமி தரிசனம் முடிந்து வாசலில் வந்து உட்கார்ந்தார்கள்
.ரீமா கண்ணு நீ மேலே என்ன பண்ணப்போற்தா இருக்கே?
 படிப்புதான் முடிச்சுட்டியே?
பாசத்துடன் பேத்தியைப்பார்த்து கேட்டாள் பாட்டிம்மா.
 ஆமா பாட்டி எனக்கு ஜர்னலிஸ்டா ஆகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.
  ஓ, அப்படியா உனக்கு  எது விருப்பமோ அப்படியே செய். ஜர்னலிஸ்டுன்னா  கண்ணையும் காதையும் நல்லா திறந்து வச்சுக்கணும் நாம பார்க்குற, கேட்குற விஷயங்களை நல்லா உள் வாங்கிகணும். எல்லாரும் ரசிக்கும் படியாக சுவாரசியமா எழுதத்தெரிஞ்சுக்கணும்மா.என்று பாட்டி அறிவுரை சொன்னாங்க.
 ஆமா பாட்டிஅது எனக்கும் தெரியும் . நான் அதற்கு முயற்சி செய்யலாம்னு நினைக்கிறேன் என்றாள். ரீமா.
 ஓ க்கே ஆல் த பெஸ்ட் என்று பாட்டி மனது நிறையா வாழ்த்தினாள். ரீமாவுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள் கேட்டு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.

 சரி பாட்டி முத்ல்ல உங்க கிட்டேந்தே விஷயங்கள் முதலில் தெரிந்து கொள்கிறேன்.சொல்லுங்க. நீங்க ஏன் கழுத்திலோ கையிலோ காதிலோ நகை ஏதுமே போட்டுக்கமாட்டீங்கறீங்க? நகை பிடிக்காதா உங்களுக்கு? என்றாள்.
 எனக்கா நகை பிடிக்காது? ரொம்ப, ரொம்ப பிடிக்கும், உன் தாத்தாவும் என் ஆசையைப்புரிந்து கொண்டு ஆசை ஆசையா புதுசு புதுசா நகை கள் வாங்கித்தருவாங்க. கழுத்து நிறைய சங்கிலி, கை நிறைய வளையல்கள்  விரல் களில் மோதிரங்கள் காதில் வைரக்கம்மல் என்று எல்லாம் போட்டுக்கொண்டிருந்தேன்மா. என்று பாட்டி சொல்லவும்,
 அப்போ அதெல்லாம் இப்ப எங்க? என்ற பேத்தியிடம்
 அது ஒரு பெரிய கதைமா என்றாள் பாட்டி.
 ஓ ப்ளாஷ்பேக்கா. சொல்லு சொல்லு என்று ஆவலுடன் ரீமா கேட்கவும் பாட்டி பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

 நீ பிறக்கும் முன்பு நடந்த நிகழ்ச்சிம்மா. உன் அம்மா பிரசவத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தா. உன் அப்பாவும் நானும் மட்டும்தானே வீட்டில். உன் அப்பா மத்திய அரசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். காலை 7.30-க்கு வீட்டைவிட்டு கிளம்பி போனா இரவு 7-மணிக்கு திரும்பி வருவான். அவனுக்கு காலை உணவு  மதிய உணவு எல்லாம் ரெடி பண்ண நான் காலை 5 மணிக்கே எழுந்து டிபன் லஞ்ச் எல்லாம் செய்து கொடுப்பேன். தினசரியுமே காலேல 5.30-க்கு பால் பூத் போயி பால் வாங்கி வந்துடுவேன். உன் அப்பா கூட சொல்லுவான். நீ ஏம்மா பால் வாங்கப்போறே? நான் போயி வாங்கி வருவேனே என்று. அலுத்து சலித்து வரும் மகன் அடிச்சுப்போட்டாப்ல தூங்கும் போது எழுப்ப மன்சே வராது. அதுவும் இல்லாம எனக்கு நகை களுக்கு பிறகு மிகவும்பிடித்தவிஷயம் காப்பி.காலை ஃப்ரெஷ் பாலில் ஃப்ரெஷ் டிகாக்‌ஷன் கலந்து காப்பி குடிக்க ரொம்பவே பிடிக்கும். அதுவும் இல்லாம எனக்கு மார்னிங்க் வாக்கிங்க் போனது போலவும்  இருக்குமில்லியா ? அதான் நானே போய் வந்துடுவேன். ரொம்ப தூரமெல்லாம் இல்லே. நடந்து போகும் தூரத்தில்தான் பூத் இருந்தது. முன்னேல்லாம்  பால் பாட்டில்களில் வந்தது. பால் கார்ட், பாட்டில்கள் எடுத்துகொண்டு பூத் போயி வர அரைமணி நேரம் கூட ஆகாது.

 நீ பிறந்த செய்தி வந்ததும் உன் அப்பா என்னிடம் அருமையா பேத்தி பொறந்திருக்கா. உன்கிட்டேந்து ஒரு பவுன் நகையைத்தா. குழந்தைக்கு இடுப்புக்கு அரஞாண், வளை, மோதிரம் பண்ணிண்டு குழந்தையை பாத்துட்டு வரலாம்னு சொன்னான். அப்பவும் கூட நான் என் நகையை கழட்டிக்
கொடுக்கலே. நீ குழந்தைக்கு புதுசாவே வாங்கிக்கோன்னு சொன்னேன்.
அப்படி ஒரு நாள் பால் வாங்கப்போகும் போது டயம் சரியா பாக்காம ரொம்ப சீக்கிரமே போயிட்டேன் போல இருக்கு. பௌர்ணமி நிலாவின் வெளிச்சம் ஊர் பூராவும்  லைட்டு போட்டது போல இருந்தது.எப்பவுமே மெயின் ரோடு வழியா சுத்திகிட்டுதான் போவேன். அன்று என்னமோ தோணித்து, ஒரு முட்டுசந்து வழியா போயிட்டேன். கொஞ்ச தூரம்தான் போயிருப்பேன் பின்னாடிலேந்து யாரோ மண்டையில் ஏதோ கனமான பொருளால ஓங்கி அடிச்சது மட்டும்தான் நினைவில் இருக்கு. வேர எதுவுமே நினைவில் இல்லே.அப்படி அடிச்சவன் என் நகை ஒன்னு விடாம கழட்டிண்டு என்னையும் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் உருட்டி விட்டுட்டு போயிட்டான்.இது ஒன்னுமே எனக்குத்தெரியாம மயங்கிட்டேன்.

அச்சச்சோ,  அப்புறம் என்னாச்சு பாட்டி, என்னமோ திரில்லிங்க் ஸ்டோரிகேக்குரா மாதிரி இருக்கு, சொல்லு, சொல்லு என்று பேத்தி அவசரப்படுத்தவும், இருடி சொல்லிகிட்டேதானே வரேன்.
                                                                                                                          (தொடரும்.)
read more " தங்கமே தங்கம். (1)"

Sunday 13 January 2013

பொங்கல்&ஃப்ரூட் சாலட்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
நிறைய பேரு பொங்கலும் வடையும் எப்படி செய்யுறதுன்னு பதிவு
               
 போட்டிருப்பங்க. நான் கொஞ்சம் மாத்தி யோசித்தேன். ஹ ஹ ஹ
பண்டிகை தினங்களில் தானே பலவகைப்பழங்கள் வாங்குவோம்
 இல்லியா? அதை வைத்து ஃப்ரூட் சாலட் செய்தேன். ஆமா எனக்கு
ஒரு டௌட்டு. ஃப்ரூட் சாலட்னு சொல்லனுமா? ஃப்ரூட் ஸலாட்னு
சொல்லணுமா. சரி உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே வச்சுக்
கோங்க. எப்படி சொன்னாலும் அதன் சுவை அப்படியே தானே இருக்கப்போவுது.

தேவையானவை
ஆரஞ்சுப்பழம்------------------- ஒன்று
ஆப்பிள்பழம்--------------------  ஒன்று.
வாழைப்பழம்------------------- மூன்று.
மாதுளம்பழம்------------------  ஒருகப்.
(உரித்த முத்துக்கள்)
மாம்பழம்-----------------------  ஒன்று.
(சீசனில்மட்டும்)
திராட்சைப்பழம்--------------  ஒரு கப்
கருப்பு திராட்சை-----------  ஒருகப்
சப்போட்டா பழம்----------- இரண்டு
 ஜீனி--------------------------  ஒரு கப்
 மில்க்மெயிட்-------------  இரண்டு கரண்டி
எவரெஸ்ட் மில்க் மசாலா பவுடர்----   இரண்டு ஸ்பூன்

செய் முறை
 எல்லா பழங்களையும் கழுவி சுத்தம் செய்து  தோல் நீக்கி கொட்டை நீக்கி சிறு
                           
துண்டுகளாக கட் செய்து ஒரு பாத்திரத்தில் போடவும்.மில்க் மசாலா பொடி,
                     
மில்க் மெயிட்பால்,ஜீனி சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கூல், கூலாக
                         
பறிமாறவும்.இதையே கஸ்டர்ட் சேர்த்து செய்து கொடுத்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். அதற்கு ஒருகப் பாலில் இரண்டுஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
                       
போட்டு நன்கு கூழாகும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். அது நன்கு ஆறியபிறகு ஆறியபால் அரை லிட்டர் வரையும் விட்டு மேலாக பழங்களையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.
                      
read more "பொங்கல்&ஃப்ரூட் சாலட்."

Friday 11 January 2013

பாடும் ரேடியோ.

எங்க அம்மவின் ஊரில் ஒரு வயசான பாட்டிம்மா இருந்தாங்க. அவங்களுக்கு பழைய சினிமா பாடல் களை எழுதி வைத்துக்கொள்வதில் தனி விருப்பம். அவங்க நோட்புக் காட்டினாங்க. சுமாரா 50, 60 வருஷங்களுக்கு முன் வந்த
பழைய படங்களின் பாடல்கள் இருந்தது, என்ன படம்,   யாரு    பாடி இருக்காங்கன்னு எந்த தகவலும் இல்லே. இப்ப நான் பகிர்ந்துகொள்ளும் பாடல் அவங்க கிராமத்தில் முதல் முதலாக மின்சாரம் வந்தப்போ ஏதோஒரு
படத்தில் வந்தபாடல் பொருத்த்மா இருந்திச்சாம். ரொம்ப வேடிக்கையான பாடலாக இருந்தது. அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

பாடும் ரேடியோ  பட்டனைத்தட்டி விட்டால் பாடும் ரேடியோ.
பல தேசப்பாட்டை இங்கே படித்துக்கொண்டே கேட்க்கலாம்
பாடும் ரேடியோ. பம்பாய், கொல்கட்டா, மதராஸ், டெல்லி.
பச்சைத்தண்ணிக்குள்ளே ஹீட்டர் வச்சதும் வென்னீ வரும்
 காப்பி பொடியைப்போட்டு 10- நிமிஷம் கழிச்சு பார். காப்பியா
டீயா கோக்கோவா? கம கம வென வாசம் வீசும்காபி சொகுசாய்
கரண்டுனுடைய மகிமை சொன்னால் கடவுளுக்கும் மேலே,
காணாத பொருளை எல்லாம் காட்டும் கண் முன்னாலேகரண்டுனுடைய
மகிமையினாலே. குழாயை திருப்பிவிட்டால் கொட்டுது வாட்டர்.  குடம்
தூக்கும் வேலை இல்லே  தீர்ந்தது மேட்டர். இதைத்தொட்டால் ஹாட் வாட்டர்
 அதைத்தொட்டால் கூல் வாட்டர், இது  வென்னி, அது தண்ணி.
கம கமவென, குளு, குளுவென மழை பொழியும் ஷவர்பாத்
ரொட்டி கேக்கை வெட்டிப்பார்   பாலாடை, பசு வெண்ணை, பழமெல்லாம்
எடுத்து பாடம் பண்ணி கை படாமல் டப்பாவில் அடைத்து, பலதேசம்
 நமக்கென்று அனுப்பி வைக்கும்   டின்னு.,டின்னாய் அனுப்பி வைக்கும் சீமை
எங்களுக்கில்லை.இந்த தேசம் விளையா விட்டாலும் கவலை எங்களுக்கில்லை.இது வே மருந்து அலமாரி. தலவலிக்கொரு மாத்திரை, இருமலுக்கொரு மாத்திரை விடியக்கால நேரத்திலே விட்டமின்னு மாத்திர
சாயங்கால நேரத்துலெ வலுவுள்ள மாத்திரே,எல்லாத்துக்கும் மேலிருக்குது
விட்டாமீனு ஏ மாத்திட்ரே, விட்டமீனு மாத்திரே.

இப்படி இந்தப்பாட்டு நீளமாக போய்க்கொண்டே இருக்கிறது. பதிவு
 பெரிசாகிடுமோன்னு பாதியிலேயே நிறுத்திக்கறேன்.

இது போல நிறைய பாட்டுக்கள் எழுதி வச்சிருக்காங்க. அதில் இன்னொரு பாட்டும் மிக ரசனையுடன் இருந்தது. நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்,எஸ் ,கிருஷ்ணனும், அவர் மனைவி மதுரம் அவர்களும் பாடுவதுபோல ஒருபாடல்   குடிச்சு  பழகணும், எல்லோரும் குடிச்சுப்பழகணும், காலையில் பல் தேய்த்தவுடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப்பழகணும் என்று பாடல் ஆரம்ப வரிகள். இப்படி பழையபாடல்கள் கருத்துள்ள வரிகளுடன் இருந்தது. ஒரே பதிவில் எல்லா பாடல்களையும் பதிவிட்டால் பதிவு நீளமாகி படிப்பவர்கள் அலுத்துக்கொள்ளும்படி போரடித்து விடுமே இல்லியா?ஸோ
ஒரு பாடல் பகிர்வுடன் அதுவும் பாதிப்பாடலுடனேயே நிறுத்திக்கொள்கிறேன்.
read more "பாடும் ரேடியோ."

Wednesday 9 January 2013

கும்பிடலாம் வாங்க.


கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு புக்கில் படித்த விஷயம். வெரி இண்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சி. அதான் உங்க எல்லாருடனும் ஷேர் பண்ணிக்குறேன்.


எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?

தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?

read more "கும்பிடலாம் வாங்க."

Monday 7 January 2013

கேளடி பெண்ணே.

ஒரு குடும்பததை சிறப்பாக வழி நடத்திச்செல்பவள் ஒரு பெண்தான்.
பிறந்தவீட்டில் பெற்றோருக்கு பெண்ணாக, புகுந்தவீட்டில் கணவனுக்கு
நல்ல மனைவியாக, பெரியவர்களை மதிக்கும் நற்பண்புகள் நிறைந்தவள்
 பெண்.குடும்பததையும் நல்லவிதமாக கவனித்துக்கொண்டு, வெளிவேலை
களையும் கவனித்துக்கொண்டுபாலன்ஸ்டாக சமாளிக்கும் திறமை இயற்கை
யிலேயே ஒரு பெண்ணுக்கு அமைந்து விடுகிறது.இவ்வளவு திறமைகளை
தனக்குள்ளே வைத்திருக்கும் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வதில்
மட்டும் சிறிது கவனக்குறைவாக இருக்கிறார்கள்.காலை 5-மணிக்கு எழுந்து
காலை உணவு, மதிய உணவு, சிறியவர்களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணுவது
அலுவலகம் செல்பவர்களுக்கு காலை, மதிய உணவு வகைகள், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பார்த்துப்
பார்த்து அவசர அவசரமாக செய்துவிட்டு, அவசரமாக அலுவலகம் செல்வதி
லேயே கவனமாக இருப்பார்கள்.

 அவர்களுக்கும் பசி இருக்கும் காலை அவசரத்தில் ஒரு வாய் அள்ளிப்போட்டுக்கொள்ளக்கூட நேரமில்லை என்று அவசரமாக  அலுவலகம் கிளம்புவார்கள். அலுவலகத்திலும் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். என்ன அவசரமானாலும் காலை உணவைத்தவிர்க்கவே கூடாது.ரெண்டு ப்ரெட் ஸ்லைஸ்,இல்லேனா ரெண்டு இட்லி இதுபோல ஏதானும் சாப்பிட்டு கிளம்பினால் சோர்வு இல்லாமல் தெம்பாக இருக்கும்.
இவ்வளவு உழைப்புக்கு உடலளவிலும் மனதளவிலும் தெம்பாக இருந்தால் தானே முடியும். தங்களையும் கவனித்துக்கொள்ள சிறிது பழக்கப்படுத்திக்கொள்ள்வேண்டும்.சாப்பாட்டு விஷயத்தில் மட்டுமில்லாமல்
எல்லா விஷயங்களிலுமேதிட்டமிட்டுசெயல்படபழக்கப்படுத்திக்கொள்ளலாம்
 எல்லாருக்குமே சொல்வது சுலபம்தான். அவரவர் நிலமையில் இருந்து பார்த்தாதானே தெரியும்னு சொல்வாங்க. கரெக்ட் தான்.

மறு நாளுக்கு தேவையான வற்றை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொண்டால் காலை நேர பர பரப்பிலிருந்து விடு படலாம்.அதாவது
காய் நறுக்கி வைப்பது, தேங்காய் துருவி ஃப்ரீசரில் வைப்பது, குழந்தைகளின் ட்ரெஸ்களை இரவே தயார் செய்து வைப்பது என்று சிறு, சிறு வேலைகளை இரவே செய்து வைத்துக்கொள்ளலாம்.அதுபோல தங்கள் உடல் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக்கொள்வது.மனதை எப்பவும் லேசாகவும் சந்தோஷ மாகவும் வைத்துக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளலாம். குளிர் காலங்களில் தோல் வறண்டு போகும். கொஞ்சமாக நல்லெண்ணையோ, தேங்காயெண்ணையோ ஒரு துளி தண்ணீர் சேர்த்து குழைத்து முகம் கழுத்துப்பகுதி கை கால் களில் தடவிக்கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும். வெயில் காலங்களில் பருத்தி உடையே சிறந்தது. லீவு நாட்களிலாவது  அரை மணி நேரம் காலை நேர வாக்கிங்க் போய்வரலாம். ஆபீசிலும் உக்காந்த இடத்திலேயே வேலை செய்ய வேண்டி இருக்கும். கொஞ்சமாவது நடைப்பயிற்சி இருந்தால் நல்லது தானே? வீட்டிலும் வேலைகள் செய்யும் போது இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டே வேலைகள் செய்தால் சோர்வு தெரியாது.

நம்மை நாமதான் கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டில் நம்மை நம்பி இருப்பவர்களை நாம் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நாம நன்றாக இருக்க வேண்டும் இல்லியா? தனக்கு பிடித்தமான புத்தகங்கள் படிப்பது பிடித்த இசை கேட்பது என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.  நம்ம கையில் தான் இருக்கிறது.எல்லாமே.சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் இல்லியா?
read more "கேளடி பெண்ணே."

Friday 4 January 2013

குழந்தை வளர்ப்பு.

பொதுவாக இன்று எல்லா வீடுகளிலுமே ஒன்று, அல்லது இரண்டு
குழந்தைகள் தான் இருக்கிறாங்க.பெற்றோர்களும் அந்தக்குழந்தை
களை வசதியாக சௌகரியமாக வளர்க்கவேண்டும் என்னும் அக்கரையில்
இருவருமே வேலைக்கு போயி சம்பாதிக்கிறார்கள்.இதில் தவறேதும் இல்லே.
விளையாடுவதற்கு அதிக விலையில் உள்ள பொம்மைகள், உடையிலும்
உசத்தி துணியில் எடுத்துக்கொடுக்கிறார்கள்.உசத்தி ஷூ, பெண்குழந்தை என்றால் தங்க வைர நகைகள் பூட்டி அழகு பார்க்க நினைக்கிறார்கள்.சில
வீடுகளில் குழந்தைகள் கேட்கும் முன்பே விளையாட்டுப்பொருட்களோ
வேறு எதுவுமோ வாங்கி குவிக்கிறார்கள்.3-வயதுக்குள்ளேயே ப்ளே ஸ்கூல்
 அதுவும் பிரபலமான ஸ்கூலில்தான் சேர்க்கணும் என்று நினைக்கிறார்கள்.
இதெல்லாமே  சரிதான்.பள்ளியில் சேர்க்கும் போதும் புகழ் பெற்ற பள்ளிகளில்
தான் சேர்க்க நினைக்கிறார்கள். ஃபீஸ் எவ்வளவு அதிகமானாலும் தயங்குவதே இல்லை.குழந்தைக்கு நல்ல படிப்பு கிடைக்கணும் என்று ஆசைப்
படுவதில் தவறேதும் இல்லை. நான் சொல்ல வருவது என்ன என்றால்

குழந்தைகளுக்கு வசதியையும் சௌகரியங்களையும் கொடுக்கணும் என்று
நினைக்கும் பெற்றோர் அந்தக்குழந்தை நல்ல பழக்கவழக்கங்களுடன் சிறந்த
குடிமகனாக வளறணும் என்றும் சிறிது முயற்சி செய்யணும்.3-வயதிலிருந்து
10- வயது வரை அந்தக்குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்போ பட்டுத்துணிகளின்,  அல்லது  தங்க நகைகளின் மதிப்பு பற்றியோ எந்த வித
அபிப்ராயமும் இருக்காது.விளையாட்டு பொம்மைகளும் கூட ஒருவாரம் விளையாடி மறு வாரம் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது பணம் விரயம் தானே?அப்போது பெற்றோர்தானே சிறிது கவனமாக இருந்து கொள்ளணும்?
குழந்தைப்பருவத்தில் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அம்மாவையே எதிர்
பார்ப்பாங்க . (நாமதான் குழந்தைகளை குழந்தைகளாகவே நடத்துவதில்லையே? ).சின்ன வயதில் புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்வதில் குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடையவர்களாகவே இருப்பார்கள். இதை பெற்றோர் நல்ல விதத்தில் பயன் படுத்திக்கோள்ளலாம்
எல்லா பள்ளிகளிலுமே சனி ஞாயிறு விடுமுறைதான். அந்த லீவு நாட்களில்
குழந்தைகளை சிறு, சிறு வேலைகளைச்செய்ய பயிற்றுவிக்கலாம்..

காலை எழும்போதே அவங்க, அவங்க படுக்கையை அவங்களே சுருட்டி வைக்க சொல்லலாம்.ப்ரெஷில் பேஸ்ட் எடுது தாங்களே பல் விளக்க சொல்லிக்கொடுக்கலாம்.மத்த நாட்களில் எல்லாவற்றுக்கும் அம்மா செய்வாங்கன்னு சும்மா இருக்கும் குழந்தைகள் தானே செய்து கொள்ளும்போது ஆர்வமுடன் செய்வார்கள்.தனியாக அவ்ர்களே அவர்கள்
உள்ளாடைகளை துவைத்து, குளித்து வரவும் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கலாம். முதலில் சிறிது முரண்டு பிடிப்பார்கள் தான். நாளாவட்டத்தில்
ஆர்வமுடன் தன் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் பழக்கம் கூடவே படிந்துவிடும்.சாப்பிட உக்காரும் போது அவங்க தட்டு, டம்ளரை அவங்களையே எடுத்து வச்சுக்கசொல்லி பழக்கலாம் சாப்பிட்டு முடிந்ததும் தட்டு டம்ளரை ஸிங்கில் கொண்டு போடச்சொல்லலாம்..கூடியமானவரை அவங்க வேலைகளை அவங்களே செய்து கொள்ளும்படி ஈசியா பழக்கிடலாம். இந்த வேலை ஆண்தான் செய்யனும், இந்த வேலை பெண்தான் செய்யணும் என்றெல்லாம்  பிரித்து பார்க்கவே வேண்டாம். எல்லா குழந்தைகளும் எல்லா வேலைகளும் தெரிந்து கொள்ள நாம் பழக்கலாம். இதுபோல இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதனால் சிறுவயதிலேயே பழக்கி விடுவதால் வளற், வளற எந்தவேலைக்கும்
யாரையும் எதிர் பார்க்காமல் அவர்களாகவே செய்து கொள்ளும் பழக்கம் தன்னால வந்துவிடும். இதனால் அந்தக்குழந்தைகளுக்கும் நல்லது, பெற்றோர்
களுக்கும் நல்லது.அதுபோல அதிக கட்டுப்பாடுகள் விதிக்காமல் கொஞ்சம் விட்டுபிடித்தும் அவர்கள் செயல்களை உற்சாகமும் ஊக்கமும் படுத்தலாம்.
பெரியவர்களைக்கண்டால் மறியாதையுடன் பழகசொல்லி சொல்லிக்கொடுக்கலாம்..எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலேன்னு பாட்டு கேட்டிருப்பீங்களே.பெற்றோர்களுக்கு பொறுமை மட்டும் இருந்தால் இதை கண்டிப்பாக சாதிக்கலாம். அவர்களின் வேலைப்பளுவில் எரிச்சலும் கோபமும் வரத்தான் செய்யும். குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறிது முயற்சி செய்துதான் ஆக்ணும் பொறுப்புள்ள பெற்றோர்.  சரி இறுதியக சின்ன ஜோக் ஒன்று சொல்லிவிட்டு
பதிவை  முடித்துக்கொள்கிறேன்.

ரெண்டு பசங்க 10- வயதிற்குள் இருக்கும். கம்ப்யூட்டர் முன்பு உக்காந்து கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தாங்க.ஒரு பையன் மற்றவனிடம் ஏய்
மௌஸுக்கும், ரேட்டுக்கும்(  RAT) என்னடா வித்தியாசம்னு கேக்குரான்.மற்றவனோ நீ என்னடா கிறுக்கனா? மௌஸ், ரேட் ரெண்டுக்குமே எலின்னுதானே அர்த்தம்
இதுல ஏதுடா வித்தியாசம்னு கேலியாக கேட்டான். இல்லடா ஒரு வித்தியாசம் இருக்கு. கொஞ்சம் யோசிச்சிப்பாருடான்னான்.அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சான். போடா எனக்கு ஒன்னும் தெரியல்லே, நீயே சொல்லிடுன்னான்.சரி (கம்ப்யூட்டர்)  மௌஸுக்கு (எலிக்கு) முன்பக்கம் வாலு, நிஜம் ரேட்டுக்கு(எலிக்கு) பின் பக்கம் வாலு இருக்கு. இது எப்படி இருக்குன்னு சொல்லவும் இருவரும் சேர்ந்து பெரிதாக சிரிக்க ஆரம்பித்தார்கள். நீங்களும் சிரிச்சீங்களா?
read more "குழந்தை வளர்ப்பு."

Wednesday 2 January 2013

தேங்காய் பால் பாயசம்.

என் முதல் பதிவை  இனிப்புடன் தொடங்கலாம்னு நினைத்தேன்
அதுக்காக எப்பவும் ரெசிப்பி மட்டும்தான் பதிவா போட்டு உங்களை
எல்லாம் கஷ்டப்படுத்துவேன்னு பயந்துடாதீங்க. எனக்கு சமையல்
 நினைவு இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்து கொள்வேன்.
அந்தமாதிரி சமயங்களில் மட்டும் இது போல எதானும் குறிப்பு போடுவேன்.
சரி எல்லாரும் பாயசம் சாப்பிட வாங்க.

தேவையான பொருட்கள்.

பச்சை அரிசி.....................................  ஒருகைப்பிடி அளவுக்கு
காய்ச்சி ஆறவைத்த பால்.............  200 மில்லி
வெல்லம் அல்லது கருப்பட்டி---------------  200 கிராம்
துருவிய தேங்காய்ப்பூ.................................  ஒருமூடி
முந்திரி, திராட்சை.................................................  10,  10
ஏலக்காய்ப்பொடி...........................................  ஒரு டீஸ்பூன்
                     
செய்முறை.
அரிசியை அரைமணி நேரம்  ஊறவைக்கவும்.  நன்கு ஊறியதும் அரிசி தேங்காய்த்துருவலை மிக்சியில் ரவை பக்குவத்தில் அரைத்துக் கொள்ளவும்
                       
அரைத்த விழுதை கூட ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில்
போட்டு அடுப்பை   சிம்மில் வைத்து கை வி டாமல் கிளறிக்கொடுக்கவும்.
சீக்கிரம் அடிப்பிடிக்கும் .  ஸோ கை விடாமல் அரிசி நன்கு வேகும் வரை
                           
கிளறவும். கருப்பட்டியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கரைய விட்டு கல்,
மண் போக நன்கு வடிகட்டிக்கொள்ளவும். அடுப்பில்
                           
கொதித்துக்கொண்டிருக்கும் கலவை நன்கு வெந்ததும் கருப்பட்டி கரைசலைச்
சேர்க்கவும். கருப்பட்டி வாசனை போகும் வரை கிளறவும். நன்கு சேர்த்து கொதித்ததும் கீழே இறக்கி ஆறிய பாலை விட்டு கலக்கவும்.ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சையை  வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்ப்பொடி தூவவும். சுவையான தேங்காய்ப்பால் பாயசம் ரெடி..
                                     
பொதுவாக இந்த பாயசம் வெல்லம் சேர்த்துதான் செய்வாங்க. வெல்லத்தை விட கருப்பட்டி உடல் நலனுக்கு நல்லது. அதனால ஒரு மறுதலுக்காக நான் கருப்பட்டி சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அதனாலதான் உங்க கூடவும் பகிர்ந்து கொள்கிறேன். 
read more "தேங்காய் பால் பாயசம்."